Advertisement
சைவம்

இரவு உணவுக்கு ராகி குலுக்கு ரொட்டி இப்படி செய்து பாருங்க! இதன் ருசி அசத்தலாக இருக்கும்!!!

Advertisement

வீட்டில் இட்லி மாவு, தோசை மாவு இல்லை என்ற கவலை இனி தேவையே இல்லை. சட்டென பத்தே நிமிடத்தில் இந்த ராகி குலுக்கு ரொட்டி ரெடி பண்ண முடியும். எந்தெந்த பொருட்களை வைத்து இந்த ராகி குலுக்கு ரொட்டி தயார் செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இன்ட்ரஸ்டிங்கான இந்த ரெசிபியை உங்க வீட்ல கட்டாயம் ஒரு வாட்டி செஞ்சு பாருங்க. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்கள் எப்பொழுதும் ஒரே மாதிரியான தோசையை சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருப்பீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த ராகி குலுக்கு ரொட்டி நீங்கள் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.

இந்த தோசை உடன் நீங்கள் சாம்பார் சட்னி எது வைத்து சாப்பிட்டாலும் மிகவும் ருசியாக இருக்கும். அதிலும் கார சட்னியுடன் நீங்கள் இந்த தோசையை சாப்பிடும் பொழுது அதன் சுவையை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. அதனால் இன்று இவ்வளவு ருசியான ராகி குலுக்கு ரொட்டி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் குறித்து தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்

Advertisement

ராகி குலுக்கு ரொட்டி | Ragi Kulukku Rotti Recipe In Tamil

Print Recipe
வீட்டில் இட்லி மாவு, தோசை மாவு இல்லை என்ற கவலை இனி தேவையே இல்லை. சட்டென பத்தே நிமிடத்தில் இந்த ராகி குலுக்கு ரொட்டி ரெடி பண்ண முடியும். எந்தெந்த பொருட்களை வைத்து இந்த ராகி குலுக்கு ரொட்டி தயார் செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இன்ட்ரஸ்டிங்கான இந்த ரெசிபியை உங்க வீட்ல கட்டாயம் ஒரு வாட்டி செஞ்சு பாருங்க. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்கள் எப்பொழுதும் ஒரே மாதிரியான தோசையை சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருப்பீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த ராகி குலுக்கு ரொட்டி நீங்கள் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.
Advertisement
Course Breakfast, dinner
Cuisine tamilnadu
Keyword Raagi Kuluku roti
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 160

Equipment

  • 1 பெரிய பவுள்
  • 1 தோசை கல்

Ingredients

  • 1/2 கப் ராகி மாவு
  • எண்ணெய்
  • வறுத்த வேர்க்கடலை
  • ஏலக்காய்த்தூள்
  • உப்பு

பாகு செய்ய :

  • 1 கப் வெல்லம்
  • 1 கப் தண்ணீர்

Instructions

  • வேர்கடலையை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.கேழ்வரகு
    Advertisement
    மாவையும் உப்பையும் கலந்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மிருதுவாகப் பிசைந்து மூடி போட்டு பத்து நிமிடம் தனியாக வைக்கவும்.
  • அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடானதும், பிசைந்த மாவை சிறு உருண்டையாக பிடித்து எடுத்து தவாவின் நடுவில் வைத்து கைகளால் தட்டி தட்டி தட்டையாக ஆக்கவும், சுற்றிலும் எண்ணெய் விட்டு பிரவுன் நிற புள்ளிகள் வரும் .ஐந்து நிமிடம் வேக விடவும். ரொட்டி முக்கால் பதம் வேகவேண்டும். மறுபுறமும் இதேபோல வேகவிட்டு எடுத்து தட்டில் வைக்கவும். இதேபோல மீதம் இருக்கும் உருண்டைகளையும் வேகவைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
  • வேகவைத்த ரொட்டிகளை எல்லாம் உடைத்து மீடியம் சைஸ் துண்டுகளாக்கவும். அடுப்பில் கடாயை வைத்து தண்ணீர் ஊற்றி கொதித்ததும் வெல்லத்தைச் சேர்த்துக் கரைய விடவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி மீண்டும் பாகு தண்ணீரை அடுப்பில் வைத்து தீயைக் குறைத்து பாகு பிசுபிசுப்பு பதம் வர ஆரம்பிக்கும் போதுஉடைத்த ரொட்டித் துண்டுகளைச் சேர்த்துக் கிளறி விடவும்.
  • அடுத்து அதில் ஏலக்காய்த்தூள், பொடித்த வேர்க்கடலையை அடுப்பை அணைத்து ஆற தூவி ஆறவிட்டு மூடி போட்டு இரவு முழுவதும் ஊற விடவும். இதனைஒரு டப்பாவில் சேர்த்து இரண்டு நாட்கள் வெளியே வைத்து, பின்பு ஃப்ரிட்ஜில் வைத்தால் ஒரு வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம். சத்தான கேழ்வரகு குலுக்கு ரொட்டி

Nutrition

Serving: 300g | Calories: 160kcal | Carbohydrates: 56g | Protein: 13g | Sodium: 3.1mg | Potassium: 381mg | Fiber: 1.5g

இதையும் படியுங்கள் : சுவையான ராகி லட்டு இப்படி வீட்டிலயே செய்து பாருங்க! குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்!

Advertisement
Prem Kumar

Recent Posts

சப்பாத்திக்கு, பூரிக்கு இந்த உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா செஞ்சு கொடுங்க நாலஞ்சு அதிகமாக சாப்பிடு வாங்க!

ஊட்டச்சத்து மிகுந்து காணப்படும் காய்கறிகளில் காலிஃப்ளவருக்கு முக்கிய இடம் உண்டு. வைட்டமின் சி, மெக்னீசியம் போன்றவை நிரம்பி காணப்படுகின்றன. மேலும்,…

7 மணி நேரங்கள் ago

டிபனுக்கு வழக்கம் போல் இல்லாமல் தக்காளி மசாலா பூரி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பூரி இந்தியாவின் புகழ் பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும்…

8 மணி நேரங்கள் ago

திருச்செந்தூர் முருகனுக்கும் வைகாசி விசாகத்திற்கும் இருக்கும் தொடர்!

புதமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு பலவிதமான விழாக்கள் இருந்தாலும் உலக மக்களை காத்தருள்வதற்காக முருகப்பெருமான் அவதரித்த திருநாளாக வைகாசி விசாகம் கருதப்படுகிறது.…

9 மணி நேரங்கள் ago

எவ்வளவு செய்தாலும் காலியாகும் தித்திக்கும் சுவையில் கேரட் கீர் இப்படி செய்து பாருங்க!

கேரட் உடலுக்கு மிகவும் ஆரோக்யமான உணவு பொருள் ஆகும். கேரட்டை பச்சையாகவோ பொரியலாக சாப்பிட்டோ அலுத்து விட்டதா? அப்போது இந்த…

10 மணி நேரங்கள் ago

மாலை நேரம் ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான முட்டை கோலா உருண்டை ஒரு தடவை இப்படி செய்து பாருங்க!

பொதுவாக பலரது வீட்டில் மட்டனில் தான் கோலா உருண்டை செய்து சாப்பிடுவார்கள். ஆகவே இந்த பதிவில் வித்தியாசமான முறையில் அதாவது…

14 மணி நேரங்கள் ago

ஆட்டி படைக்கும் அக்னி நட்சத்திரம் இன்னும் 2 வாரம் ரொம்ப ஜாக்கிரதையாக இருங்கள்

கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…

14 மணி நேரங்கள் ago