Advertisement
சைவம்

வயிற்று வலி சரியாக இந்த பத்திய கஞ்சி செஞ்சு சாப்பிடுங்க!

Advertisement

வெயில் காலம் ஆரம்பிச்சிருச்சு அதனால இனிமேல் சூடுனால நிறைய பேருக்கு வயிறு வலி வயிறு புண்ணு இந்த மாதிரி எல்லாம் வரும். அதனால இந்த வெயில் காலத்துல எப்பவுமே நம்ம குளிர்ச்சியானதா சாப்பிட்டு நம்ம உடம்ப எப்பவுமே குளிர்ச்சியா வச்சுக்கணும் இல்ல அப்படின்னா இந்த வெயில் காலத்துக்கு நமக்கு வயிறு வலி சூட்டு கொப்பளம் வேர்க்குரு அப்படின்னு எக்கச்சக்கமான பிரச்சனைகள் வரும்.

இந்த சூட்டுனால வர வயிறு வலிய சரி பண்றதுக்கு நிறைய உணவுகள் இருக்கு அந்த வகையில் இன்னைக்கு நம்ம ரொம்ப வெயிட் குளிர்ச்சியான ஒரு சத்தான பத்திய கஞ்சி தான் பாக்க போறோம். இந்த பத்திய கஞ்சியை காலை உணவு மதிய உணவு எதுவா வேணாலும் எடுத்துக்கலாம். இந்த பத்திய கஞ்சியை நீங்க குடிச்சிட்டு வந்தீங்கன்னா உங்களுக்கு சூடுனால வரக்கூடிய வயிறு வலி வயிற்றுப்புண் அப்படின்னு எல்லாமே சரியாகிவிடும்.

Advertisement

மேலும் இந்த பத்திய கஞ்சி சாப்பிடுவதற்கும் ரொம்ப  ருசியா இருக்கும். இதுல மோர் கலந்து குடிக்கிறதால ரொம்ப குளிர்ச்சியா இருக்கும். ரொம்பவே ஆரோக்கியமான சத்தான இந்த பத்திய கஞ்சிய குழந்தைகள் இருந்தா பெரியவங்க வரைக்கும் யார் வேணும்னாலும் சாப்பிடலாம். இந்த வெயில் காலத்துல சாப்பிட்டா சளி இருமல் எதுவும் வராது. இப்ப வாங்க இந்த சூப்பரான ஆரோக்கியமான பத்திய கஞ்சி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்

பத்திய கஞ்சி | Pathiya Kanji Recipe In Tamil

Print Recipe
சூட்டுனால வர வயிறு வலிய சரி பண்றதுக்கு நிறைய உணவுகள் இருக்கு அந்த வகையில் இன்னைக்கு நம்ம ரொம்பவெயிட் குளிர்ச்சியான ஒரு
Advertisement
சத்தான பத்திய கஞ்சி தான் பாக்க போறோம். இந்த பத்திய கஞ்சியைகாலை உணவு மதிய உணவு எதுவா வேணாலும் எடுத்துக்கலாம். இந்த பத்திய கஞ்சியை நீங்க குடிச்சிட்டுவந்தீங்கன்னா உங்களுக்கு சூடுனால வரக்கூடிய வயிறு வலி வயிற்றுப்புண் அப்படின்னு எல்லாமேசரியாகிவிடும். இந்த பத்திய கஞ்சிய குழந்தைகள் இருந்தா பெரிய வங்க வரைக்கும் யார் வேணும்னாலும் சாப்பிடலாம். இந்த வெயில் காலத்துல சாப்பிட்டா சளி இருமல் எதுவும்வராது
Advertisement
Course Breakfast, dinner
Cuisine tamil nadu
Keyword Pathiya Kanji
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Total Time 15 minutes
Servings 4
Calories 350

Equipment

  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 1/4 கப் புழுங்கல் அரிசி
  • 3 டேபிள் ஸ்பூன் பாசிப் பயறு
  • 1 டீஸ்பூன் வெந்தயம்
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 பல் பூண்டு
  • 2 கப் மோர்
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • வெந்தயம் மற்றும் பாசிப்பயிரை ஒரு பாத்திரத்தில் சேர்த்து தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும்
     
  • புழுங்கல் அரிசியை கழுவி சுத்தம் செய்து குழைவாக வேக வைத்து எடுக்கவும்.
  • ஊற வைத்த பாசிப்பயறு மற்றும் வெந்தயத்தையும் நன்றாக குழைவாக வேக வைத்து எடுக்கவும்.
     
  • ஒரு பாத்திரத்தில் அரை கப் தண்ணீருடன் தட்டிய பூண்டு வெங்காயம் வேக வைத்துள்ள பாசிப்பயிறு வெந்தயம் உப்புசேர்த்து நன்றாக கலந்து விடவும்
  • அனைத்தும் சேர்ந்து வந்ததும் அதில் குறைவாக வேக வைத்த புழுங்கல் அரிசி சாதத்தையும் சேர்த்து நன்றாககிளறி பரிமாறினால் சுவையான பத்திய கஞ்சி தயார்

Nutrition

Serving: 500g | Calories: 350kcal | Carbohydrates: 13.4g | Protein: 6.7g | Fat: 1.7g | Potassium: 24mg | Vitamin A: 18IU | Vitamin C: 56mg | Calcium: 20mg | Iron: 1mg

இதனையும் படியுங்கள் : வித்தியாசமான சுவைல பழங்கஞ்சி செஞ்சு குடிங்க!

Advertisement
Ramya

Recent Posts

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

2 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

3 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

4 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

5 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

8 மணி நேரங்கள் ago

டீ பிரியர்கள், மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…

8 மணி நேரங்கள் ago