சுட சுட ருசியான மிளகு சீரக சாதம் ஒரு முறை இப்படி செய்து கொடுங்க! ஒரு பிடி சாதம் கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவார்கள்!

தினமும் குழம்பு, சாதம், சாம்பார், ரசம் என்று ஒரே மாதிரி சாப்பிடுவதை விட கொஞ்சம் வித்தியாசமாக சமைத்து தான் பார்ப்போமே. மிளகு சீரகத்தை வைத்து சீரக சாதம் ரொம்ப ரொம்ப ஈஸியா 10 நிமிஷத்துல, குக்கரில் 2 விசில் வைத்து செய்வது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து க

By Prem Kumar · 15/12/2023

தினமும் குழம்பு, சாதம், சாம்பார், ரசம் என்று ஒரே மாதிரி சாப்பிடுவதை விட கொஞ்சம் வித்தியாசமாக சமைத்து தான் பார்ப்போமே. மிளகு சீரகத்தை வைத்து சீரக சாதம் ரொம்ப ரொம்ப ஈஸியா 10 நிமிஷத்துல, குக்கரில் 2 விசில் வைத்து செய்வது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த மிளகு சீரக சாதம் செஞ்சிட்டு சைடிஷா ஒரு நல்ல கிரேவியை வச்சுக்கலாம். இது குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ்க்கு ஏற்ற உணவாகும்.

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை எப்போதுமே பரபரப்பாகவே துவங்கும். இந்நிலையில் திங்கட்கிழமை மதியத்துக்கு எளிமையான முறையில், சீரக சாதம் செய்யலாம். அடிக்கடி மிளகை உணவில் சேர்த்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறுவார்கள். மிளகு சீரக சாதம் ஒரு ஈஸியான வகையில் செய்து முடிக்கக்கூடிய ஒரு சூப்பரான ரெசிபி. அதிலும் சீரகம் மிகவும் பிடிக்கும் என்பவர்கள், இந்த ரெசிபியை வீட்டில் செய்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். இதற்கு மஸ்ரூம் கிரேவி, சிக்கன் கிரேவி, பன்னீர் கிரேவி, மட்டன் கிரேவி, வெஜிடபிள் குருமா, எதனுடன் வேண்டுமென்றாலும் வைத்து சாப்பிடலாம்.

இப்போது அத்தகைய சுவையான மிளகு சீரக சாதத்தை எப்படி செய்யலாம் என்று தெரிந்துக் கொள்ளலாம். இந்த சாதம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. சளி பிடித்தவர்களுக்கு, குழந்தைகளுக்கும் இந்த சாதத்தை செய்து கொடுக்கலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவர்களுக்கு மதிய உணவாக இந்த சாதத்தை செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.

இதனையும் படியுங்கள் : ருசியான மாங்காய் தக்காளி சாதம் இப்படி ஒரு தரம் செய்து பாருங்களேன்! திரும்ப திரும்ப செய்து சாப்பிட தோன்றும்!

Recipes AMP · Quick view
View full