குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்னாக்ஸ் இனி ஒரு முறை ராகி உருண்டை செய்து கொடுத்து பாருங்க மிகவும் விரும்பி சாப்பிடுவக. இது போன்று செய்து ஸ்டோர் பண்ணி வைத்து குழந்தைகள் கேட்க்கும் பொழுதெல்லாம் எடுத்து கொடுங்க சீக்கிரம் காலியாகிவிடும். கடைகளில் குழந்தைகள்
-விளம்பரம்-
கேட்டதெல்லாம் வாங்கி கொடுக்காமல் இது போன்று சத்துள்ள ராகி உருண்டை வீட்டிலே செய்து கொடுங்கள். இந்த ராகி உருண்டை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
ராகி உருண்டை | Ragi Laddu Recipe In Tamil
குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்னாக்ஸ் இனி ஒரு முறை ராகி உருண்டை செய்து கொடுத்து பாருங்க மிகவும் விரும்பி சாப்பிடுவக. இது போன்று செய்து ஸ்டோர் பண்ணி வைத்து குழந்தைகள் கேட்க்கும் பொழுதெல்லாம் எடுத்து கொடுங்க சீக்கிரம் காலியாகிவிடும். கடைகளில் குழந்தைகள் கேட்டதெல்லாம் வாங்கி கொடுக்காமல் இது போன்று சத்துள்ள ராகி உருண்டை வீட்டிலே செய்து கொடுங்கள். இந்த ராகி உருண்டை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Yield: 4 people
Calories: 220kcal
Equipment
- 1 தோசை கல்
- 1 மிக்ஸி
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
- 1 கப் ராகி மாவு
- 1 பின்ச் உப்பு
- வறுத்த வேர்க்கடலை கொஞ்சம்
- வெல்லம் தேவையான அளவு
செய்முறை
- முதலில் ராகி மாவை ஒரு பௌலில் சேர்த்து ஒரு பின்ச் உப்பு சேர்த்து அடைப்பதத்திற்கு கொஞ்சமாக தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்.
- பிறகு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து பிசைந்து வைத்துள்ள மாவை அடை போல் தட்டி சுற்றிலும் எண்ணெய் ஊற்றி வெந்ததும் தனியாக எடுத்து ஆறவிடவும்.
- ஆறியதும் அதனை சிறு சிறு துண்டுகளாக பிச்சி எடுத்துக்கொள்ளவும்.
- அடுத்து வறுத்த வேர்க்கடலை மிக்சியில் சேர்த்து கொர கொரப்பாக அரைத்து பிச்சி வைத்த அடையில் கொட்டவும்.
- அடுத்து வெல்லத்தையும் மிக்சியில் சேர்த்து கோர கொரப்பாக அரைத்து அடையில் சேர்த்து அங்கு உதிரி உதிரியாக பிசைந்துகொள்ளவும்.
- பிசைந்த்தும் சிறு சிறு உருண்டைகளாக பிடித்து பரிமாறவும்.
Nutrition
Serving: 400G | Calories: 220kcal | Carbohydrates: 42g | Protein: 13g | Fiber: 8g | Sugar: 4.5g
இதையும் படியுங்கள் : தேங்காய் பால் லட்டு இப்படி செய்து பாருங்க! குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்!