இப்பொழுது எல்லாம் வாரத்திற்கு இரண்டு, மூன்று முறை அசைவ உணவுகளை செய்து சாப்பிடுகிறார்கள். அவ்வாறு குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு அசைவ உணவு என்றால் அதில் இறால் ம் ஒன்று தான். கடல்வாழ் உயிரினங்களில் இறால் ரொம்பவும் வித்தியாசமானது. சிறிய மற்றும் பெரிய பெரிய அளவுகளில் கூட கிடைக்கும் இந்த இறால் என்றால் சிலருக்கு அலாதியான ஒரு விருப்பம்இந்த இறால் வைத்து குழம்பு, வறுவல், இறால் 65, இறால் தொக்கு என பல உணவுகளை செய்து கொடுக்கலாம். இதனை எப்படி சமைத்துக் கொடுத்தாலும் குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள்.
அவ்வாறு இறால் வைத்து செய்யக்கூடிய ஒரு இறால் குழம்பை தான் இப்போது பார்க்க போகிறோம். சுடச்சுட சாதத்தில் இந்த இறால் குழம்பை சேர்த்து இப்படி பிசைந்து சாப்பிட்டு பாருங்கள், நாவில் எச்சில் ஊறும் சுவையில் அவ்வளவு அற்புதமாக இருக்கும். இறால் பிரியர்களுக்கு ரொம்பவும் சுலபமாக செய்யக்கூடிய இந்த இறால் குழம்பை சுவையாக எப்படி செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
இறால் குழம்பு | Prawn Gravy Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1/2 இறால்
- 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
- 1/4 டீஸ்பூன் சோம்பு
- 3 வெங்காயம்
- 1/4 டீஸ்பூன் கடுகு
- 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி,பூண்டு விழுது
- 2 பச்சைமிளகாய்
- கறிவேப்பில்லை சிறிது
- 1/4 டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூள்
- 1/2 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா
- 1/2 டேபிள் ஸ்பூன் சீரகத்தூள்
- 2 டேபிள் ஸ்பூன் மல்லித்தூள்
- 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்
- உப்பு தேவைக்கேற்ப
- 2 தக்காளி
- நறுக்கிய மல்லித்தழை சிறிது
செய்முறை
- வாணலியில் 3 முதல் 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும் கால் டீஸ்பூன் கடுகு, சோம்பு போட்டு வதக்கவும், பின்னர் பொடியாக நறுக்கிய 3 வெங்காயம் சேர்த்து
- ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது,கீரிய இரண்டு பச்சை மிளகாய், சிறிது கறிவேப்பில்லை இலை ஆகியவற்றை வாணலியில் போட்டுநன்றாக வதக்கவும்
- நன்றாக வதக்கிய பின்னர் கால் டீஸ்பூன்மஞ்சள்தூள், அரை டீஸ்பூன் கரம் மசாலா, அரை டீஸ்பூன் சீரகத்தூள், 2 டீஸ்பூன் மல்லித்தூள்,காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூளை சேர்த்து நன்றாக கலக்கவும்.
- பின்னர் 2 தக்காளியை மிக்ஸியில் நன்றாக அரைத்து வாணலியில்போட்டி தேவையான உப்பு சேர்த்து நன்றாக கிளறி எண்ணெய் தனியாக பிரியும் வரை சிறிதுநேரம்மூடிவைக்கவும்
- அரைக்கப் வரை தண்ணீர் சேர்த்து கிரேவிபதத்திற்கு கொண்டு வரும் வரை கொதிக்க விடவும், இப்போது தயாராக சுத்தம் செய்து வைத்துஇருக்கும் இறால்களை அதில் போட்டு சிறிது உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
- 8 முதல் 10 நிமிடம் வரை மூடி போட்டு வேகவைத்த பின்னர்நறுக்கிய மல்லித்தழைகளை சேர்த்து சூடாக இறக்கி பறிமாறவும்