Home சைவம் அவல் டிக்கா இப்படி செஞ்சி பாருங்கள்!

அவல் டிக்கா இப்படி செஞ்சி பாருங்கள்!

ஒரு வித்தியாசமான, அதே சமயம் சத்தான ஒரு ரெசிபியை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் அவல் உள்ளதா? அந்த அவலை என்ன செய்வதென்று தெரியவில்லையா? அப்படியானால் அதைக் கொண்டு டிக்கா செய்யுங்கள். இந்த அவல் டிக்கா வழக்கமாக செய்யும் டிக்கா போல் இல்லாமல், சுவையாக விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். இந்த டிக்காவை வீட்டில் மாலை வேளையில் செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். டிக்கா பிரியர்கள் அதிக அளவில் நம் நாட்டில் இருக்கின்றனர். சிக்கன் ஃப்ரை இணையான ஒரு டிஷ் என்றால் அது டிக்கா மட்டும் தான்.

-விளம்பரம்-

ஹோட்டலுக்கு சென்றாலே பாதிப்பேர் எனக்கு டிக்கா வேணும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுகிறார்கள். அதை ஹோட்டலில் தான் சாப்பிட வேண்டுமா? இனி வீட்டிலேயே சுவையான அவல் டிக்கா எப்படி செய்வதென்று பார்ப்போமா. டிக்காவில் பல வகை உண்டு. அசைவ பிரியர்களுக்கு சிக்கன் டிக்கா பிடித்தமானவையாக இருக்கின்றன. சைவ பிரியர்களுக்கு மஸ்ரூம் மற்றும் பன்னீர் டிக்கா தான் டாப் சாய்ஸாக உள்ளது. உண்மையில் இந்த அவல் டிக்கா மிகவும் சுவையாக இருக்கும். வீட்டில் சமைப்பதும் மிகவும் எளிது. ஒருமுறை செய்து சாப்பிட்டால், மீண்டும் மீண்டும் சமைக்க வைக்கும். குழந்தைகளுக்கும் இது மிகவும் பிடிக்கும். எப்போது பார்த்தாலும் அவல் சேமியா, அவல் உப்புமா என்று செய்து அலுத்துப் போன நேரத்தில் வாரத்தில் ஒரு நாள் இப்படி அவல் டிக்கா செய்து சாப்பிடலாம்.

Print
1 from 1 vote

அவல் டிக்கா | Poha Tikka Recipe In Tamil

ஒரு வித்தியாசமான, அதே சமயம் சத்தான ஒரு ரெசிபியை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் அவல் உள்ளதா? அந்த அவலை என்ன செய்வதென்று தெரியவில்லையா? அப்படியானால் அதைக் கொண்டு டிக்கா செய்யுங்கள். இந்த அவல் டிக்கா வழக்கமாக செய்யும் டிக்கா போல் இல்லாமல், சுவையாக விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். இந்த டிக்காவை வீட்டில் மாலை வேளையில் செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். உண்மையில் இந்த அவல் டிக்கா மிகவும் சுவையாக இருக்கும். வீட்டில் சமைப்பதும் மிகவும் எளிது. ஒருமுறை செய்து சாப்பிட்டால், மீண்டும் மீண்டும் சமைக்க வைக்கும். குழந்தைகளுக்கும் இது மிகவும் பிடிக்கும்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: evening
Cuisine: Indian
Keyword: Poha Tikka
Yield: 2 People
Calories: 272kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 இட்லி பாத்திரம்
  • 1 தோசை கல்

தேவையான பொருட்கள்

  • 1 கப் அவல்
  • 1/2 கப் ரவை
  • 1/2 கப் தயிர்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் தனியா தூள்
  • 1 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • உப்பு தேவையான அளவு
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 குடைமிளகாய்

செய்முறை

  • முதலில் ஒரு பாத்திரத்தில் அவல், ரவை, உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • பின் சிறிதளவு கெட்டி தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அதன்பிறகு சிறிதளவு தண்ணீர் விட்டு அரை மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
  • பின் இட்லி பாத்திரத்தில் எண்ணெய் தடவி இந்த அவலை வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் தயார் செய்து வைத்துள்ள அவலை ஒரு பவுளில் சேர்த்து நன்கு பிசைந்து சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் தயிர், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, அவல், குடைமிளகாய், வெங்காயத்தை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • பின் டிக்கா செய்யக்கூடிய குச்சியை எடுத்து அதில் முதலில் குடை மிளகாயையும் பிறகு வெங்காயத்தையும் பிறகு அவல் துண்டுகளையும் ஒவ்வொன்றாக மாற்றி மாற்றி சொருகி வைக்கவும்.
  • பின் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் விட்டு நாம் செய்த டிக்காவை அதில் சேர்த்து வேகவிட்டு எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான அவல் டிக்கா தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 272kcal | Carbohydrates: 4.3g | Protein: 5.5g | Fat: 2.8g | Saturated Fat: 1.7g | Sodium: 40mg | Potassium: 263mg | Fiber: 4.3g | Vitamin A: 51IU | Vitamin C: 46mg | Calcium: 20mg | Iron: 6mg

இதனையும் படியுங்கள் : வீட்ல அவல்  இருந்தா ஒரு தடவை இந்த அவல் பர்பி செஞ்சு சாப்பிட்டு பாருங்க! பின் அடிக்கடி நீங்களே செய்வீங்க!