- Advertisement -
ஆரோக்கியமான புதினா துவையல் இப்படி ஒரு முறை செஞ்சி சுட சுட சாதத்துடன் நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டால் அவ்வளவு அற்புதமான ருசியில் இருக்கும். உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது என்பதால் இந்த துவையல் அரைத்து ஸ்டோர் பண்ணி வைத்து தேவைப்படும் போது சாப்பிடலாம். இனி குழம்பு வைக்கவில்லை என்ன செய்வதென்று
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : சுவையான மணத்தக்காளி கீரை துவையல் செய்வது எப்படி ?
- Advertisement -
யோசிக்காதீர்கள் இந்த துவையல் அரைத்து ப்ரிட்ஜில் வைத்து தேவைப்படும் பொழுது சாப்பிடுங்கள்.எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
புதினா துவையல் | Pudina Thuvaiyal Recipe In Tamil
ஆரோக்கியமான புதினா துவையல் இப்படி ஒரு முறை செஞ்சி சுட சுட சாதத்துடன் நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டால் அவ்வளவு அற்புதமான ருசியில் இருக்கும். உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது என்பதால் இந்த துவையல் அரைத்து ஸ்டோர் பண்ணி வைத்து தேவைப்படும் போது சாப்பிடலாம். இனி குழம்பு வைக்கவில்லை என்ன செய்வதென்று யோசிக்காதீர்கள் இந்த துவையல் அரைத்து ப்ரிட்ஜில் வைத்து தேவைப்படும் பொழுது சாப்பிடுங்கள்.
Yield: 4 people
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1½ டீஸ்பூன் எண்ணெய்
- கட்டி பெருங்காயம் சிறிய துண்டு
- ¼ கப்` உளுத்தம் பருப்பு
- புளி நெல்லிக்காய் அளவு
- 4-5 பல் பூண்டு
- 10-15 வர மிளகாய்
- 5 கப் புதினா
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் ஒரு பாண் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கட்டி பெருங்காயம் சேர்த்து பொரிந்ததும் தனியாக ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
- அடுத்து அதே பானில் உளுத்தம் பருப்பு சேர்த்து நன்கு சிவக்க வறுத்து அதே தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- பிறகு புளி, பூண்டு, வர மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- கடைசியாக அதே பானில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி புதினா சேர்த்து நன்கு வதக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- தனியாக எடுத்து வைத்துள்ள அனைத்தையும் நன்றாக ஆறவிடவும்.
- ஆறியதும் முதலில் புதினாவை தவிர்த்து மத்த பொருட்களை மிக்சியில் சேர்த்து மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக்கொள்ளவும். பிறகு புதினாவை சேர்த்து ½ கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி துவையல் பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும்.
- இப்பொழுது ருசியான புதினா துவையல் தயார்.