குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு அசைவ உணவு என்றால் அதில் இறாலும் ஒன்று தான். இந்த இறால் வைத்து குழம்பு, வறுவல், இறால் 65 என பல உணவுகளை செய்து கொடுக்கலாம். இதனை எப்படி சமைத்துக் கொடுத்தாலும் குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள். அவ்வாறு இறால் வைத்து செய்யக்கூடிய ஒரு புளிக்குழம்பு தான் இப்போது பார்க்க போகிறோம். இதை எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
இறால் புளிக்குழம்பு | Prawn Pulikulambu Recipe in tamil
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு அசைவ உணவு என்றால் அதில் இறாலும் ஒன்று தான். இந்த இறால் வைத்து குழம்பு, வறுவல், இறால் 65 என பல உணவுகளை செய்து கொடுக்கலாம். இதனை எப்படி சமைத்துக் கொடுத்தாலும் குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள். அவ்வாறு இறால் வைத்து செய்யக்கூடிய ஒரு புளிக்குழம்பு தான் இப்போது பார்க்க போகிறோம். இதை எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Yield: 4
Calories: 178.89kcal
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 100 கிராம் வெண்டைக்காய்
- 1/4 கிலோ இறால்
- 2 தக்காளி
- 6 பூண்டு
- 7 சின்ன வெங்காயம்
- 1 கறிவேப்பிலை கொத்து
- 3 பச்சை மிளகாய்
- புளி எலுமிச்சைஅளவு
- 1/4 கப் தேங்காய் துருவல்
- 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
- உப்பு தேவைக்கேற்ப
செய்முறை
- தக்காளி,வெண்டைக்காய், சின்ன வெங்காயம் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
- புளியுடன் அரை கப் தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் ஊற வைத்து, புளியைகரைத்து வைக்கவும். தேங்காய் துருவலை சிறிது தண்ணீர் சேர்த்து, மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். பூண்டுடை தட்டி வைத்துக் கொள்ளவும்.
- வெறும் பாத்திரத்தில் வெண்டைக்காயை போட்டு கருகவிடாமல் இரண்டு நிமிடம் வதக்கி எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
- பின்னர் தக்காளி, தட்டி வைத்த பூண்டை சேர்த்து வதக்கவும். அதனுடன் வதக்கிய வெண்டைக்காய் சேர்த்து கிளறவும். பிறகு அதனுடன் இறால் சேர்த்து கிளறி, 5 நிமிடம் கழித்து இறக்கவும். சுவையான இறால் புளிக்குழம்பு ரெடி.
Nutrition
Serving: 100g | Calories: 178.89kcal | Carbohydrates: 5.95g | Protein: 19.12g | Fat: 7.67g | Sodium: 791.58mg | Potassium: 428.1mg | Fiber: 1.78g | Vitamin A: 3.28IU | Vitamin C: 16.52mg | Calcium: 77.83mg | Iron: 1.51mg