Advertisement
சைவம்

வீட்டில் முட்டைக்கோஸ் மற்றும் பட்டாணி உள்ளதா? அப்படியானால் அதை கொண்டு 15 நிமிடங்களில் சுவையான இந்த பட்டாணி முட்டைகோஸ் சாதம் செய்து பாருங்கள்!!

Advertisement

பொதுவாக முட்டைக்கோஸ் சாதம் என்றால் பலருக்கும் ஹோட்டலில் சாப்பிட தான் பிடிக்கும். ஏனென்றால் அதன் சுவையே தனி. வீட்டில் செய்தால் அந்த அளவுக்கு அதை பக்குவமாக செய்யமாட்டார்கள். ஆனால், இப்பதிவில் ஹோட்டல் சுவையில் பட்டாணி முட்டைக்கோஸ் சாதம் எப்படி செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம். நிறைய பேருக்கு முட்டைகோஸை வைத்து பொரியல் செய்து கொடுத்தால் பிடிக்காது. முட்டைகோஸ் என்றாலே நிறைய பேருக்கு பிடிக்காமல் போவதற்கு காரணம் அது வேகும் போது வரக்கூடிய வாசம் தான். சமைத்து முடித்த பின்பும், சில சமயம் அதில் ஒரு மாதிரியான வாடை வீசும். இது சில பேருக்கு சுத்தமாக பிடிக்காது. ஆனால் முட்டைகோஸை வைத்து இந்த கலவை சாதத்தை செய்தால் எந்த வாசமும் வராது. அட்டகாசமான சுவையில் இருக்கும்.

முட்டைக்கோஸ் சாதம் ஒரு எளிதான, விரைவான மற்றும் சுவையான மதிய உணவுப்பெட்டி செய்முறையாகும், இது அரிசியை ஊறவைத்தால் வெறும் 20 நிமிடங்களில் செய்யலாம். பாசுமதி அரிசி மற்றும் இத்தாலிய மூலிகைகளின் கலவையானது, இதன் சுவையை உயர்த்துகிறது மற்றும் உணவக பாணியில் ஃப்ரைட் ரைஸ் சுவையை அளிக்கிறது , ஆனால் எந்த சாஸ்களும் இல்லாமல் இந்த மிதமான மசாலா சாதம் அடிமையாக்கும் சுவைகளுடன் குழந்தைகளை கவர்கிறது. முட்டைகோஸில் உள்ள நார்ச்சத்து, செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தும். இன்று பட்டாணி முட்டைகோஸ் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

Advertisement

பட்டாணி முட்டைகோஸ் சாதம் | Pea Cabbage Sadam Recipe In Tamil

Print Recipe
பொதுவாக முட்டைக்கோஸ் சாதம் என்றால் பலருக்கும் ஹோட்டலில் சாப்பிட தான் பிடிக்கும். ஏனென்றால் அதன் சுவையே தனி. வீட்டில் செய்தால் அந்த அளவுக்கு அதை பக்குவமாக செய்யமாட்டார்கள். ஆனால், இப்பதிவில் ஹோட்டல் சுவையில் பட்டாணி முட்டைக்கோஸ் சாதம் எப்படி செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம். நிறைய பேருக்கு முட்டைகோஸை வைத்து பொரியல் செய்து கொடுத்தால் பிடிக்காது. முட்டைகோஸ் என்றாலே நிறைய பேருக்கு பிடிக்காமல் போவதற்கு காரணம் அது வேகும் போது வரக்கூடிய
Advertisement
வாசம் தான். சமைத்து முடித்த பின்பும், சில சமயம் அதில் ஒரு மாதிரியான வாடை வீசும். இது சில பேருக்கு சுத்தமாக பிடிக்காது. ஆனால் முட்டைகோஸை வைத்து இந்த கலவை சாதத்தை செய்தால் எந்த வாசமும் வராது.
Course LUNCH
Cuisine Indian
Keyword Pea Cabbage Sadam
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 People
Calories 42

Equipment

  • 1 பவுள்
  • 1 குக்கர்
  • 1 கடாய்

Ingredients

  • 1 கப் முட்டைக்கோஸ்
  • 1/2 கப் பச்சை பட்டாணி
  • 2 கப் சாதம்
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 டீஸ்பூன் நறுக்கிய இஞ்சி
  • 1 டீஸ்பூன் நறுக்கிய பூண்டு
  • 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • கொத்தமல்லி சிறிதளவு
  • வெங்காயத்தாள் சிறிதளவு

Instructions

  • முதலில் பச்சை பட்டாணியை குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து ஒரு விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும், பொடிதாக நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
  • அவை வதங்கியதும், வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு கண்ணாடி பதம் வந்ததும் நீளமாக வெட்டிய முட்டைகோஸ், வேக வைத்த‌ பட்டாணி சேர்த்து கிளறவும்.
  • பின் உப்பு மற்றும் சீரக தூள் சேர்த்து கிளறி, 5-7நிமிடங்களுக்கு எண்ணையிலேயே முட்டைகோஸை நன்றாக வேக வைக்கவும்.
  • முட்டைக்கோஸ் நன்றாக வெந்ததும், மிளகு தூள், மிளகாய்த்தூள் மற்றும் வேக வைத்து சாதம் சேர்த்து நன்றாக கலந்து இரண்டு நிமிடங்கள் வேக விடவும்.
  • இறுதியாக இதன்‌ மேல் சிறிது கொத்தமல்லி தழை, வெங்காயத்தாள் தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான, காரமான பட்டாணி முட்டைகோஸ் சாதம் ரெடி.

Nutrition

Serving: 350g | Calories: 42kcal | Carbohydrates: 5.2g | Protein: 6.9g | Fat: 3.2g | Sodium: 21mg | Potassium: 170mg | Fiber: 2.5g | Vitamin A: 98IU | Vitamin C: 136mg | Calcium: 40mg | Iron: 3.9mg

இதனையும் படியுங்கள் : தேங்காய் பால் சாதம் ருசியா இப்படி செய்து பாருங்க!

Advertisement
Prem Kumar

Recent Posts

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

34 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

4 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

15 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

17 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

1 நாள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

2 நாட்கள் ago