சுட சுட சோறுடன் சாப்பிட ருசியான புடலங்காய் வறுவல் இனி இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்! எவ்வளவு செய்தாலும் காலியாகும்!

புடலங்காய், இது ஒரு நீர்ச்சத்து நிறைந்த காய்கறி. ஆனால், இதை கூட்டு செய்து கொடுத்தாலோ பொறியலாக செய்து கொடுத்தாலும் அல்லது வேறு எப்படி சமைத்துக் கொடுத்தாலும் வீட்டில் இருப்பவர்கள் அதை விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால் மிக மிக எளிமையான முறையில் இப்படி வறுவல் செய்து கொடுத்துப் பாரு

By Prem Kumar · 10/2/2024

புடலங்காய், இது ஒரு நீர்ச்சத்து நிறைந்த காய்கறி. ஆனால், இதை கூட்டு செய்து கொடுத்தாலோ பொறியலாக செய்து கொடுத்தாலும் அல்லது வேறு எப்படி சமைத்துக் கொடுத்தாலும் வீட்டில் இருப்பவர்கள் அதை விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால் மிக மிக எளிமையான முறையில் இப்படி வறுவல் செய்து கொடுத்துப் பாருங்களேன். சுடச்சுட சாதத்தில் குழம்பு தேவையில்லை என்று இந்த வறுவலையே போட்டு பிசைந்து பிசைந்து சாப்பிடுவார்கள். அப்படி ஒரு ருசி இருக்கும். அது மட்டுமில்லாமல் ரசம் சாதம் சாம்பார் சாதம் தயிர் சாதம் இதற்கெல்லாம் சூப்பரான சைடு டிஷ்ஷாக இருக்கும். புடலங்காயில் நமது உடலுக்கு தேவையான இரும்பு சத்து, நார் சத்து, புரதம், வைட்டமின் போன்ற எல்லாம் உள்ளது. அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிடால் வாய் புண், குடல், தொண்டை, வயிற்று புண் எல்லாம் சரிசெய்யும்.

புடலங்காய் வறுவலின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை நாம் வெகு சுலபமாக எந்த ஒரு சிரமமும் இன்றி குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம். அது மட்டுமின்றி இதை குறைந்த பொருட்களை வைத்தே நாம் செய்து விடலாம். இதை வெறும் புடலங்காய், வெங்காயம், மற்றும் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே நாம் சுலபமாக செய்து விடலாம். மேலும் புடலங்காயில் தண்ணீர் சத்து மற்றும் பைபர் அதிகமாக இருப்பதனால் இவை நம் உடம்பிற்கு மிகவும் நல்லது. ஆரோக்கியமான உணவு சாப்பிடுவது உடலுக்கு நல்லது. பல நன்மைகளை கொடுக்கும். குறிப்பாக காய்கறி வகைகள் அதிகம் சாப்பிட வேண்டும். தினமும் காய்கறி சாப்பிட வேண்டும். எப்போதும் ஒரே மாதிரியாக காய் செய்து போர் அடிக்கிறது என்றால் இந்த புடலங்காய் வறுவல் ட்ரை செய்து பாருங்க. குறிப்பாக இது பேச்சுலர்கள் சமைக்க ஒரு சிறந்த ரெசிபியாக இருக்கும்.

இதனையும் படியுங்கள் : சுவையான புடலங்காய் மசாலா பொரியல் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்! புடலங்காய் பிடிக்காதவர்கள் கூட சாப்பிடுவார்கள்!

Recipes AMP · Quick view
View full