ரோட்டு கடை சுவையில் இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம், பிரட்டுக்கு ஏற்ற சுவையான வேர்க்கடலை சட்னி!!!

- Advertisement -

எப்பவுமே கடைகளில் விரும்பி சாப்பிடும் விஷயம் அப்படின்னு பார்த்தா இட்லி, தோசை, சப்பாத்தியா இருந்தா கூட எல்லாத்துக்குமே முக்கியமான விருப்பம் கடைகளில் சாப்பிடுவதற்கான காரணம் அதுக்கு வைக்கிற சைட் டிஷ் தான். சட்னி, சாம்பார், குருமா, சேர்வான்னு விதவிதமான சட்னிகள் விதவிதமான வித்தியாசமான சுவைகளில் ரொம்பவே  டேஸ்டா சாப்பிடுவதற்கு இருக்கும்.

-விளம்பரம்-

அதே மாதிரி சட்னியும் சாம்பார்களும் சைடு டிஷ் களும் வீட்டில் வேணும் அப்படின்னு கேட்கிற கணவன்மார்கள் அதிகமா இருப்பாங்க. அப்படி அவங்களுக்காகவே நம்ம இன்னைக்கு இந்த வேர்க்கடலை சட்னி எப்படி வைக்கிறதுன்னு தெரிஞ்சுக்க இருக்கோம். என்னதான் வீடுகளில் சட்னிகள் செய்தாலும் கடைகளில் கிடைக்கிற மாதிரியான சட்னி வீடுகளில் வேணும்னு கேட்டு எல்லாரும் சொல்லிக்கிட்டே இருப்பாங்க.

- Advertisement -

அந்த மாதிரி சுவையான வேர்கடலை சட்னி கடைகளில் எப்படி செய்வாங்களோ அதே போல் வீட்டில் செய்யலாம். இட்லி , தோசை , சப்பாத்தி இதெல்லாம் சுவையா இருப்பதற்கு காரணம் நாம தொட்டுக்கொள்ளும் சட்னி, சாம்பார் உடைய சுவைய பொருத்து தான் இருக்கும். அப்படி சுவையாக ரோட்டு கடைகளில் சாப்பிடும் போது இருக்கும் சுவை நமக்கு பல ஹோட்டல்களில் கிடைப்பதில்லை.

இன்று நாம் செய்ய போகும் சட்னி அதீத சுவையோட நாக்கில் சாப்பிட்டு முடித்த பிறகும் ஒட்டிட்டு இருக்க போகுது இந்த வேர்க்கடலை  சட்னி. இந்த சட்னியை இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் , பிரட்  இது கூட எல்லாம் சேர்த்து சாப்பிடலாம்.   அருமையான சுவையில் வயிறு நிறைய சாப்பிட்ட நிறைவு வரும். சரி இப்போ வேர்க்கடலை  சட்னி எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.

Print
3.34 from 3 votes

வேர்க்கடலை சட்னி | Peanut Chutney Recipe In Tamil

சுவையான வேர்கடலை சட்னி கடைகளில் எப்படி செய்வாங்களோ அதே போல் வீட்டில் செய்யலாம். இட்லி , தோசை , சப்பாத்திஇதெல்லாம் சுவையா இருப்பதற்கு காரணம் நாம தொட்டுக்கொள்ளும் சட்னி, சாம்பார் உடைய சுவையபொருத்து தான் இருக்கும். அப்படி சுவையாக ரோட்டு கடைகளில் சாப்பிடும் போது இருக்கும்சுவை நமக்கு பல ஹோட்டல்களில் கிடைப்பதில்லை. அருமையான சுவையில் வயிறு நிறைய சாப்பிட்ட நிறைவு வரும்.சரி இப்போ வேர்க்கடலை  சட்னி எப்படி செய்யலாம்என்று பார்ப்போம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, chutney
Cuisine: tamil nadu
Keyword: Peanut Chutney
Yield: 4
Calories: 245kcal

Equipment

 • 1 கடாய்

தேவையான பொருட்கள்

 • 1 1/2 ஸ்பூன்  வேர்க்கடலை
 • 1 1/2 ஸ்பூன்  கடலைப்பருப்பு
 • 1 பெரிய வெங்காயம்
 • 4 பல் பூண்டு
 • 10 காய்ந்த மிளகாய்
 • 3 காஷ்மீரி மிளகாய்
 • புளி சிறிதளவு
 • 1/2 ஸ்பூன் சீரகம்
 • 1/2 ஸ்பூன் உப்பு
 • 1/4 ஸ்பூன் பெருங்காயம்
 • 5 தேக்கரண்டி எண்ணெய்

தாளிக்க

 • 2 தேக்கரண்டி எண்ணெய்
 • 1 ஸ்பூன் கடுகு
 • 1 காய்ந்தமிளகாய்
 • கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை

 • அடுப்பை ஆன் செய்து அதில் ஒரு வானெலியை வைத்து வானெலி சூடானதும்  எண்ணெய் சேர்த்து அதில் கடலைப்பருப்பு, வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்
 •  
  பின் அதனுடன் காய்ந்த மிளகாய் நிறத்திற்காக காஷ்மீரி மிளகாய் சேர்த்து வறுத்து தனியாக எடுத்து  ஆற வைத்துகொள்ள வேண்டும்.
 • பின் அதே வானெலியில்  பூண்டு , வெங்காயம்  சேர்த்து கண்ணாடி போல் வதக்கவும் . பிறகு கறிவேப்பிலை, புளி , சீரகம்  சேர்த்து நன்றாக வதக்கவும்.
 • பின் உப்பு, பெருங்காயம் சேர்த்து  நன்றாக   வதக்கி பின் ஆற வைக்க வேண்டும். முதலில் மிக்ஸியில் கடலைப்பருப்பு , வேர்க்கடலை, காய்ந்த மிளகாய், காஷ்மீரி மிளகாய் இவற்றை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
 • பின் வதக்கி வைத்துள்ள  பூண்டு , வெங்காயம், புளி கலவையையும் சேர்த்து கொரகொரப்பாகஅரைத்து வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்ற வேண்டும்.
 •  ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி  கடுகு , காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த சட்னியில் கலந்து விட்டால் இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் , பிரட் ஏற்ற சுவையான வேர்க்கடலை  சட்னி தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 245kcal | Carbohydrates: 32g | Protein: 14g | Sodium: 232mg | Potassium: 235mg | Fiber: 1.4g | Vitamin A: 13IU | Calcium: 23.34mg