உளுந்து மாவில் சுவையான பூசணி உளுந்து வடை இப்படி கூட செய்யலாமா? ஒரு முறை செய்தாலே மீண்டும் மீண்டும் செய்ய தூண்டும்!

- Advertisement -

வடை என்றதும் நமக்கு முதலில் ஞாபகத்திற்கு வருவது ‘உளுந்த வடை’ தான். உளுந்த வடை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. எப்பொழுதும் ஒரே போல உளுந்த வடை செய்வதைக் காட்டிலும் புதுமையான முறையில் ஆரோக்கியத்துடன் கூடிய ‘பூசணி உளுந்த வடை’ செய்து பார்த்தால் எப்படி இருக்கும்? மசால் வடையில் கீரை போட்டு செய்வதை நாம் பார்த்திருப்போம். உளுந்து வைத்து எப்படி சாம்பல் பூசணி வடை செய்வது என்று தெரிந்துகொள்ளவும்.

-விளம்பரம்-

என்னதான் வீட்டில் வடை சுட்டு கொடுத்தாலும், டீக்கடை வடை போல சுவை இருக்காது. மொறுமொறுப்பாக வராது. கடையில் காசு கொடுத்து வாங்கி சாப்பிட்டால் தான் திருப்தி இருக்கும். கடையில் கிடைக்கும் வடையை விட சுவையும் ஆரோக்கியமும் அதிகமான பூசணி வடையை நம்முடைய வீட்டில் எப்படி செய்வது என்பதை பற்றிய சூப்பரான ரெசிபி இந்த பதிவில் உங்களுக்காக. அதிக எண்ணெய் குடிக்காமல் பத்தே நிமிடத்தில் வித்தியாசமான சுவையில் எல்லோரும் விரும்பும் வகையிலான ‘பூசணி உளுந்து வடை’ செய்யும் முறையை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -
Print
4 from 1 vote

பூசணி உளுந்து வடை | Pumpkin Urad Vada Recipe In Tamil

எப்பொழுதும் ஒரே போல உளுந்த வடை செய்வதைக்காட்டிலும் புதுமையான முறையில் ஆரோக்கியத்துடன் கூடிய ‘சாம்பல் பூசணி உளுந்த வடை’ செய்து பார்த்தால் எப்படி இருக்கும்? மசால்வடையில் கீரை போட்டு செய்வதை நாம் பார்த்திருப்போம். உளுந்து வைத்து எப்படி சாம்பல்பூசணி வடை செய்வது என்று தெரிந்துகொள்ளவும். என்னதான் வீட்டில் வடை சுட்டு கொடுத்தாலும்,டீக்கடை வடை போல சுவை இருக்காது. மொறுமொறுப்பாக வராது. கடையில் காசு கொடுத்து வாங்கிசாப்பிட்டால் தான் திருப்தி இருக்கும். கடையில் கிடைக்கும் வடையை விட சுவையும் ஆரோக்கியமும்அதிகமான சாம்பல் பூசணி வடையை நம்முடைய வீட்டில் எப்படி செய்வது என்பதை பற்றிய சூப்பரானரெசிபி இந்த பதிவில் உங்களுக்காக. அதிக எண்ணெய் குடிக்காமல் பத்தே நிமிடத்தில் வித்தியாசமானசுவையில் எல்லோரும் விரும்பும் வகையிலான ‘சாம்பல் பூசணி ’ செய்யும் முறையை இந்த பதிவின்மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, snacks
Cuisine: tamil nadu
Keyword: Pumpkin Urad Vada
Yield: 8
Calories: 350kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1/2 கீலோ உளுந்து
  • 1/4 கிலோ பூசணி
  • 3 கைப்பிடி  கொத்த மல்லி
  • 1 கைப்பிடி கறிவேப்பிலை
  • 2 கொத்து பெரிய வெங்காயம்
  • 8 பச்சை மிளகாய்                                               
  • உப்பு தேவைக்கேற்ப
  • எண்ணெய் தேவைக்கேற்ப

செய்முறை

  • முதலில் உளுந்தை தண்ணீரில் ஊற வைத்து நன்குபஞ்சு போல அரைத்துக் கொள்ளவும். அரைக்கும் போது தண்ணீர் அதிகம் சேர்க்காமல் அரைக்கவும். பிறகு சாம்பல் பூசணியை துருவி அதில் சேர்க்கவும்.
  • பின் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்த மல்லி மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கி, பின் உப்பு சேர்த்து பிசையவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்த கலவையை தட்டையாக தட்டி பொரித்து எடுக்கவும். இப்போது சூடான சுவையான பூசணி உளுந்து வடை தயார்.
  • இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் இதனை தக்காளி சட்னி மற்றும் சாம்பருடன் வைத்து சாப்பிட நன்றாக இருக்கும்.

Nutrition

Serving: 500g | Calories: 350kcal | Carbohydrates: 58.5g | Protein: 7g | Fat: 0.02g | Sodium: 3mg | Potassium: 55mg | Fiber: 3g | Calcium: 20mg