சுட சுட சோறுடன் சாப்பிட ருசியான ராஜ்மா கத்தரிக்காய் கூட்டு ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

- Advertisement -

சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய இந்த கிட்னி பீன்ஸை ராஜ்மா என்றும் அழைக்கிறார்கள். இதை குழம்பு முதல் கூட்டு வரை பலவிதமாக சுவையாக சமைத்து சாப்பிடலாம். தினமும் ஒரு கைப்பிடி அளவு கிட்னி பீன்ஸை வேக வைத்து சுண்டலாகவும் எடுத்துக் கொள்ளலாம். உடல் எடையை குறைக்க விரும்பினால் நார்ச்சத்து நிறைந்த இந்த கிட்னி பீன்ஸை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் உள்ள நார்ச்சத்து உடல் எடை அதிகரிப்பதை தடுக்கிறது. மேலும் இதை ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டாலே போதும், உங்களுக்கு நீண்ட நேரத்திற்கு பசியுணர்வே இருக்காது. கிட்னி பீன்ஸை கொண்டு புலாவ் அல்லது குழம்பு செய்து சாப்பிடலாம். இந்த ராஜ்மா வைத்து சுண்டல், கிரேவி, சப்ஜி என்று பல விதங்களில் சமைக்கலாம். அந்த வகையில் இன்று நாம் ராஜ்மா வைத்து ஸ்பைசியான ராஜ்மா கத்தரிக்காய் கூட்டை காண உள்ளோம். இதனை பூரி, சப்பாத்தி, புல்கா, சாதம் போன்றவற்றிற்கு வைத்து சாப்பிட அருமையாக இருக்கும்.

-விளம்பரம்-

இது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பதோடு, நாவிற்கு சுவையையும் தரக்கூடிய ஒரு ரெசிபி. ரொம்ப ரொம்ப சுலபமா வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சட்டுனு இந்த ரெசிபியை செய்திடலாம். இதனை பெரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள். இந்த ராஜ்மாவை வட இந்திய மாநிலத்தில் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இப்போது தென்னிந்திய மாநிலத்திலும் அதிகளவு சமையலில் உபயோகிக்கின்றனர். இந்த ராஜ்மாவிற்கு சிவப்பு காராமணி என்று மற்றொரு பெயரும் உள்ளது. ராஜ்மாவை உணவில் அதிகமாக சேர்த்துக்கொண்டால் உடலானது எப்போதும் ஆரோக்கியத்துடன் காணப்படும். இந்த பதிவில் சத்துக்கள் நிறைந்த ராஜ்மா கத்தரிக்காய் கிரேவி எப்படி செய்யலாம் என்பதை தெரிந்துகொள்ளுவோம்.

- Advertisement -
Print
No ratings yet

ராஜ்மா கத்தரிக்காய் கூட்டு | Rajma Brinjal Koottu Recipe In Tamil‌

சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய இந்த கிட்னி பீன்ஸை ராஜ்மா என்றும் அழைக்கிறார்கள். இதை குழம்பு முதல் கூட்டு வரை பலவிதமாக சுவையாக சமைத்து சாப்பிடலாம். தினமும் ஒரு கைப்பிடி அளவு கிட்னி பீன்ஸை வேக வைத்து சுண்டலாகவும் எடுத்துக் கொள்ளலாம். உடல் எடையை குறைக்க விரும்பினால் நார்ச்சத்து நிறைந்த இந்த கிட்னி பீன்ஸை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் உள்ள நார்ச்சத்து உடல் எடை அதிகரிப்பதை தடுக்கிறது. மேலும் இதை ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டாலே போதும், உங்களுக்கு நீண்ட நேரத்திற்கு பசியுணர்வே இருக்காது. கிட்னி பீன்ஸை கொண்டு புலாவ் அல்லது குழம்பு செய்து சாப்பிடலாம். இந்த ராஜ்மா வைத்து சுண்டல், கிரேவி, சப்ஜி என்று பல விதங்களில் சமைக்கலாம். அந்த வகையில் இன்று நாம் ராஜ்மா வைத்து ஸ்பைசியான ராஜ்மா கத்தரிக்காய் கூட்டை காண உள்ளோம்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: dinner, LUNCH
Cuisine: Indian
Keyword: Rajma Brinjal Koottu
Yield: 4 People
Calories: 112kcal

Equipment

  • 1 குக்கர்
  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 கப் ராஜ்மா
  • 8 கத்தரிக்காய்
  • 2 பெரிய வெங்காயம்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/4 கப் புளி கரைசல்
  • உப்பு தேவையான அளவு
  • நல்லெண்ணெய் தேவையான அளவு

அரைக்க :

  • 1 கப் தேங்காய் துருவல்
  • 6 வர ‌மிளகாய்
  • 10 பல் பூண்டு
  • 15 சின்ன வெங்காயம்
  • 1 துண்டு இஞ்சி
  • 2 தக்காளி                      
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் மல்லி

செய்முறை

  • முதலில் ராஜ்மாவை இரவு முழுவதும் ஊற வைத்து கொள்ளவும்.
  • பின் இதனை கழுவி ஒரு குக்கரில் சேர்த்து அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 4 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
  • இவை ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் அதே கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சோம்பு சேர்த்து தாளிக்கவும். பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • பின் வெங்காயம் வதங்கியதும் கத்தரிக்காயை சேர்த்து வதக்கவும். கத்தரிக்காய் பாதி வெந்ததும் வேகவைத்த ராஜ்மா சேர்த்து அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து விடவும்.
  • அதன்பிறகு நாம் அரைத்து வைத்துள்ள விழுது, புளிக்கரைசல் சேர்த்து நன்கு கிளறி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து கொதிக்க விடவும்.
  • தண்ணீர் நன்கு சுண்டி கூட்டு கொஞ்சம் கெட்டியாக கொதித்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான ஆரோக்கியமான ராஜ்மா கத்தரிக்காய் கூட்டு தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 112kcal | Carbohydrates: 20g | Protein: 7.5g | Fat: 1.4g | Sodium: 34mg | Potassium: 634mg | Fiber: 5.5g | Vitamin A: 313IU | Vitamin C: 14.7mg | Calcium: 136mg | Iron: 2.4mg

இதனையும் படியுங்கள் : ராஜ்மா மசாலா காரசாரமான ருசியில் இப்படி ஒரூ தரம் செஞ்சி பாருங்க! பூரி சப்பாத்தி புலாவ் கூட எல்லாம் வெச்சு சாப்பிட அட்டகாசமாக இருக்கும்!