காலையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? தோசை சுடலாம் என்று நினைத்தால் தோசை மாவு இல்லையா? அப்படியானால் கவலையை விடுங்கள். வீட்டில் பரங்கிக்காய் இருந்தால், அதைக் கொண்டு அட்டகாசமான சுவையில் தோசை செய்யலாம். இதுவரை பரங்கிக்காய் கொண்டு கூட்டு, சம்பார் தான் செய்திருப்பீர்கள். அடுத்த முறை பரங்கிக்காய் வெச்சு சமைப்பதாக இருந்தால், பரங்கிக்காய் தோசை செய்யுங்கள். அரசாணிக்காய், மஞ்சள் பூசணிக்காய், பரங்கிக்காய் என்று விதவிதமான பெயர்களில் அழைக்கப்படும் இந்த பூசணிக்காயில் நிறையவே சத்துக்கள் உண்டு. குறிப்பாக பெண்களுக்கு வரக்கூடிய பல பிரச்சனைகளை தடுக்கும். பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும்.
புண்களை ஆற்ற, தழும்புகளை காணாமல் போகச் செய்யவும் பூசணிக்காய் பயன்படும். அன்றாட தோசையில், ஒரு பகுதி உளுத்தம் பருப்புடன் மூன்று பங்கு அரிசியை சாப்பிடப் பழகிவிட்டோம். இது குறைந்த புரதம் மற்றும் அதிக கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்வதற்கு வழிவகுக்கிறது என்கிறார்கள். ஆனால் அதற்கு பதிலாக நாம் செய்ய வேண்டியது, சத்தான உணவைத் தேடுவது தான். அதாவது சாதாரண தோசைக்கு பதிலாக பரங்கிக்காய் மற்றும் பாசி பருப்பு தோசையை தயாரித்து சாப்பிடலாம். பரங்கிக்காய் உடல் சூட்டை குறைக்கும். பரங்கிக்காயில் வைட்டமின் பி, சி சத்துக்களை அதிகம் உள்ளது. சுரைக்காயின் சதைப் பகுதியை வெட்டி சாறு பிழிந்து அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து பருகி வர சிறுநீரக கோளாறு, சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு ஆகிய பிரச்சனைகள் குணமாகும். இவ்வளவு மருத்துவ பயன்களை கொண்டுள்ள பரங்கிக்காயில் சுவைமிகுந்த காலை உணவான பரங்கிக்காய் தோசை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
பரங்கிக்காய் தோசை | Pumpkin Dosa Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 தோசை கல்
- 1 கிரைண்டர்
தேவையான பொருட்கள்
- 2 கப் பூசணிக்காய்
- 2 கப் இட்லி அரிசி
- 1 கப் துவரம் பருப்பு
- 2 பச்சை மிளகாய்
- 4 வர மிளகாய்
- 8 பல் பூண்டு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 10 சின்ன வெங்காயம்
- 1 டீஸ்பூன் சீரகம்
- கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை
- முதலில் பரங்கிக்காயை நன்கு கழுவி விட்டு தோல் சீவி துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின் இட்லி அரிசி மற்றும் பருப்பை நன்கு கழுவி 4 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
- பின் கிரைண்டரில் முதலில் அரிசி, பருப்பு, பரங்கிக்காய், வர மிளகாய், பூண்டு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- பின் அரைத்து வைத்துள்ள மாவை ஒரே பவுளுக்கு மாற்றி தேவையான அளவு உப்பு, நறுக்கிய சின்ன வெங்காயம், கருவேப்பிலை மற்றும் கொத்த மல்லி சேர்த்து கலந்து 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- பின் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவை எடுத்து தோசையாக வார்த்து சுற்றி எண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் சுட்டு எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான பரங்கிக்காய் தோசை தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : காரசாரமான பூண்டு மசாலா தோசை ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் இரண்டு தோசைகள் அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!