- Advertisement -
பொன்னாங்கண்ணி கீரையை கூட்டு ,பொரியலாக சமைத்து சாப்பிட வில்லை என்றாலும், பொன்னாங்கண்ணி கீரை போட்ட சாம்பாரை சாப்பிட்டாலாவது, கீரையின் சத்து, நம் உடலில் கொஞ்சம் சேரும். சுவையான, சுலபமான பொன்னாங்கண்ணி கீரை சாம்பார் எப்படி செய்வது என்பதைப்பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நம்முடைய சாம்பார் வைக்கும் முறையிலேயே, இந்த பொன்னாங்கண்ணி கீரை சாம்பார் வைக்க வேண்டும். சின்ன சின்ன குறிப்பை கடைபிடித்து சாம்பார் வைத்தீர்கள் என்றால், இதன் சுவை கொஞ்சம் அதிகமாகவே கூடும். பொன்னாங்கண்ணி சாம்பார் எப்படி செய்வது என்று பார்த்துவிடலாம்.
-விளம்பரம்-
பொன்னாங்கண்ணி கீரை சாம்பார் | Ponnankanni Sambar In Tamil
பொன்னாங்கண்ணி கீரையை கூட்டு ,பொரியலாக சமைத்து சாப்பிட வில்லை என்றாலும், பொன்னாங்கண்ணி கீரை போட்டசாம்பாரை சாப்பிட்டாலாவது, கீரையின் சத்து, நம் உடலில் கொஞ்சம் சேரும். சுவையான, சுலபமான பொன்னாங்கண்ணி கீரை சாம்பார் எப்படி செய்வது என்பதைப்பற்றித்தான் இந்த பதிவின் மூலம்தெரிந்து கொள்ளப் போகின்றோம். நம்முடைய சாம்பார் வைக்கும் முறையிலேயே, இந்த பொன்னாங்கண்ணிகீரை சாம்பார் வைக்க வேண்டும்.சின்ன சின்ன குறிப்பை கடைபிடித்து சாம்பார் வைத்தீர்கள் என்றால், இதன் சுவை கொஞ்சம்அதிகமாகவே கூடும். பொன்னாங்கண்ணி சாம்பார் எப்படி செய்வது என்று பார்த்துவிடலாம்.
Calories: 337kcal
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கட்டு கீரை
- 1 தேக்கரண்டி வடகம்
- 1 மேசைக்கரண்டி மிளகாய் தூள்
- 1/4 கப் துவரம் பருப்பு
- 2 பெரிய வெங்காயம்
- 1 மேசைக்கரண்டி எண்ணெய்
- 1/2 கப் தேங்காய்துருவல்
- 1 புளி எலுமிச்சை அளவு
- 1 மேசைக்கரண்டி உப்பு
செய்முறை
- கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த கீரை அலசி விட்டு போட்டு தண்ணீர் சேர்த்து அதில் நறுக்கின வெங்காயத்தை போட்டு வேக விடவும்.
- தேங்காயுடன் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும். புளியை கரைத்து 1 1/2 கப் அளவு புளிக்கரைச்சல் எடுத்துக் கொள்ளவும். துவரம் பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடகம் போட்டு வதக்கிய பிறகு கீரையை சேர்க்கவும். அதன் பின்னர் வேக வைத்த பருப்பை சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் தேங்காய் விழுது சேர்க்கவும்.
- கடைசியாக புளிக்கரைசல், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறி 3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி வைத்து விடவும். சுவையான ஆரோக்கியமான பொன்னாங்கண்ணி கீரை சாம்பார்
Nutrition
Serving: 200g | Calories: 337kcal | Carbohydrates: 12g | Protein: 167g | Saturated Fat: 1.7g | Sodium: 45mg | Potassium: 968mg | Fiber: 67g | Iron: 492mg
- Advertisement -