மைதா ரவை கோதுமை ரவைனு எது கேட்டாலும் நம்ம ஞாபகத்துக்கு வருவது உப்புமா தான். என்னதான் உப்மாவுக்கு நிறைய எதிரிகள் இருந்தாலும் உப்புமாவையும் விரும்பி சாப்பிட நிறைய பேர் இருக்காங்க. நிறைய காய்கறிகள் எல்லாம் சேர்த்து சாப்பிடும்போது அந்த உப்புமா ஆரோக்கியமானதா மாறிடும். ஆனால் டயட்ல இருக்கவங்க வெயிட் லாஸ் பண்றவங்கன்னு எல்லாருமே மைதா ரவையை விட கோதுமை ரவை தான் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க.
அதுல எப்பவுமே கோதுமை ரவைய வச்சு ஒரே மாதிரி உப்புமா செஞ்சு சாப்பிட்டு போர் அடிச்சு போய் இருப்பாங்க அவங்களுக்காகவே இந்த கோதுமை ரவை கஞ்சி எப்படி செய்றதுன்னு நம்ம பாக்க போறோம். பொதுவா கோதுமை ரவை சாப்பிட்டால் உடம்பு குறையுமா அப்படின்னு சொல்லுவாங்க. அதனால ஏன் நிறைய பேர் இருந்த கோதுமை ரவை வாங்கி சாப்பிடுவாங்க. ஆனாலும் கூட இதுல உப்புமா செஞ்சு நிறைய பேரு வெறுத்தே போயிருப்பாங்க அவங்களுக்காகவே இந்த சுவையான கோதுமை ரவை கஞ்சிய பாக்கலாம் காலை உணவாகவும் எடுத்துக்கலாம் இல்லனா இரவு உணவாகவும் எடுத்துக்கலாம்.
முக்கியமா காலை உணவா எடுத்துகிறது ரொம்பவே நல்லது. இந்த கோதுமை ரவை கஞ்சி அவ்வளவு ஆரோக்கியமானதா இருக்கும். டயட்ல இருக்கவங்களும் வெயிட் லாஸ் பண்றவங்களும் மட்டும்தான் இதை சாப்பிடனுமா அப்படின்னு கேட்டா இல்ல யார் வேணும்னாலும் குழந்தைங்களிலிருந்து பெரியவங்க வரைக்கும் யார் வேணாலும் இந்த கோதுமை ரவை கஞ்சி செஞ்சு சாப்பிடலாம்.
இந்த கோதுமை ரவை கட்சிக்கு சைட் டிஷே தேவை இல்லை அந்த அளவுக்கு இது சுவையாக இருக்கும். இந்த ரவை கஞ்சிலையும் காய்கறிகள் எல்லாம் நம்ம சேர்த்து செய்றதால டேஸ்ட் ரொம்பவே அருமையா இருக்கும். தேங்காய் பாலும் சேர்த்து சுட சுட இந்த கஞ்சியை குடிக்கும் போது அவ்வளவு அருமையாக இருக்கும். இந்த ஆரோக்கியமான சுவையான கோதுமை ரவை கஞ்சி எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்
கோதுமை ரவை கஞ்சி | Wheat Rava Kanji Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/2 கப் கோதுமை ரவை
- 1 கப் தேங்காய் பால்
- 2 பச்சை மிளகாய்
- 4 பீன்ஸ்
- 2 கேரட்
- 3 டேபிள்ஸ்பூன் பச்சை பட்டாணி
- கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்க்காமல் கோதுமை ரவையை சேர்த்து வாசனை வரும் வரை நன்றாக வறுத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பீன்ஸ் கேரட் இரண்டையும் படிப்படியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
- பிறகு பச்சை மிளகாய் மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து வேக வைக்கவும்
- காய்கறிகள் பாதி அளவு வெந்ததும் கோதுமை ரவையை சேர்த்து கைவிடாமல் கிளற வேண்டும்.
- பிறகு தேங்காய் பால் சேர்த்து அனைத்தும் நன்றாக எந்த உடன் இறுதியாக கொத்தமல்லி இலைகளை சேர்த்து இறக்கினால் சுவையான கோதுமை ரவை கஞ்சி தயார்.
Nutrition
இதையும் படியுங்கள் : மாலையில் எதாவது சாப்பிட தோன்றினால் கோதுமை வெஜ் மோமோஸ் ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!