Home சைவம் திருப்தி தேவஸ்தான ருசியான புளியோதரை சாதம் ஒரு முறை இப்படி வீட்டிலயே செய்து பாருங்க! மிகவும்...

திருப்தி தேவஸ்தான ருசியான புளியோதரை சாதம் ஒரு முறை இப்படி வீட்டிலயே செய்து பாருங்க! மிகவும் அட்டகாசமாக இருக்கும்!

நமக்கு புளியோதரைனாலே ரொம்ப பிடிக்கும். கோவில்ல கிடைக்கிற பிரசாதங்களில புளியோதரை அப்படிங்கறது எல்லாருக்கும் ரொம்ப விருப்பமான ஒரு உணவாக இருக்கும். என்னதான் வீட்ல செய்தாலும் கோயில செய்ற பிக்சுவை வந்து வீட்ல செய்யறதுல வரதே கிடையாது. உங்களுக்கு புளியோதரை ரொம்ப பிடிக்குமா?  அதுவும் கோவில்ல  கொடுக்கிற பிரசாதம் மாதிரியான சுவையில வேணுமா?  அப்போ இந்த புளியோதரை ட்ரை பண்ணி பாருங்க. இது திருப்பதி தேவஸ்தானத்தில் கிடைக்கிற புளியோதரை எப்படி இருக்குமோ அதே மாதிரி சுவையில ரொம்பவே டேஸ்ட்டா இருக்கும் இந்த புளியோதரை.

-விளம்பரம்-

எப்பவுமே புளியோதரை கெட்டுப்போகாமல் இருக்கும் ஊர் பயணங்கள் செல்லும்போது அது செய்து நம்ம எடுத்துட்டு போவோம். இப்ப எல்லாம் யாரும் எடுத்துட்டு போறது இல்ல ஹோட்டல்கல்ல பாக்கெட் போட்டு வாங்கி சாப்பிடுறாங்க. ஆனாலும் சில இடங்களில் இன்னும் எங்கேயாவது கோயில்களுக்கு வெளியூர்களுக்கு செல்லும்போது வீட்டில் இருந்து சமைத்து எடுத்துட்டு போவாங்க. அப்படி எடுத்துட்டு போற உணவுகளில் முதலிடம் இந்த புளியோதரைக்கு தான் இருக்கு. அப்படி சுவையான ரொம்ப டேஸ்ட்டான இந்த புளியோதரையை எல்லாருக்கும் பிடிக்கும்.

சும்மாவே எல்லாருக்கும் புளியோதரை அப்படின்னா ரொம்ப பிடிக்கும். அதுவும் கோவிலில் இருக்கிற பிரசாதம் மாதிரியான சுவை அப்படின்னு சொன்னா கேட்கவா வேணும். கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம எல்லாரும் சாப்பிடுவாங்க. அந்த அளவுக்கு சுவையா இருக்கும் இந்த திருப்பதி தேவஸ்தான ஸ்டைல் புளியோதரை. இந்த சுவையான புளியோதரையை எப்படி செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்க இருக்கோம். சரி வாங்க இந்த திருப்பதி தேவஸ்தான  புளியோதரை எப்படி செய்யலாம்னு தெரிஞ்சுக்கலாம்.

Print
5 from 1 vote

புளியோதரை | Puliyodharai Recipe In Tamil

புளியோதரை கெட்டுப்போகாமல் இருக்கும் ஊர் பயணங்கள் செல்லும்போது அதுசெய்து நம்ம எடுத்துட்டு போவோம். இப்ப எல்லாம் யாரும் எடுத்துட்டு போறது இல்ல ஹோட்டல் பாக்கெட் போட்டு வாங்கி சாப்பிடுறாங்க. ஆனாலும் சில இடங்களில் இன்னும் எங்கேயாவது கோயில்களுக்குவெளியூர்களுக்கு செல்லும்போது வீட்டில் இருந்து சமைத்து எடுத்துட்டு போவாங்க. அப்படி எடுத்துட்டு போற உணவுகளில் முதலிடம் இந்த புளியோதரைக்கு தான் இருக்கு. அப்படி சுவையான ரொம்ப டேஸ்ட்டான இந்த புளியோதரையை எல்லாருக்கும் பிடிக்கும்.
Prep Time5 minutes
Active Time9 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: puliyodharai
Yield: 4
Calories: 142kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 கப் சாதம்
  • 1 கப் புளி கரைசல்
  • 1/4 கப் கடலைப்பருப்பு
  • 15 முந்திரி
  • 1/4 ஸ்பூன் வெந்தயம்
  • 1/2 ஸ்பூன் மிளகு
  • 1/2 ஸ்பூன் சீரகம்
  • 1/4 ஸ்பூன் பெருங்காயதூள்
  • 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 3 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு
  • நல்லெண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அது வெந்தயம், மிளகு, சீரகம் சேர்த்துஎண்ணெய் சேர்க்காமல் வறுத்து ஆற வைக்க வேண்டும். ஆறவைத்த வைத்த வெந்தயம், மிளகு,சீரகத்தை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில்கடலை பருப்பு, கறிவேப்பிலை, முந்திரி சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளவும்.
  • பிறகு கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். புளி ஒரு கொதி வந்த பிறகு அதில் பொடித்து வைத்துள்ள வெந்தயம், மிளகு,சீரக பொடியை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
  • பிறகு அதை மூடி போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். கொதித்து எண்ணெய்தனியாக பிரிந்து வந்தவுடன் அதில் பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும்.
  • இந்த புளி கரைசல் நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து வந்த பிறகு சாதத்தோடுகலந்து பரிமாறினால் சுவையான திருப்பதி தேவஸ்தான ஸ்டைல் புளியோதரை தயார். சாதம் கலந்த பிறகு அரை மணிநேரம் கழித்து சாப்பிட்டால் சுவை இன்னும் அருமையாக இருக்கும்.

Nutrition

Serving: 100g | Calories: 142kcal | Carbohydrates: 32g | Protein: 9g | Sodium: 68mg | Potassium: 132mg