சுட சுட சோறுடன் சாப்பிட ருசியான புடலங்காய் வறுவல் இனி இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்! எவ்வளவு செய்தாலும் காலியாகும்!

- Advertisement -

புடலங்காய், இது ஒரு நீர்ச்சத்து நிறைந்த காய்கறி. ஆனால், இதை கூட்டு செய்து கொடுத்தாலோ பொறியலாக செய்து கொடுத்தாலும் அல்லது வேறு எப்படி சமைத்துக் கொடுத்தாலும் வீட்டில் இருப்பவர்கள் அதை விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால் மிக மிக எளிமையான முறையில் இப்படி வறுவல் செய்து கொடுத்துப் பாருங்களேன். சுடச்சுட சாதத்தில் குழம்பு தேவையில்லை என்று இந்த வறுவலையே போட்டு பிசைந்து பிசைந்து சாப்பிடுவார்கள். அப்படி ஒரு ருசி இருக்கும். அது மட்டுமில்லாமல் ரசம் சாதம் சாம்பார் சாதம் தயிர் சாதம் இதற்கெல்லாம் சூப்பரான சைடு டிஷ்ஷாக இருக்கும். புடலங்காயில் நமது உடலுக்கு தேவையான இரும்பு சத்து, நார் சத்து, புரதம், வைட்டமின் போன்ற எல்லாம் உள்ளது. அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிடால் வாய் புண், குடல், தொண்டை, வயிற்று புண் எல்லாம் சரிசெய்யும்.

-விளம்பரம்-

புடலங்காய் வறுவலின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை நாம் வெகு சுலபமாக எந்த ஒரு சிரமமும் இன்றி குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம். அது மட்டுமின்றி இதை குறைந்த பொருட்களை வைத்தே நாம் செய்து விடலாம். இதை வெறும் புடலங்காய், வெங்காயம், மற்றும் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே நாம் சுலபமாக செய்து விடலாம். மேலும் புடலங்காயில் தண்ணீர் சத்து மற்றும் பைபர் அதிகமாக இருப்பதனால் இவை நம் உடம்பிற்கு மிகவும் நல்லது. ஆரோக்கியமான உணவு சாப்பிடுவது உடலுக்கு நல்லது. பல நன்மைகளை கொடுக்கும். குறிப்பாக காய்கறி வகைகள் அதிகம் சாப்பிட வேண்டும். தினமும் காய்கறி சாப்பிட வேண்டும். எப்போதும் ஒரே மாதிரியாக காய் செய்து போர் அடிக்கிறது என்றால் இந்த புடலங்காய் வறுவல் ட்ரை செய்து பாருங்க. குறிப்பாக இது பேச்சுலர்கள் சமைக்க ஒரு சிறந்த ரெசிபியாக இருக்கும்.

- Advertisement -
Print
No ratings yet

புடலங்காய் வறுவல் | Pudalankaai Varuval Recipe In Tamil

புடலங்காய், இது ஒரு நீர்ச்சத்து நிறைந்த காய்கறி. ஆனால், இதை கூட்டு செய்து கொடுத்தாலோ பொறியலாக செய்து கொடுத்தாலும் அல்லது வேறு எப்படி சமைத்துக் கொடுத்தாலும் வீட்டில் இருப்பவர்கள் அதை விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால் மிக மிக எளிமையான முறையில் இப்படி வறுவல் செய்து கொடுத்துப் பாருங்களேன். சுடச்சுட சாதத்தில் குழம்பு தேவையில்லை என்று இந்த வறுவலையே போட்டு பிசைந்து பிசைந்து சாப்பிடுவார்கள். அப்படி ஒரு ருசி இருக்கும். அது மட்டுமில்லாமல் ரசம் சாதம் சாம்பார் சாதம் தயிர் சாதம் இதற்கெல்லாம் சூப்பரான சைடு டிஷ்ஷாக இருக்கும். புடலங்காயில் நமது உடலுக்கு தேவையான இரும்பு சத்து, நார் சத்து, புரதம், வைட்டமின் போன்ற எல்லாம் உள்ளது. அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிடால் வாய் புண், குடல், தொண்டை, வயிற்று புண் எல்லாம் சரிசெய்யும். புடலங்காய் வறுவலின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை நாம் வெகு சுலபமாக எந்த ஒரு சிரமமும் இன்றி குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம்.
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Pudalankaai Varuval
Yield: 4 People
Calories: 60kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 வாணலி
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

  • 1 சிறிய புடலங்காய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு                              தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்  
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1 டீஸ்பூன் பாவ் பாஜி மசாலா

செய்முறை

  • முதலில் புடலங்காய் மற்றும் வெங்காயம் இரண்டையும் கழுவி விட்டு தோல் நீக்கி நீளவாக்கில் நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும், வெங்காயம் வதங்கியதும் வெட்டி வைத்துள்ள புடலங்காய் சேர்த்து, அத்துடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், கரம் மசாலா, பாவ் பாஜி மசாலா, உப்பு சேர்த்து நன்கு கலந்து மூடி வைத்து வேக விடவும்.
  • ஐந்து நிமிடங்கள் கழித்து நன்கு கலந்து புடலங்காய் வெந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
  • அவ்வளவுதான் மிகவும் சுவையான புடலங்காய் வறுவல் தயார். இந்த வறுவல் எல்லா சாத்தத்துடனும், சப்பாத்தியுடனும் சேர்த்து சாப்பிட மிகவும் பொறுத்தமாக இருக்கும்.

Nutrition

Serving: 400g | Calories: 60kcal | Carbohydrates: 3g | Protein: 6g | Fat: 0.3g | Sodium: 25.4mg | Potassium: 7mg | Fiber: 3g | Vitamin A: 22IU | Vitamin C: 16mg | Calcium: 18mg | Iron: 1.7mg

இதனையும் படியுங்கள் : சுவையான புடலங்காய் மசாலா பொரியல் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்! புடலங்காய் பிடிக்காதவர்கள் கூட சாப்பிடுவார்கள்!