ருசியான பொ‌றித்த குழம்பு இப்படி ஒரு தரம் வீட்டில் செய்து பாருங்க! ஒரு சட்டி குழம்பும் காலியாகும்!

- Advertisement -

குழம்பு எத்தனை வகைகள் இருந்தாலும்,புளி சேர்த்தால் அது வழக்கம் போல் காரகுழம்பாகிவிடும். புளி இல்லாமல் காய்கறிகளைப் போட்டு வைக்கும் குழம்புதான் பொறித்த குழம்பு. எந்த காய் போட்டு குழம்பு வைத்தாலும் இந்த பொறித்த குழம்பு செய்யலாம் . இஞ்சி, பூண்டு விழுதாக சேர்த்து நன்கு கைப்பக்குவத்தில் செய்யும் இந்த பொறித்த குழம்புபை நீங்கள் ஒரு முறை ருசித்து விட்டால் போதும், இதன் பிறகு எந்த காய் இருந்தாலும் , கவலையே இல்லாமல்  இந்த பொறித்த குழம்பு தான் செய்யலாம் என்று ஞாபகத்திற்கு வரும் அந்த அளவிற்கு இதன் சுவை பிரமாதம் இருக்கும் இதோ அதற்கான செய்முறை பதிவு.

-விளம்பரம்-

ஒவ்வொரு நாளும் மதிய உணவிற்காக சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஒவ்வொருவிதமான குழம்புகள் செய்யப்படுகிறது. அனைவரது வீட்டிலும் பெரும்பாலும் சாம்பார், காரக்குழம்பு, புளிக்குழம்பு, கீரை குழம்பு, குருமா என மாற்றி மாற்றி செய்து வருகிறோம். இவற்றைத்தவிர கலவை சாதங்கள் செய்யப்படுகிறது. இவற்றில் கார குழம்பு என்று சென்னவுடன் பலருக்கும் சாதம் தொண்டையில் கூட இறங்காது. பலரும் காரக் குழம்பா? என்று சோகமாக கேட்பார்கள்.

- Advertisement -

அப்படி பலரும் வேண்டாம் என்று நினைக்கும் இந்த கார குழம்பை சற்று வித்தியாசமாக புளி சேர்க்காமல் இஞ்சி, பூண்டு – விழுதாக சேர்த்து குழம்பாக செய்து பாருங்கள்.  இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும். குழந்தைகளும் கூட இதனை விருப்பமாக சாப்பிடுவார்கள். இந்த பொறித்த குழம்பு  சாதத்துடன் சேர்த்து சாப்பிடும்பொழுது காரம் இல்லாமல் மிகவும் ருசியாகவும் இருக்கும். வாருங்கள் இந்த பொறித்த குழம்பை எவ்வாறு செய்வது என்பதை இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Print
4.34 from 3 votes

பொறித்த குழம்பு | Porittha Kulambu Recipe In Tamil

வீட்டிலும் பெரும்பாலும் சாம்பார், காரக்குழம்பு, புளிக்குழம்பு, கீரை குழம்பு, குருமா என மாற்றிமாற்றி செய்து வருகிறோம். இவற்றைத்தவிர கலவை சாதங்கள் செய்யப்படுகிறது. இவற்றில் காரகுழம்பு என்று சென்னவுடன் பலருக்கும் சாதம் தொண்டையில் கூட இறங்காது. பலரும் காரக்குழம்பா? என்று சோகமாக கேட்பார்கள். அப்படி பலரும் வேண்டாம் என்று நினைக்கும் இந்தகார குழம்பை சற்று வித்தியாசமாக புளி சேர்க்காமல் இஞ்சி, பூண்டு – விழுதாக சேர்த்துகுழம்பாக செய்து பாருங்கள்.  இதன் சுவை மிகவும்அருமையாக இருக்கும். குழந்தைகளும் கூட இதனை விருப்பமாக சாப்பிடுவார்கள். இந்த பொறித்தகுழம்பு  சாதத்துடன் சேர்த்து சாப்பிடும்பொழுதுகாரம் இல்லாமல் மிகவும் ருசியாகவும் இருக்கும். வாருங்கள் இந்த பொறித்த குழம்பை எவ்வாறுசெய்வது என்பதை இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Porittha Kulambu
Yield: 4
Calories: 125kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் உருளைக் கிழக்கு, முருங்கைக்காய், கத்திரிக்காய் ஏதேனும் ஒரு காய்கறி
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 டீஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுதாக
  • 2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவையானஅளவு

தாளிக்க

  • எண்ணெய்
  • கடுகு

செய்முறை

  • காயை நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளித்து வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது போட்டு, வதங்கியதும் காயைப்போட்டு வதக்கவும்.
  • பின்னர் தக்காளியைப் போட்டு வதக்கவும். எல்லாம் நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு போட்டு வதக்கவும்.
  • பின்னர் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கிளறி விடவும். கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து கொதிக்க விடவும்.
  • குழம்பு சுண்டியதும் இறக்கி சாதத்துடன் பரிமாறவும்.

Nutrition

Serving: 500g | Calories: 125kcal | Carbohydrates: 4.8g | Protein: 9g | Cholesterol: 9mg | Fiber: 2g | Sugar: 0.5g | Calcium: 36.6mg | Iron: 1.3mg