Advertisement
சைவம்

புதினா துவையல் சுவையை இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

ஆரோக்கியமான புதினா துவையல் இப்படி ஒரு முறை செஞ்சி சுட சுட சாதத்துடன் நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டால் அவ்வளவு அற்புதமான ருசியில் இருக்கும். உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது என்பதால் இந்த துவையல் அரைத்து ஸ்டோர் பண்ணி வைத்து தேவைப்படும் போது சாப்பிடலாம். இனி குழம்பு வைக்கவில்லை என்ன செய்வதென்று

இதையும் படியுங்கள் : சுவையான மணத்தக்காளி கீரை துவையல் செய்வது எப்படி ?

Advertisement

யோசிக்காதீர்கள் இந்த துவையல் அரைத்து ப்ரிட்ஜில் வைத்து தேவைப்படும் பொழுது சாப்பிடுங்கள்.எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

புதினா துவையல் | Pudina Thuvaiyal Recipe In Tamil

Print Recipe
ஆரோக்கியமான புதினா துவையல் இப்படி ஒரு முறை செஞ்சி சுட சுட சாதத்துடன் நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டால் அவ்வளவு அற்புதமான ருசியில் இருக்கும். உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது என்பதால் இந்த துவையல் அரைத்து ஸ்டோர் பண்ணி வைத்து தேவைப்படும் போது சாப்பிடலாம். இனி குழம்பு வைக்கவில்லை என்ன செய்வதென்று யோசிக்காதீர்கள் இந்த துவையல் அரைத்து ப்ரிட்ஜில் வைத்து தேவைப்படும் பொழுது சாப்பிடுங்கள்.
Advertisement
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword pudina thuvaiyal, புதினா துவையல்
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Total Time 15 minutes
Servings 4 people

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Ingredients

  • டீஸ்பூன் எண்ணெய்
  • கட்டி பெருங்காயம்
    Advertisement
    சிறிய துண்டு
  • ¼ கப்` உளுத்தம் பருப்பு
  • புளி நெல்லிக்காய் அளவு
  • 4-5 பல் பூண்டு
  • 10-15 வர மிளகாய்
  • 5 கப் புதினா
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் ஒரு பாண் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கட்டி பெருங்காயம் சேர்த்து பொரிந்ததும் தனியாக ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
  • அடுத்து அதே பானில் உளுத்தம் பருப்பு சேர்த்து நன்கு சிவக்க வறுத்து அதே தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  • பிறகு புளி, பூண்டு, வர மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  • கடைசியாக அதே பானில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி புதினா சேர்த்து நன்கு வதக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  • தனியாக எடுத்து வைத்துள்ள அனைத்தையும் நன்றாக ஆறவிடவும்.
  • ஆறியதும் முதலில் புதினாவை தவிர்த்து மத்த பொருட்களை மிக்சியில் சேர்த்து மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக்கொள்ளவும். பிறகு புதினாவை சேர்த்து ½ கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி துவையல் பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும்.
  • இப்பொழுது ருசியான புதினா துவையல் தயார்.
Advertisement
swetha

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

4 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

7 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

14 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

17 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago