கமகமனு ருசியான இறால் முருங்கைக்காய் கிரேவி இப்படி செய்து பாருங்க! ஒரு பருக்கை சாதம் கூட மிச்சமாகது!

- Advertisement -

இறால் எப்படி சமைத்துக் கொடுத்தாலும் குழந்தைகள்  சாப்பிடுவார்கள். இறால் வைத்து குழம்பு, வறுவல், இறால் 65, இறால் தொக்கு என பல உணவுகளை செய்து கொடுக்கலாம். அவ்வாறு இறால் வைத்து செய்யக்கூடிய ஒரு இறால் முருங்கைக்காய் கிரேவி தான் இப்போது பார்க்க போகிறோம். இதில் சேர்க்கப்படும் வெங்காயம், தக்காளி , முருங்கைக்காய் இவை இறாலுடன் சேர்க்கையில் ,அனைத்தும் மிகுந்த வாசனையுடன் சுவையாக இருக்கும். இறாலில் அதிக அளவு புரதமும், வைட்டமின் டி-யும் அடங்கியுள்ளது. …

-விளம்பரம்-

முருங்கைகாய் உணவின் வாசனைக்கே பசி எடுக்க ஆரம்பித்துவிடும். அந்த முருங்கைக்காயில் இறாலை சேர்த்தால் அவ்வளவு அருமையான மணம் இருக்கும். இறாலை முருங்கைகாயுடன் சேர்த்து செய்வதால் இறால் , முருங்கைகாயின் சத்து  சேர்த்து கிடைக்கப்பெறும்.

- Advertisement -

முருங்கைகாய் இறாலுடன் சேர்ப்பதால் இறாலின் வாசம் முருங்கைகாயில் சேர்ந்து முருங்கைகாய் சாப்பிடாதவர்கள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள்.  முருங்கைகாய் இறாலுடன் சேர்த்து செய்வதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் முருங்கைகாயின் சத்தும் குழந்தைகள் உடலுக்கு சேரும். வாருங்கள் இந்த இறால் முருங்கைக்காய் கிரேவி எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Print
3 from 1 vote

இறால் முருங்கைக்காய் கிரேவி | Prawn Drumstick Gravy Recipe In Tamil

முருங்கைகாய் உணவின் வாசனைக்கே பசி எடுக்க ஆரம்பித்துவிடும். அந்த முருங்கைக்காயில் இறாலை சேர்த்தால் அவ்வளவு அருமையான மணம் இருக்கும். இறாலை முருங்கைகாயுடன் சேர்த்து செய்வதால் இறால் , முருங்கைகாயின் சத்து  சேர்த்து கிடைக்கப்பெறும்.முருங்கைகாய் இறாலுடன் சேர்ப்பதால் இறாலின் வாசம் முருங்கைகாயில் சேர்ந்து முருங்கைகாய் சாப்பிடாதவர்கள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள்.  முருங்கைகாய் இறாலுடன் சேர்த்து செய்வதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் முருங்கைகாயின் சத்தும் குழந்தைகள் உடலுக்கு சேரும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Prawn Drumstick Gravy
Yield: 4
Calories: 371kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 4 முருங்கைக்காய்
  • 1 கிலோ இறால்
  • 5 நறுக்கிய வெங்காயம்
  • 5 நறுக்கிய தக்காளி
  • 1 டேபிள் ஸ்பூன் பொடித்த மிளகு சீரகம்
  • 4 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா
  • 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 கப் அரைத்த தேங்காய் விழுது
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • 1/2 ஸ்பூன் கடுகு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில், இறாலை நன்றாக சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய்ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, பின் பொடியாக நறுக்கிய வெங்காயம்சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியவுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், பொடித்த சீரகம் சேர்த்து வதக்கவும். மிளகு சீரகம் பின்அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • தக்காளி முருங்கைக்காய் வதங்கியவுடன் மற்றும் இறாலை சேர்த்து கிளரி,5 நிமிடம் வேகவிடவும்,பிறகு, கரம் மசாலா சேர்த்து, தேவைாயன அளவு தண்ணீர் ஊற்றி, அரைத்ததேங்காய் விழுது சேர்த்து, பதமாக கிளரி விடவும்.
  • பின்பு, கடாயை மூடிவைத்து, 15 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து வேகவிடவும். எண்ணெய் மேலே தெளிந்து வந்தவுடன் இறக்கினால், சுவைாயன முருங்கைக்காய் கிரேவிரெடி.

Nutrition

Serving: 400g | Calories: 371kcal | Carbohydrates: 94g | Protein: 2.2g

இதையும் படியுங்கள் : வீடே கமகமக்கும் புதினா இறால் கிரேவி இப்படி செஞ்சி பாருங்க பார்த்தாலே நாவில் எச்சி ஊறும்!