அடுத்த முறை சிக்கன் எடுத்தா கண்டிப்பாக இப்படி மிளகு சிக்கன் மசாலா செய்து பாருங்க! இதன் ருசியே தனி!

- Advertisement -

அசைவத்தில் எத்தனை வகை இருந்தாலும், குழந்தைகள் என்றுமே சிக்கன் உணவில் தான் அலாதி பிரியம் .ஹோட்டல்களுக்கு அல்லது ரெஸ்டாரன்ட்களுக்கு சென்றால், சிக்கன் வகையை தான் முதலில் கேட்பார்கள். அப்படி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் சிக்கன் ரெசிபி தான் இது.  மிளகு சிக்கன் மசாலா பார்ப்பதற்கு கண்களை பறிப்பது மட்டுமின்றி, அட்டகாசமான சுவையிலும் நாவை சுண்டி இழுக்கும். இந்த கிரேவி இட்லி, தோசை, சப்பாத்தி ,நாண்  போன்ற அனைத்திற்கும் ஏற்ற இணை உணவாக இருக்கும். வாங்க நேரத்தை கடத்தாம இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

-விளம்பரம்-
Print
1 from 1 vote

மிளகு சிக்கன் மசாலா | Pepper Chicken Gravy Recipe In Tamil

அசைவத்தில் எத்தனை வகை இருந்தாலும் குழந்தைகளுக்கு என்றுமே சிக்கன் உணவில் தான் அலாதி பிரியம் . ஹோட்டல்களுக்கும் அல்லது ரெஸ்டாரன்ட்களுக்கு சென்றால் சிக்கன் வகையை தான் முதலில் கேட்பார்கள். அப்படி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் சிக்கன் ரெசிபி தான் இது.  மிளகு சிக்கன் மசாலா பார்ப்பதற்கு கண்களை பறிப்பது மட்டுமின்றி, அட்டகாசமான சுவையிலும் நாவை சுண்டி இழுக்கும். இந்த கிரேவி இட்லி, தோசை, சப்பாத்தி ,நாண்  போன்றஅனைத்திற்கும் ஏற்ற இணை உணவாக இருக்கும். வாங்க நேரத்தை கடத்தாம இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Gravy, Side Dish
Cuisine: tamilnadu
Keyword: Pepper Chicken Gravy
Calories: 0.263kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 2 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கிலோ சிக்கன்
  • 2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவையானஅளவு .
  • 6 சொட்டு எலுமிச்சை சாறு
  • 2 டீஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 2 பட்டை
  • 4 லவங்கம்
  • 2 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • கறிவேப்பிலை  சிறிது
  • 1 தக்காளி பொடியாக நறுக்கியது
  • கொத்தமல்லி சிறிது

செய்முறை

  • முதலில் சிக்கனில் மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது மஞ்சள் தூள் , உப்பு தேவையான அளவு ,எலுமிச்சம் சாறு சேர்த்து, மசாலா சிக்கனில் சேரும் வரை நன்கு கையால் கலந்து மூடி போட்டு தனியாக எடுத்து ஊற வைக்கவும்.
  • பின்னர் ஸ்டவ்வில் ஒரு கடாயை வைத்து சூடானதும் மிளகு, சீரகம், சோம்பு சேர்த்து வறுக்கவும்.வறுபட்டதும் ஆறியவுடன் பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
  • பின்னர், மற்றுமொரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, லவங்கம்,  வெங்காயத்தை சேர்த்து உப்பு சேர்த்து வதக்கவும், பின்னர் கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • தக்காளியைசேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியவுடன் சிக்கனை சேர்த்து கிளறி விடவும். இரண்டு நிமிடம் கிளறிய பின், நாம் அரைத்து வைத்த மிளகு, சீரக பொடியை சேர்க்கவும். பின்னர் ஒரு மூடி போட்டு ஒரு ஐந்து நிமிடம் மூடி வைக்கவும். கடைசியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறவும். சுவையான மிளகு சிக்கன் மசாலா தயார்.

செய்முறை வீடியோ

Nutrition

Serving: 100g | Calories: 0.263kcal | Carbohydrates: 6.1g | Protein: 31g | Fat: 12g | Cholesterol: 135mg | Sodium: 132mg | Potassium: 432mg
- Advertisement -