காலை டிபனுக்கு பக்காவான முள்ளங்கி ஊத்தாப்பம் ஒரு தடவை இப்படி செய்து பாருங்கள்! 2 ஊத்தாப்பம் அதிகமாவே சாப்பிடுவாங்க!

தென்னிந்தியாவை பொறுத்தவரை, இட்லி மற்றும் தோசை என்பது தவிர்க்க முடியாத ஒரு உணவாகும். இதிலும் தோசை என்று எடுத்துக் கொண்டால் பேப்பர் ரோஸ்ட் தோசை, ஊத்தப்பம், வெங்காய ஊத்தப்பம், வெங்காய தோசை, கேரட் தோசை, புதினா தோசை, மல்லி தோசை, பன்னீர் தோசை.மசாலா தோசை மற்றும் கீரை தோசை என இதில் நிறைய

By Prem Kumar · 10/5/2024

தென்னிந்தியாவை பொறுத்தவரை, இட்லி மற்றும் தோசை என்பது தவிர்க்க முடியாத ஒரு உணவாகும். இதிலும் தோசை என்று எடுத்துக் கொண்டால் பேப்பர் ரோஸ்ட் தோசை, ஊத்தப்பம், வெங்காய ஊத்தப்பம், வெங்காய தோசை, கேரட் தோசை, புதினா தோசை, மல்லி தோசை, பன்னீர் தோசை.மசாலா தோசை மற்றும் கீரை தோசை என இதில் நிறைய வகைகள் இருக்கின்றன. வீடுகளில் ஒவ்வொரு நாளும் ஒரே தோசை வகையை செய்து சாப்பிட்டு சலித்து போய் இருக்கலாம் ஆகவே சற்று வித்தியாசமான முறையில் ஊத்தப்பம் செய்து பார்க்கலாமே.

காலையில் எப்பொழுதும் பொங்கல், இட்லி, தோசை என்று அரைச்ச மாவையே திரும்பி திரும்பி அரைக்கிறீர்களா?? கவலை வேண்டாம், சுவையும், சத்தும் கலந்த ஒரே உணவு முள்ளங்கி ஊத்தாப்பம். ஊத்தாப்பம் அப்படினாலே எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். கடைகளில் ஊத்தாப்பங்கள் வாங்கி சாப்பிடாத ஆட்களே இருக்க மாட்டாங்க. அந்த காலத்தில் பாட்டி செய்யும் ஊத்தாப்பத்தின் சுவையை தனி. அதை அடிச்சிக்க ஆளே கிடையாது. அந்த ஊத்தாப்பத்தை வெச்சி தான் இன்றைய காலத்தில் பீட்சா என்ற ஒரு உணவை கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

நமது தென்னிந்திய உணவு வகையில் கொழுப்பு குறைந்த, புரதம் நிறைந்த உணவுகள் ஏராளமாக உள்ளன. அதில் ஒன்று தான் ஊத்தாப்பம். புரதம் உள்ள உணவுகளை நீங்கள் உண்ணும்போது உங்களுக்கு நிறைவாக உண்ட உணர்வைத் தரும். எடை அதிகரிப்பும் ஏற்படுத்தாது. இந்த முள்ளங்கி ஊத்தாப்பத்துக்கு கொத்தமல்லி சட்னி வச்சு சாப்பிடும்போது அவ்வளவு ஒரு சுவையா இருக்கும். இந்த ஊத்தாப்பத்தை வீட்லயே செய்து கொடுக்கும் போது குழந்தைகளுக்கு ஹெல்தியாவும் இருக்கும் அதே நேரம் பிடிச்ச மாதிரியான ஒரு உணவாகவும் இருக்கும்.

இதனையும்‌ படியுங்கள் : சத்துக்கள் நிறைந்த முளைக்கீரையில் ஒரு தரம் சாம்பார் இப்படி செய்து பாருங்கள் அட்டகாசமான ருசியில் இருக்கும்!

Recipes AMP · Quick view
View full