வாரம் ஒரு முறை ருசியான பச்சை பயறு சுக்கா இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

- Advertisement -

பச்சைபயிறு சாப்பிடுவதால் உடலுக்கு மிகவும் நல்லது இதில் புரதச்சத்து உள்ளது பச்சை பயிரை நீரில் 6 மணி நேரம் ஊரவைத்து பின் இரவில் வெள்ளை துணியில் அந்த பச்சை பயிரை போட்டு காற்று போகாதவாறு அந்த துணியில் இரவு முழுவதும் கட்டி வைத்து பின் காலையில் எடுத்து பார்த்தால் முலைப்பு வந்திருக்கும் அதனை சாப்பிட்டால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு சுவையான பச்சைப்பயறு கட்லெட் இப்படி செய்து பாருங்க!

- Advertisement -

எனவே இதனை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை சமைத்து சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும். அதிலும் அந்த பயறுகளில் பச்சை பயறு மிகவும் சுவையாக இருக்கும். இந்த பச்சை பயறு சுக்கா உங்கள் தினசரி டோஸ் முளைகளைப் பெற ஒரு சுவையான வழியாகும். ருசியும் நறுமணமும் கொண்டது, இது வேகவைத்த சாதம் மற்றும் நெய்யுடன் சாப்பிடுவது சிறந்தது , ஆனால் செட் தோசை அல்லது புல்காவுடன் பரிமாறலாம்.

Print
No ratings yet

பச்சை பயறு சுக்கா | Pasi Payaru Sukka Recie in Tamil

பச்சைபயிறு சாப்பிடுவதால் உடலுக்கு மிகவும் நல்லது இதில் புரதச்சத்து உள்ளது பச்சை பயிரை நீரில் 6 மணி நேரம் ஊரவைத்து பின் இரவில் வெள்ளை துணியில் அந்த பச்சை பயிரை போட்டு காற்று போகாதவாறு அந்த துணியில் இரவு முழுவதும் கட்டி வைத்து பின் காலையில் எடுத்து பார்த்தால் முலைப்பு வந்திருக்கும் அதனை சாப்பிட்டால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. பயறு வகைகள் உடலுக்கு மிகவும் சிறந்த ஒரு உணவுப் பொருள். ஏனெனில் பயறுகளில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. எனவே இதனை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை சமைத்து சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும்.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: Breakfast, LUNCH
Cuisine: Indian
Keyword: Sukka
Yield: 3 People
Calories: 188kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 கரண்டி
  • 1 மிக்ஸி
  • 1 இட்லி பாத்திரம்

தேவையான பொருட்கள்

  • 1 கப் பச்சை
  • 1/2 கப் துருவிய தேங்காய்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய் தூள்
  • 1/2 டீஸ்பூன் மல்லித்தூள்
  • 3/4 டீஸ்பூன் மிளகுத்தூள்
  • 1 நறுக்கிய
  • 6 பல் பூண்டு
  • 1 பச்சை மிளகாய்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு                              தேவையானஅளவு
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

செய்முறை

  • முதலில் பச்சை பயிரை 4 மணி நேரம் தண்ணீரில் ஊற விடவும்.
  • பிறகு தண்ணீரை வடி கட்டி பாசிப்பயறை ஒரு மிக்ஸியில் மாத்தி அத்துடன் தேங்காய், உப்பு, சீரகம் சேர்த்து அரைக்கவும், தண்ணி விடாமல் அரைக்கவும்.
  • பிறகு அரைத்த விழுதை அடுப்பில் இட்லி தட்டு வைத்து ஆவியில் 10 நிமிடம் வேக வைக்கவும், அது ஆறினதும் சின்ன தூண்டுகளாக வெட்டி வைக்கவும்.
  • பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, சீரகம், மிளகு சேர்க்கவும்.
  • அது வறுபட்டதும் அத்துடன் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிய பிறகு பூண்டு சேர்த்து, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • நன்கு வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லி தூள், மிளகு தூள், தேவையான உப்பு சேர்த்து கிளறி விடவும்.
  • பின்னர் கட் செய்து வைத்திருக்கும் பச்சை பயறு இட்லியை அத்துடன் சேர்த்து நன்றாக கலந்து கிளறி விடவும்.
  • மசாலா எல்லாம் ஒன்றாக சேர்ந்து கலந்து கலர் மாறி வரும்பொழுது கருவேப்பிலை தூவி நன்கு வதக்கி அடுப்பில் இருந்து எடுத்து வேறொரு பாத்திரத்துக்கு மாத்தி விடவும்.
  • அசைவ சுவையுடன் கூடிய சைவ பச்சை பயறு சுக்கா சுவைக்க தயார். அசைவ பிரியர்கள் செய்து சாப்பிட ஒரு சத்தான உணவு. சும்மாவே சாப்பிடலாம், சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம்.

Nutrition

Serving: 500g | Calories: 188kcal | Carbohydrates: 14.3g | Protein: 2.9g | Fat: 3.8g | Saturated Fat: 0.3g | Sodium: 542.7mg | Fiber: 2.8g | Sugar: 4.4g | Vitamin C: 13.4mg