- Advertisement -
கல்யாண பந்தியில் வைக்கப்படும் உருளைக்கிழங்கு மசாலாவிற்கு என்று தனி பிரியர்கள் இருப்பார்கள். அந்தவகையில் இதனை எவாறு சுவையாக சமைக்கலாம் என்று இப்பொழுது பாப்போம். இந்த உருளைக்கிழங்கு மசால் செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக
இதையும் படியுங்கள் : ருசியான கல்யாணவீட்டு வத்தல் குழம்பு இப்படி செய்து பாருங்க? இதன் சுவையே தனி தான்!
- Advertisement -
இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவாங்க. இதை சுலபமாகவும், குறைந்த நேரத்திலும் சுவையாகவும் வீட்டிலே செய்து விடலாம். இந்த உருளைக்கிழங்கு மசாலா எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
-விளம்பரம்-
உருளைக்கிழங்கு மசால் | Potato Masal Recipe In Tamil
கல்யாண பந்தியில் வைக்கப்படும் உருளைக்கிழங்கு மசாலாவிற்கு என்று தனி பிரியர்கள் இருப்பார்கள். அந்தவகையில் இதனை எவாறு சுவையாக சமைக்கலாம் என்று இப்பொழுது பாப்போம்.இந்த உருளைக்கிழங்கு மசால் செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவாங்க.இதை சுலபமாகவும், குறைந்த நேரத்திலும் சுவையாகவும் வீட்டிலே செய்து விடலாம். இந்த உருளைக்கிழங்கு மசாலா எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Yield: 4 people
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்:
- ¼ கிலோ உருளைக்கிழங்கு
- 4 பெரியவெங்காயம்
- 1 தக்காளி
- 2 பச்சைமிளகாய்
- 2 ஸ்பூன் பொட்டுக்கடலை
- 1 ஸ்பூன் சோம்பு
- 1 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் உளுந்து
- கறிவேப்பிலை சிறிதளவு
- ¼ ஸ்பூன் மஞ்சள் தூள்
- எண்ணெய் தேவையான அளவு
- கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை
செய்முறை:
- முதலில் பொட்டுக்கடலை, சோம்பு, பச்சைமிளகாய், அனைத்தையும், நன்கு சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும்.
- உருளைக்கிழங்கை குக்கரில் 4 விசில் விட்டு இறக்கி வைத்து சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.
- பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளி, சேர்த்து நன்கு சிவக்க வதக்கவும்.
- பின் அரைத்த பொட்டுக்கடலை கலவையை அதில் சேர்க்கவும்.
- பின் தேவையான அளவு உப்பு சேர்த்து, மஞ்சள் தூள், சேர்த்து நன்கு கொதிக்கும் போது உருளைக்கிழங்கை அதில் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
- பிறகு அதன் மேல் நறுக்கிய கொத்தமல்லி தழைகளை தூவி விடவும்.