இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் துணை புரிவது கீரைகள். பொதுவாக கீரைகளில் இரும்புச்சத்து நிறைந்திருக்கும் என்று கூறப்படுகிறது. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது உணவில் கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். வெந்தயக் கீரையில் ஏராளமான வைட்டமின்களும், தாது உப்புகளும் நிறைந்துள்ளன.
தினமும் இரவு என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் வெந்தயக் கீரை உள்ளது என்றால், இதுவரை இந்த கீரையை கொண்டு பொரியல் செய்துள்ளீர்கள் என்றால் அப்படியானால் அடுத்தமுறை வெந்தய் கீரையை கொண்டு அடை தோசை செய்யுங்கள். இந்த கீரையை பொரியலாக செய்து கொடுத்தால் வீட்டில் உள்ள குழந்தைகள் அல்லது ஒரு சில பெரியவர்களும் சாப்பிட மறுக்கலாம். ஆனால் இது போல அடை தோசை செய்து கொடுத்துப் பாருங்கள். நிச்சயமாக அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
ஒரு தோசை சாப்பிட வேண்டிய இடத்தில் இரண்டு தோசை சாப்பிடுவார்கள் குறிப்பாக குழந்தைகள் மிகவும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். ஒருமுறை இப்படி தோசை செய்து சுடச்சுட சாம்பார் அல்லது சட்னி செய்து கொஞ்சமாக நெய் விட்டு சாப்பிட்டு பாருங்கள். சொல்லும் போதே மணக்க மணக்க வாசம் வீசும். இன்று இந்த வெந்தயக் கீரை அடை தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
வெந்தய கீரை அடை | Vendhaya Keerai Adai Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
- 1 தோசை கல்
தேவையான பொருட்கள்
- 2 கப் வெந்தயக் கீரை
- 1/2 கப் கடலை பருப்பு
- 1/2 கப் துவரம் பருப்பு
- 2 டேபிள் ஸ்பூன் பாசிப்பருப்பு
- 1 கப் பச்சரிசி
- 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 2 பச்சை மிளகாய்
- 3 வர மிளகாய்
- 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
- உப்பு தேவையான அளவு
- நல்லெண்ணெய் தேவையான அளவு
- 1/2 டீஸ்பூன் மிளகு தூள்
- 2 கொத்து கறிவேப்பிலை
செய்முறை
- முதலில் அரிசி, கடலை பருப்பு, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பை நன்கு அலசி விட்டு ஐந்து மணி நேரம் வரை ஊற வைத்து கொள்ளவும்.
- பின் கிரைண்டரில் இவை அனைத்தையும் சேர்த்து அதனுடன் வர மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கறிவேப்பிலை, வெந்தய கீரை, மிளகு தூள், பெருங்காயம் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வரை வதக்கி வைத்துக் கொள்ளவும்.
- பின் அரைத்த மாவை ஒரு பவுளுக்கு மாற்றி அதனுடன் வதக்கிய கீரை மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவை தோசையாக வார்த்து சுற்றி எண்ணெய் விட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான வெந்தய கீரை அடை தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : மணக்க மணக்க ருசியான வெந்தய கீரை பருப்பு கடையல் இனி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!