Home சைவம் தயிர் சாதத்துக்கு கூட வச்சு சாப்பிட ஒரு சூப்பரான உருளைக்கிழங்கு பீன்ஸ் வறுவல் எப்படி செய்வது...

தயிர் சாதத்துக்கு கூட வச்சு சாப்பிட ஒரு சூப்பரான உருளைக்கிழங்கு பீன்ஸ் வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்!

காய்கறிகளிலேயே எல்லாருக்கும் ரொம்ப புடிச்ச ஒன்னு தான் இந்த உருளைக்கிழங்கு. உருளைக்கிழங்கு பொரியல் செஞ்சு கொடுத்தா போதும் சோறு சாப்பிடாதவங்க கூட உருளைக்கிழங்கு சோறு மாதிரி சாப்பிடுவாங்க. சைடு டிஷ் இல்லன்னு சாப்பிடாம அடம் பிடிக்கிற குழந்தைகளும் இந்த உருளைக்கிழங்க பார்த்தா ஒரு கைசாதம் எக்ஸ்ட்ராவே சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு இந்த உருளைக்கிழங்கு வச்சு செய்ற எல்லா பொரியலும் செம அட்டகாசமான டேஸ்ட்ல கிடைக்கும்.

-விளம்பரம்-

ஒரே மாதிரியான உருளைக்கிழங்கு பொரியல் செஞ்சு சாப்பிடாம கொஞ்சம் வித்தியாசமா உருளைக்கிழங்கு பீன்ஸ் சேர்த்து செய்யக்கூடிய ஒரு பொரியல் பார்க்கலாம். மசாலாக்கள் எல்லாம் சேர்த்து செய்யக்கூடிய இந்த உருளைக்கிழங்கு பீன்ஸ் பொரியல் தயிர் சாதத்துக்கு செம அட்டகாசமான ஒரு சைடு டிஷ்ஷா இருக்கும். இந்த உருளைக்கிழங்கு எல்லாமே காலி ஆன பின்னாடி கூட அந்த உருளைக்கிழங்கு வறுத்த சட்டியில கொஞ்சம் சாதம் போட்டு பிசைந்து சாப்பிட்டால் அந்த டேஸ்ட்டுக்கு சொல்ல வார்த்தையே இல்லை அவ்வளவு சொர்க்கமா இருக்கும்.

நம்ம வீட்ல ஏதாவது விசேஷங்கள் வந்தா நம்ம உருளைக்கிழங்கு மசாலா தான் செய்வோம் ஆனா இவேல் அந்த மாதிரி செய்யாம ஒரு தடவை இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பா எல்லாருக்கும் இந்த பொரியல் ரொம்ப பிடிக்கும் கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. உங்க குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸ்க்கு ஏதாவது வெரைட்டி சாதங்களான தக்காளி சாதம் தயிர் சாதம், புளி சாதம் லெமன் சாதம் செஞ்சு கொடுக்கும்போது இந்த உருளைக்கிழங்கு பீன்ஸ் பொரியல் சேர்த்து செஞ்சு கொடுங்க ஈவினிங் அவங்க வீட்டுக்கு வரும்போது கண்டிப்பாக டிபன் பாக்ஸ் காலியாகி தான் வரும். இவ்வளவு ஒரு ருசியான இந்த உருளைக்கிழங்கு பீன்ஸ் பொரியல் எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.

Print
No ratings yet

உருளைக்கிழங்கு பீன்ஸ் வறுவல் | Potato Beans Fry

வீட்ல ஏதாவது விசேஷங்கள் வந்தா நம்ம உருளைக்கிழங்கு மசாலா தான் செய்வோம் ஆனா இவேல் அந்த மாதிரி செய்யாம ஒரு தடவை இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பா எல்லாருக்கும் இந்த பொரியல் ரொம்ப பிடிக்கும் கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. உங்க குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸ்க்கு ஏதாவது வெரைட்டி சாதங்களான தக்காளி சாதம் தயிர் சாதம், புளி சாதம் லெமன் சாதம் செஞ்சு கொடுக்கும்போது இந்த உருளைக்கிழங்கு பீன்ஸ் பொரியல் சேர்த்து செஞ்சு கொடுங்க ஈவினிங் அவங்க வீட்டுக்கு வரும்போது கண்டிப்பாக டிபன் பாக்ஸ் காலியாகி தான் வரும். இவ்வளவு ஒரு ருசியான இந்த உருளைக்கிழங்கு பீன்ஸ் பொரியல் எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Potato Beans Fry
Yield: 5
Calories: 240kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 100 கிராம் உருளைக் கிழங்கு
  • 100 கிராம் பீன்ஸ்
  • 1/4 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
  • 1/4 டீஸ்பூன் சீரகம்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • மல்லி இலைகள் சிறிதளவு
  • 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/4 டீஸ்பூன் கரம் மசாலா
  • 3/4 டீஸ்பூன் மல்லித்தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கை நீளவாக்கில் வெட்டி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு சீரகம் போட்டு தாளித்துக் கொள்ளவும்
  • பிறகு அதில் வெட்டி வைத்துள்ள பீன்ஸ் உருளைக்கிழங்கு சேர்த்து எண்ணெயிலேயே இரண்டு நிமிடங்களுக்கு நன்றாக வதக்கவும்
  • மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்
  • பிறகு தண்ணீர் நன்றாக வற்றியவுடன் மிளகாய் தூள் கரம் மசாலா மல்லி தூள் சேர்த்து கலந்து விடவும்
  • அனைத்தும் நன்றாக வெந்தவுடன் கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலைகள் சேர்த்து இருக்கிறான் சுவையான உருளைக்கிழங்கு பீன்ஸ் பொரியல் தயார்

Nutrition

Serving: 100g | Calories: 240kcal | Carbohydrates: 36g | Protein: 5.5g | Fat: 1g | Cholesterol: 2mg | Sodium: 21mg | Potassium: 104mg

இதையும் படியுங்கள் : ருசியான உருளைக்கிழங்கு கிரேவி டிஃப்ரண்டா ஒரு முறை இது மாதிரி செஞ்சு பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!