Home அசைவம் இந்த வாரம் சண்டே ஸ்பெஷலாக ருசியான இறால் கபாப் இப்படி ஈஸியாக வீட்டிலயே செஞ்சி பாருங்கள்!

இந்த வாரம் சண்டே ஸ்பெஷலாக ருசியான இறால் கபாப் இப்படி ஈஸியாக வீட்டிலயே செஞ்சி பாருங்கள்!

அசைவ சாப்பாடு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. எல்லோருக்கும் பிடித்தது மீன், கோழி, நண்டு, இறால் போன்றவை தான். அதிலும் இறால் குழம்பு, இறால் கிரேவி என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். உடலுக்கு தேவையான ஆற்றலையும், சக்தியையும் கொடுப்பதற்கு இறால் மிகவும் உதவியாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு அசைவ உணவு என்றால் அதில் இறாலும் ஒன்று தான். இந்த இறால் வைத்து குழம்பு, வறுவல், இறால் 65, இறால் தொக்கு என பல உணவுகளை செய்து கொடுக்கலாம். இதனை எப்படி சமைத்துக் கொடுத்தாலும் குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள். அவ்வாறு இறால் வைத்து செய்யக்கூடிய ஒரு உணவு தான் இறால் கபாப் இதனை எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

-விளம்பரம்-

இதுவரை நீங்கள் இறாலைக் கொண்டு வறுவல், குழம்பு என்று தான் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் இறாலைக் கொண்டு ஒரு அற்புதமான சுவையுடைய கபாப் செய்யலாம் என்று தெரியுமா? ஆம், இறால் கபாப்பை மாலை வேளையில் செய்து சாப்பிடலாம். அதோடு விருந்தினர்கள் வீட்டிற்கு வந்திருக்கும் போது, இறால் கபாப் செய்தால் அவர்களின் பாராட்டைப் பெறலாம். க்ரிஸ்பியான, மற்றும் சுவையான இறால் வடையை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் வகையில் இருக்கும். மற்ற கடல் உணவுப் பொருட்களைப் போல் இறாலில் அதிகமாக கால்சியம், அயோடின் மற்றும் புரதச் சத்துக்கள் உள்ளன. இறால்களில் அதிகப்படியான கொழுப்பு காணப்படுகிறது. இந்த கொழுப்பானது நல்ல கொலஸ்டிரால் எனப்படும் கொழுப்பு வகையைச் சேர்ந்ததால், இதனை உணவில் சேர்த்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இத்தகைய சத்து மிக்க இறாலில் கபாப் எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Print
4 from 1 vote

இறால் கபாப் | Prawn Kabab Recipe In Tamil

அசைவ சாப்பாடு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. எல்லோருக்கும் பிடித்தது மீன், கோழி, நண்டு, இறால் போன்றவை தான். அதிலும் இறால் குழம்பு, இறால் கிரேவி என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். உடலுக்கு தேவையான ஆற்றலையும், சக்தியையும் கொடுப்பதற்கு இறால் மிகவும் உதவியாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு அசைவ உணவு என்றால் அதில் இறாலும் ஒன்று தான். இந்த இறால் வைத்து குழம்பு, வறுவல், இறால் 65, இறால் தொக்கு என பல உணவுகளை செய்து கொடுக்கலாம். இதுவரை நீங்கள் இறாலைக் கொண்டு வறுவல், குழம்பு என்று தான் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் இறாலைக் கொண்டு ஒரு அற்புதமான சுவையுடைய கபாப் செய்யலாம் என்று தெரியுமா? ஆம், இறால் கபாப்பை மாலை வேளையில் செய்து சாப்பிடலாம். அதோடு விருந்தினர்கள் வீட்டிற்கு வந்திருக்கும் போது, இறால் கபாப் செய்தால் அவர்களின் பாராட்டைப் பெறலாம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: evening
Cuisine: Indian
Keyword: Prawn Kabab
Yield: 4 People
Calories: 84kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 வாணலி

தேவையான பொருட்கள்

  • 1/2 கி இறால்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1/2 டீஸ்பூன் சோம்புத்தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 2 டீஸ்பூன் சோள மாவு
  • 1/2 டீஸ்பூன் கலர் பொடி
  • 1 கொத்து கறிவேப்பில்லை
  • 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு

செய்முறை

  • முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பவுளில் இறாலுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் சீரகத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • அதன்பிறகு இதனுடன் சோம்பு தூள், சோள மாவு மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • பின் தேவையான அளவு உப்பு, கலர் பொடி, எலுமிச்சை சாறு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து அனைத்தையும் நன்கு கலந்து அரை மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
  • பின் சிறிது நேரம் கழித்து இந்த இறாலை ஒவ்வொன்றாக ஒரு குச்சியில் குத்தி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இறாலை சேர்த்து இரண்டு பக்கமும் நன்றாக பொரித்து எடுத்துக் கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான இறால் கபாப் தயார்.

Nutrition

Serving: 550g | Calories: 84kcal | Carbohydrates: 1.4g | Protein: 20.4g | Fat: 2g | Sodium: 59mg | Potassium: 115mg | Fiber: 6.4g | Vitamin A: 23IU | Vitamin C: 169mg | Calcium: 28mg | Iron: 10mg

இதனையும் படியுங்கள் : அடுத்தமுறை இறால் வாங்கினால் கோங்குரா இறால் ப்ரை இப்படி செஞ்சி பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!