Home சைவம் வித்தியாசமான சுவைல பழங்கஞ்சி செஞ்சு குடிங்க!

வித்தியாசமான சுவைல பழங்கஞ்சி செஞ்சு குடிங்க!

பழங்கஞ்சி அப்படின்னு சொன்ன உடனே பழைய சாதம் அப்படின்னு நினைப்பீங்க. ஆனா இந்த பழங்கஞ்சி பழங்கள் எல்லாம் சேர்த்து பால்ல வேக வச்சு சாப்பிடக்கூடிய ஒரு சூப்பரான ஆரோக்கியமான ரெசிபி. இந்த வெயிலுக்கு ஒரு நாள் லஞ்ச்சா இந்த பழங்கஞ்சி செஞ்சு சாப்பிட்டு பாருங்க சாப்பிடுறதுக்கு இந்த வெயிலுக்கு ஏற்ற ஒரு உணவாக இருக்கும். இத சுட சுட சாப்பிடாம ஆற வைத்து சாப்பிட்டால் தான் அந்த பழங்களோட சேர்த்து சாப்பிடறப்ப ரொம்ப டேஸ்ட்டா இருக்கும்.

-விளம்பரம்-

முக்கியமாக குழந்தைகளுக்கு இந்த வெயில் காலத்துல இந்த மாதிரியான உணவுகளை செஞ்சு கொடுங்க அதுதான் அவங்க உடம்புக்கு ரொம்பவே ஆரோக்கியமானதா இருக்கும். எப்ப உன் ஒரே மாதிரியான உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்காமல் இப்போ லீவுல இருக்க குழந்தைகளுக்கு இந்த மாதிரி வித்தியாசமா ஏதாவது அப்பப்ப செஞ்சு கொடுங்க அப்பதான் அவங்களும் ஜாலியா சாப்பிட்டுட்டு இந்த லீவ என்ஜாய் பண்ணுவாங்க.

இந்த பழங்கஞ்சி சாப்பிடுவதற்கு ரொம்ப வித்தியாசமா சூப்பரா இருக்கும். நீங்க இதுவரைக்கும் இந்த மாதிரியான ஒரு ரெசிபி செஞ்சே சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க புதுமையான வித்தியாசமான அதே நேரத்தில் ரொம்பவே ஆரோக்கியமான இந்த பழங்கஞ்சி செஞ்சு சாப்பிட்டு பாருங்க இப்ப வாங்க இந்த சூப்பரான பழம் கஞ்சி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்

Print
No ratings yet

Pazhangkanji Recipe In Tamil

முக்கியமாக குழந்தைகளுக்கு இந்த வெயில் காலத்துல இந்த மாதிரியான உணவுகளை செஞ்சு கொடுங்க அதுதான்அவங்க உடம்புக்கு ரொம்பவே ஆரோக்கியமானதா இருக்கும். எப்ப உன் ஒரே மாதிரியான உணவுகளைகுழந்தைகளுக்கு கொடுக்காமல் இப்போ லீவுல இருக்க குழந்தைகளுக்கு இந்த மாதிரி வித்தியாசமாஏதாவது அப்பப்ப செஞ்சு கொடுங்க அப்பதான் அவங்களும் ஜாலியா சாப்பிட்டுட்டு இந்த லீவஎன்ஜாய் பண்ணுவாங்க. இந்த பழங்கஞ்சி சாப்பிடுவதற்கு ரொம்ப வித்தியாசமா சூப்பரா இருக்கும்.
Prep Time5 minutes
Active Time15 minutes
Total Time20 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: pazhangkanji
Yield: 4
Calories: 84kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கப் புழுங்கல்அரிசி
  • 2 கப் பால்
  • 1/2 கப் நாட்டு சர்க்கரை
  • 1 வாழைப்பழம்
  • 2 ஆப்பிள்

செய்முறை

  • புழுங்கல் அரிசியை கழுவி காயவைத்து ரவை பதத்திற்கு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்
  • அரைக்க வைத்துள்ளதை பால் உடன் சேர்த்து கலந்து கொள்ளவும் அதனுடன் நாட்டு சர்க்கரையும் சேர்த்து கொதிக்கவைக்கவும்
  • அரிசி வெந்து கஞ்சி பதத்திற்கு ஆனவுடன் இறக்கி அதில் நறுக்கிய ஆப்பிள் மசுத்த வாழைப்பழம் சேர்த்து பரிமாறினால் சுவையான பழக்கஞ்சி சத்தான முறையில் தயார்

Nutrition

Serving: 200g | Calories: 84kcal | Saturated Fat: 5.8g | Monounsaturated Fat: 6.6g | Vitamin A: 5.37IU | Calcium: 2.6mg

இதையும் படியுங்கள் : ஆரோக்கியம் நிறைந்த இந்த கோதுமை ரவை கஞ்சிய கொஞ்சம் சாப்பிட்டு பாருங்க!