- Advertisement -
பொதுவாக கீரையில் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்திருக்கும். இத்தகைய கீரையை சிலருக்கு கடைந்து சாப்பிட பிடிக்கும். சிலருக்கு பொரியல் செய்து சாப்பிட பிடிக்கும் அதிலும் சிலருக்கு துவையல் வைத்து சாப்பிட்டால் பிடிக்கும் அந்த வகையில் இன்று மணதக்காளிக்கீரையில் துவையல் செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : சுவையான முடக்கத்தான் கீரை சட்னி செய்வது எப்படி ?
- Advertisement -
இந்த மணத்தக்காளி கீரை துவையலை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இதை நீங்கள் செய்து கொடுத்தால் குழந்தைகள் ஒதுக்காமல் விரும்பி சாப்பிடுவார்கள். ஏன் கீரை பிடிக்காது என்பவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த மணத்தக்காளிகீரை துவையல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என் அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
மணத்தக்காளி கீரை துவையல் | Manathakkali Keerai Thuvayal Recipe in Tamil
கீரையை சிலருக்கு கடைந்து சாப்பிட பிடிக்கும். சிலருக்கு பொரியல் செய்து சாப்பிட பிடிக்கும் அதிலும் சிலருக்கு துவையல் வைத்து சாப்பிட்டால் பிடிக்கும் அந்த வகையில் இன்று மணதக்காளிக்கீரையில் துவையல் செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இந்த மணத்தக்காளி கீரை துவையலை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இதை நீங்கள் செய்து கொடுத்தால் குழந்தைகள் ஒதுக்காமல் விரும்பி சாப்பிடுவார்கள். ஏன் கீரை பிடிக்காது என்பவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.
Yield: 4 People
Calories: 251kcal
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
- 2 கப் மணதக்காளி கீரை
- 2 tbsp நல்லெண்ணெய்
- 1 tbsp கடலைப்பருப்பு
- 1 tbsp உளுந்தபருப்பு
- 10 வரமிளகாய்
- புளி சிறிய நெல்லிக்காய் அளவு
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் நாம் எடுத்து கொண்ட மணததக்காளி கீரையை ஆய்ந்து தண்ணீரில் நன்றாக அலசி சுத்தபடுத்தி கொள்ளுங்கள். பின் கடாயை அடுப்பில் வைத்து சிறிது நல்லெண்ணெய் ஊற்றவும்.
- பின் எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் நாம் சுத்தபடுத்திய கீரையை சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும். பின்பு மறுபடியும் அதே கடாயை அடுப்பில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி,
- எண்ணெய் காய்ந்ததும் இதனுடன் பத்து வர மிளகாய், ஒரு டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு மூன்றையும் எண்ணெயில் நன்கு வறுத்து எடுத்து கொள்ளவும்.
- அதன் பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் நாம் வதக்கிய கீரை, எண்ணெயில் வறுத்த பொருட்கள், ஊறவைத்த புளி, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் சுவையான மணதக்காளி கீரை துவையல் தயார்.
Nutrition
Serving: 200gram | Calories: 251kcal | Carbohydrates: 26g | Protein: 31g | Fat: 0.1g | Saturated Fat: 0.5g | Cholesterol: 1mg | Potassium: 182mg | Fiber: 11g | Sugar: 4.6g | Vitamin A: 20IU | Iron: 12mg