Home சைவம் மதிய வேளை உணவிற்கு சுவையாக அதேசமயம் எளிமையான புடலங்காய் தயிர் கூட்டு இப்படி செய்து பாருங்கள்...

மதிய வேளை உணவிற்கு சுவையாக அதேசமயம் எளிமையான புடலங்காய் தயிர் கூட்டு இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!!

பொதுவாக மதிய நேர சாப்பாட்டிற்கு என்ன செய்யலாம் என சிந்தித்து கொண்டிருப்போம். ஆனால் இனி சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. சாதத்திற்கு சுவையான புடலங்காய் தயிர் கூட்டு செய்யலாம். மதிய வேளையில் மிகவும் ஈஸியான, அதே சமயம் ஆரோக்கியமான சைடு டிஷ் செய்து சாப்பிட நினைத்தால், புடலங்காய் தயிர் கூட்டு செய்து சாப்பிடலாம். அதிலும் திங்கட்கிழமைகளில் இந்த கூட்டு செய்து சாப்பிடுவது நல்லது. ஏனெனில் ஞாயிற்று கிழமையில் நன்கு காரசாரமாக உட்கொண்டிருப்பதால், திங்கட்கிழமைகளில் சற்று காரம் குறைவாக சமைத்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது.

-விளம்பரம்-

வயிற்றில் தேங்கியுள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து வெளியேற்ற, புடலங்காய் உதவி செய்யும். புடலங்காயில் நமது உடலுக்கு தேவையான இரும்பு சத்து, நார் சத்து, புரதம், வைட்டமின் போன்ற எல்லாம் உள்ளது. அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிடால் வாய் புண், குடல், தொண்டை, வயிற்று புண் எல்லாம் சரிசெய்யும். இந்த புடலங்காய் தயிர் கூட்டின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை நாம் வெகு சுலபமாக எந்த ஒரு சிரமமும் இன்றி குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம். எப்போதுவும் ஓரே மாதிரியான காய்கறிங்களை வாங்கி அதனை வருப்பது, குழம்பு வைப்பது என்று மட்டுமே வீட்டில் செய்யாமல் புடலங்காய் போன்ற காய்கறிகளையும் குழந்தைகளுக்கு கொடுப்பதை வழக்கமாக மாற்றுங்கள்.

இந்த புடலங்காய் தயிர் கூட்டு செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, மிகவும் ருசியாகவும் இருக்கும். அதுவும் வெயில் காலத்தில், நீர்ச்சத்துள்ள காய்கறிகளை அதிகம் உண்பது நல்லது. புடலங்காயில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், இதை அடிக்கடி உணவில் சேர்க்க, உடல் நீரேற்றத்துடன் இருக்கும். இந்த புடலங்காய் தயிர் கூட்டு சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் அதன் சுவை மிகவும் சூப்பராக இருக்கும். ஆகவே இன்று சூப்பரான புடலங்காய் தயிர்‌ கூட்டு எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

Print
3 from 1 vote

புடலங்காய் தயிர் கூட்டு | Snake Gourd Curd Koottu Recipe In Tamil

பொதுவாக மதிய நேர சாப்பாட்டிற்கு என்ன செய்யலாம் என சிந்தித்து கொண்டிருப்போம். ஆனால் இனி சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. சாதத்திற்கு சுவையான புடலங்காய் தயிர் கூட்டு செய்யலாம். மதிய வேளையில் மிகவும் ஈஸியான, அதே சமயம் ஆரோக்கியமான சைடு டிஷ் செய்து சாப்பிட நினைத்தால், புடலங்காய் தயிர் கூட்டு செய்து சாப்பிடலாம். அதிலும் திங்கட்கிழமைகளில் இந்த கூட்டு செய்து சாப்பிடுவது நல்லது. ஏனெனில் ஞாயிற்று கிழமையில் நன்கு காரசாரமாக உட்கொண்டிருப்பதால், திங்கட்கிழமைகளில் சற்று காரம் குறைவாக சமைத்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது. இந்த புடலங்காய் தயிர் கூட்டின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை நாம் வெகு சுலபமாக எந்த ஒரு சிரமமும் இன்றி குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: Snake Gourd Curd Koottu
Yield: 4 People
Calories: 96kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 2 கப் புடலங்காய்
  • 4 டேபிள் ஸ்பூன் தயிர்
  • 2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
  • 4 பச்சை மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 2 துண்டு தேங்காய்
  • 2 வர மிளகாய்
  • உப்பு தேவையான அளவு
  • தேங்காய் எண்ணெய் தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 2 கொத்து கறிவேப்பிலை

செய்முறை

  • முதலில் புடலங்காயை தோல் சீவி விட்டு விதைகள் நீக்கி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். கடலை பருப்பில் சிறிதளவு தண்ணீர் விட்டு அரை மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
  • பின்‌ புடலங்காயை குக்கரில் சேர்த்து அதனுடன் சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு மிக்ஸி ஜாரில் ஊற வைத்த கடலைப்பருப்பு, பச்சை மிளகாய், தயிர், சீரகம், தேங்காய் மற்றும் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதனுடன்‌ நாம்‌ வேகவைத்த புடலங்காய் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வேக விடவும்.
  • பின் நாம்‌ அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி போட்டு சிறிது நேரம் வேக விடவும். தண்ணீர் நன்கு சுண்டி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான புடலங்காய் தயிர் கூட்டு தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 96kcal | Carbohydrates: 3.3g | Protein: 6.1g | Fat: 2.3g | Sodium: 25mg | Potassium: 183mg | Fiber: 3.5g | Vitamin A: 33IU | Vitamin C: 155mg | Calcium: 30mg | Iron: 17mg

இதனையும் படியுங்கள் : சுவையான புடலங்காய் மசாலா பொரியல் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்! புடலங்காய் பிடிக்காதவர்கள் கூட சாப்பிடுவார்கள்!