- Advertisement -
மதியம் சாதத்திற்கு ஏற்ற இறால் சாதம் இது போன்று செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்.
-விளம்பரம்-
இந்த சாதம் செய்து சிக்கன் கிரேவி போன்று சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
- Advertisement -
இந்த சாதம் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
இறால் சாதம் | Prawn Rice Recipe In Tamil
மதியம் சாதத்திற்கு ஏற்ற இறால் சாதம் இது போன்று செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். இந்த சாதம் செய்து சிக்கன் கிரேவி போன்று சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இந்த சாதம் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Yield: 4 people
Equipment
- குக்கர்
தேவையான பொருட்கள்
- 500 கிராம் பாசுமதி அரிசி
- 200 கிராம் சுத்தம் செய்த இறால்
- 4 பெரிய வெங்காயம்
- 7 பச்சை மிளகாய்
- 50 கிராம் நெய்
- 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- அரிசியை நன்றாக கழுவி நீரை வடித்து எடுத்துக்கொள்ளவும்.
- வெங்காயத்தை நறுக்கிக்கொள்ளவும்.
- பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கிக்கொள்ளவும்.
- ரைஸ் குக்கரில் நெய் விட்டு சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
- வெங்காயம் வதங்கி வரும் போது சுத்தம் செய்த இறாலை போட்டு நன்றாக வதக்கவும்.
- பின்னர் அரிசி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
- அரிசியின் அளவிற்கேற்ப தண்ணீர் ஊற்றி மூடி விடவும்.
- சாதம் வெந்ததும் இறக்கவும்.