Home அசைவம் ருசியான ரங்கூன் சிக்கன் இதே முறையில் செய்து பாருங்கள்! இந்த ரெசிபி புது விதமான ருசியில்...

ருசியான ரங்கூன் சிக்கன் இதே முறையில் செய்து பாருங்கள்! இந்த ரெசிபி புது விதமான ருசியில் இருக்கும்!

இன்னைக்கு சிக்கன் வெரைட்டில நம்ம செய்யப் போற சிம்பிள் ஆனா சிக்கன் ரங்கூன் சிக்கன். இந்த ரங்கூன் சிக்கன் ரொம்ப சுவையாகவும் டேஸ்டாவும் இருக்கும். இந்த ரங்கூன் சிக்கன் செய்யறது ரொம்பவே சுலபம். ரொம்பவே குறைந்த பொருட்களை வைத்து ரொம்ப சுவையா சீக்கிரமா செய்திடலாம் இந்த ரங்கூன் சிக்கனை செய்வதற்கு நமக்கு அதிகமான பொருட்கள் தேவைப்பட போவதில்லை.

-விளம்பரம்-

இந்த ரங்கூன் சிக்கனை தக்காளி சாஸ் யூஸ் பண்ணி செய்வாங்க. ஆனா நம்ம பிரஷ் ஆன தக்காளி அரைச்சு செய்யப்போறோம். அது மட்டும் தான் மாறுபட போகுது. இந்த ரங்கூன் சிக்கன் எல்லாம் சாப்பாட்டுக்கும் சைடிஷா சாப்பிடுவதற்கு ரொம்பவே நல்லா இருக்கும்.  ஒரு நாளைக்கு ஒரு ஒரு விதமான சிக்கன் செய்து கொடுக்கும்போது வீட்ல இருக்கவங்க எல்லாருமே கேட்பாங்க வித்யாசமா எப்படி மசாலா யூஸ் பண்ணி சிக்கன் செய்றீங்க.

எல்லா நாளும் ஒரே மாதிரியான சமையல் சாப்பிடவே இல்லை ஒரு ஒரு நாளைக்கு சிக்கன் புது விதமான டேஸ்ல இருக்கு அப்படின்னு சொல்லி ரொம்பவே உங்களை பாராட்டுவாங்க. அப்படி அருமையான பல பாராட்டுகளை வாங்குவதற்கு விதவிதமா சிக்கன் செய்து நீங்க அசத்த வேண்டியதுதான்.

உங்களுக்கு கிடைக்க போற பாராட்டு அப்படிங்கறது அவங்க வயிறார சாப்பிட்டு சந்தோஷமா சிரிச்சு ரொம்பவே நல்லா இருக்கு அப்படின்னு சொல்ல போற அந்த ஒத்த வார்த்தை தான். அப்படி நல்ல சுவையா வயிறு நிறைய அவங்க சாப்பிடுவதற்கு இப்ப நாம இந்த ரங்கூன் சிக்கனை எப்படி செய்ய போறோம் அப்படின்னு தெரிஞ்சுக்க போறோம் வாங்க.

Print
4 from 4 votes

ரங்கூன் சிக்கன் | Rangoon Chicken Recipe In Tamil

இன்னைக்கு சிக்கன் வெரைட்டில நம்ம செய்யப் போற சிம்பிள்ஆனா சிக்கன் ரங்கூன் சிக்கன். ரங்கூன் சிக்கனை தக்காளி சாஸ் யூஸ் பண்ணி செய்வாங்க. ஆனா நம்ம பிரஷ் ஆன தக்காளி அரைச்சு செய்யப்போறோம்.அது மட்டும் தான் மாறுபட போகுது. இந்த ரங்கூன் சிக்கன் எல்லாம் சாப்பாட்டுக்கும் சைடிஷாசாப்பிடுவதற்கு ரொம்பவே நல்லா இருக்கும்.  ஒருநாளைக்கு ஒரு விதமான சிக்கன் செய்து கொடுக்கும்போது வீட்ல இருக்கவங்க எல்லாருமே கேட்பாங்கவித்யாசமா எப்படி மசாலா யூஸ் பண்ணி சிக்கன் செய்றீங்க.
Prep Time5 minutes
Active Time9 minutes
Course: Side Dish, starters
Cuisine: tamil nadu
Keyword: Rangoon Chicken
Yield: 4
Calories: 99.93kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 12 கிலோ சிக்கன்
  • 1 வெங்காயம்
  • 2 பச்சைமிளகாய்
  • 12 கப் தக்காளி விழுது
  • 1 தக்காளி
  • 1 ஸ்பூன் மிளகுதூள்
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 ஸ்பூன் மல்லிதூள்
  • 1/2 ஸ்பூன் சீரகதூள்
  • 1 ஸ்பூன் கரமசாலா
  • 1 ஏலக்காய்
  • 1/2 ஸ்பூன் சீனி
  • எண்ணெய் தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் சிக்கனை கழுவி சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் சுத்தம்செய்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து அதில் மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்துஒரு பத்து நிமிஷம் வைத்து விட வேண்டும். சிக்கன் பத்து நிமிடம் ஊறி பிறகு அடுப்பில்ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊறவைத்து எடுத்துள்ள சிக்கன் களைஅதில் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • இப்படி வறுக்கும் பொழுது சிக்கன் அரைப்பதம் வெந்துவிடும் சிக்கனில் நிறம் மாறி வரும் பொழுது அவற்றை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி ஏலக்காய் சேர்த்துபின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு அதில் அரைத்துவைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
  • பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும். பின்பு அதில் மிளகாய் தூள், மல்லிதூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
  • அதோடு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக ஒரு ஐந்து நிமிடம் கலந்து விட்டு பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளிகளை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • இதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக மசாலாக்களை பச்சை வாசனை போகும் அளவிற்கு வேக வைக்கவும்.இப்பொழுது இதில் வறுத்து எடுத்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  • இறுதியாக சிக்கன் வெந்த பிறகு இதில் சீனி சேர்த்து நன்றாக கலந்து எடுத்து பரிமாறினால் சுவையான ரங்கூன் சிக்கன் தயார்.

Nutrition

Calories: 99.93kcal | Carbohydrates: 13.91g | Protein: 3.49g | Sodium: 54.88mg | Potassium: 77.95mg | Fiber: 1.24g | Vitamin C: 654mg | Calcium: 23.13mg | Iron: 0.29mg