ருசியான உருளைக்கிழங்கு கிரேவி டிஃப்ரண்டா ஒரு முறை இது மாதிரி செஞ்சு பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!

- Advertisement -

பொதுவா நம்ம வீட்ல சப்பாத்தி பூரி போட்டா அதுக்கு காம்பினேஷனா சைட் டிஷ் நம்ம உருளைக்கிழங்கு கிரீம் வைப்போம் ஆனா எப்பவுமே நம்ம ஒரே மாதிரியான உருளைக்கிழங்கு கிரேவி செஞ்சு போர் அடிச்சு போயிருக்கும் அதனால கொஞ்சம் டிஃபரண்டா இந்த மாதிரி டேஸ்டான உருளைக்கிழங்கு கிரேவி செஞ்சு பாருங்க கண்டிப்பாக இரண்டு சப்பாத்தி சேர்த்தே சாப்பிடுவாங்க.

-விளம்பரம்-

ஒரு சில பேருக்கு சப்பாத்திக்கு தக்காளி தொக்கு வச்சு சாப்பிடுவதினால் ரொம்ப பிடிக்கும் ஒரு சில பேருக்கு சாம்பார் ஊத்தி சாப்பிடுவதனால் ரொம்ப பிடிக்கும் ஆனா நிறைய பேருக்கு உருளைக்கிழங்கு கிரேவி தான் பிடிக்கும் அதனால உங்க வீட்ல இருக்கறவங்களுக்கு கொஞ்சம் டிஃபரண்டா நல்ல டேஸ்டான இந்த உருளைக்கிழங்கு கிரேவி செஞ்சு கொடுங்க. சாப்டுட்டு கண்டிப்பா பாராட்டுவாங்க.

- Advertisement -

அதுமட்டுமில்லாம இத சப்பாத்தி பூரிக்கு மட்டும் தான் சாப்பிடணுமானு கேட்டா கண்டிப்பா கிடையாது இட்லி தோசை வெறும் சாதத்தில் கூட போட்டு பிசைந்து சாப்பிட்டால் டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும். ரொம்பவே சீக்கிரத்துல அட்டகாசமான ஒரு டேஸ்ட்ல செய்யக்கூடிய இந்த உருளைக்கிழங்கு கிரேவி உங்க வீட்ல எல்லாருக்கும் ஃபேவரட்டாவே மாறிடும். இப்ப வாங்க இந்த டேஸ்டான உருளைக்கிழங்கு கிரேவிய எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
5 from 1 vote

உருளைக்கிழங்கு கிரேவி | Potato Gravy Recipe In tamil

சில பேருக்கு சப்பாத்திக்கு தக்காளி தொக்கு வச்சு சாப்பிடுவதினால்ரொம்ப பிடிக்கும் ஒரு சில பேருக்கு சாம்பார் ஊத்தி சாப்பிடுவதனால் ரொம்ப பிடிக்கும்ஆனா நிறைய பேருக்கு உருளைக்கிழங்கு கிரேவி தான் பிடிக்கும் அதனால உங்க வீட்ல இருக்கறவங்களுக்குகொஞ்சம் டிஃபரண்டா நல்ல டேஸ்டான இந்த உருளைக்கிழங்கு கிரேவி செஞ்சு கொடுங்க. சாப்டுட்டுகண்டிப்பா பாராட்டுவாங்க.ரொம்பவே சீக்கிரத்துல அட்டகாசமான ஒரு டேஸ்ட்ல செய்யக்கூடியஇந்த உருளைக்கிழங்கு கிரேவி உங்க வீட்ல எல்லாருக்கும் ஃபேவரட்டாவே மாறிடும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Potato Gravy
Yield: 4
Calories: 240kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 உருளைக்கிழங்கு
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 2 டேபிள் ஸ்பூன் தயிர்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டீஸ்பூன் மல்லித் தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் சீரகத் தூள்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • 1/2 டீஸ்பூன் கடலைப்பருப்பு
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • 1 கொத்து கருவேப்பிலை

செய்முறை

  • ஒரு கிண்ணத்தில் தயிர் சேர்த்து அதனுடன் மிளகாய் தூள் மஞ்சள் தூள், மல்லித்தூள் சீரகத்தூள், உப்பு சேர்த்துகலந்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை கடலை பருப்பு போட்டு தாளித்துக்கொள்ளவும்.
  • பிறகு வெங்காயம் போட்டு நன்றாக வதக்கி கொள்ளவும் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனைபோகும் வரை வதக்கவும்
  • இரண்டும் நன்றாக வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • பிறகு உருளைக்கிழங்கை நறுக்கி அதனுடன் சேர்த்து நன்றாக வதக்கவும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து வைத்துள்ள தயிரையும் சேர்த்து உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் நன்றாக வேக வைத்து எடுத்தால் சுவையான உருளைக்கிழங்கு கிரேவி தயார்

Nutrition

Serving: 100g | Calories: 240kcal | Carbohydrates: 36g | Protein: 5.5g | Fat: 1g | Cholesterol: 2mg | Sodium: 21mg | Potassium: 104mg | Calcium: 16mg

இதையும் படியுங்கள் : மதுரை ஸ்டைல் உருளைக்கிழங்கு பொடிமாஸ்‌ இப்படி ஒரு முறை வீட்டில் செய்து பாருங்கள்!