சமைக்கத் தெரியாதவர் ரசம் வைத்தால் கூட சுவையாக இருக்கும், வீட்டிலேயே அரைக்கும் இந்த ரசம் பொடி ரகசியம் தெரிந்தால்!

- Advertisement -

மதிய உணவிற்காக சாதம் செய்து குழம்பு, கூட்டு, பொரியல் என்று பலவிதமான டிஷ்களை செய்து வைத்தாலும் இறுதியாக ரசம் ஊற்றி சாப்பிட்டால் மட்டும்தான் முழு திருப்தியாக இருக்கும். ஒரு சில வீடுகளில் தினமும் ரசம் வைப்பார்கள். நாம் சாப்பிடும் உணவுகள் அனைத்தும் சரியான முறையில் செரிமானம் ஆவதற்காக ரசத்தை இறுதியாக சாப்பிடுகிறோம். இதில் சேர்த்துள்ள மசாலா பொருட்கள் அனைத்தும் நமது உடலின் சீரண சக்தியை அதிகரிக்கின்றன.

-விளம்பரம்-

எனவே எந்த உணவை சாப்பிட்டாலும் இறுதியாக ரசத்தை சிறிதளவு சேர்த்து சாப்பிட்டோம் என்றால் வயிற்று பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது. அவ்வாறு தினமும் ரசம் வைப்பதை மிகவும் சுலபமாக்கும் வகையில் இந்த ரச பொடியை அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். மூன்று மாதங்கள் ஆனாலும் இதனை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

கல்யாண வீட்டு ரசம் போல அலாதியான சுவையில் சப்புக் கொட்டி சாப்பிடும் அளவிற்கு இருக்கக்கூடிய இந்த ரசப்பொடியை இதே அளவுகளில் ஒரு முறை செய்து பாருங்கள். பிறகு எப்பொழுதும் இப்படியே செய்ய ஆரம்பித்து விடுவீர்கள். ரசம் என்றால் அதற்கு இந்த ரசப்பொடி தான் மிகவும் முக்கியம்.

அவசரத்திற்கு ரசப்பொடி அரைத்து ரசம் வைக்க முடியாதவர்கள், இது போல மொத்தமாக அரைத்து வைத்துக் கொண்டால் ஐந்தே நிமிடத்தில் சட்டென சூப் போல சூப்பரான ரசத்தை வைத்து வேலையை முடித்து விடலாம். பாட்டி காலத்து கைப்பக்குவத்தில் சுவையான ரசப்பொடி அரைக்கும் ரகசியத்தை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

Print
No ratings yet

ரசப்பொடி | Rasam Podi Recipe In Tamil

கல்யாண வீட்டுரசம் போல அலாதியான சுவையில் சப்புக் கொட்டி சாப்பிடும் அளவிற்கு இருக்கக்கூடிய இந்தரசப்பொடியை இதே அளவுகளில் ஒரு முறை செய்து பாருங்கள். பிறகு எப்பொழுதும் இப்படியே செய்யஆரம்பித்து விடுவீர்கள். ரசம் என்றால் அதற்கு இந்த ரசப்பொடி தான் மிகவும் முக்கியம்.அவசரத்திற்கு ரசப்பொடி அரைத்து ரசம் வைக்க முடியாதவர்கள், இது போல மொத்தமாக அரைத்துவைத்துக் கொண்டால் ஐந்தே நிமிடத்தில் சட்டென சூப் போல சூப்பரான ரசத்தை வைத்து வேலையைமுடித்து விடலாம். பாட்டி காலத்து கைப்பக்குவத்தில் சுவையான ரசப்பொடி அரைக்கும் ரகசியத்தைநீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.
Prep Time5 minutes
Active Time5 minutes
Course: Rasam
Cuisine: tamil nadu
Keyword: Rasam Podi
Yield: 4
Calories: 134kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • 2 கப் தனியா
  • 1 கப் துவரம்பருப்பு
  • 1 கப் சீரகம்
  • 1 கப் மிளகு
  • 10 காய்ந்த மிளகாய்

செய்முறை

  • துவரம்பருப்பு,மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து, ஒன்றுசேர்த்து பொடித்துக்கொள்ளவும்.
  • புளியைக் கரைத்து இந்த ரசப்பொடி, உப்பு சேர்த்து, ஒரு தக்காளியை நறுக்கிப் போட்டு, கொதிக்கவிட்டு 10 நிமிடத்தில் ரசம் தயாரித்துவிடலாம்.
  • சிறிதளவுநெய்யில் கடுகு தாளித்து, பெருங்காயத்தூள் சேர்த்தால்…
  • மணம்,ருசி ஆளை அசத்தும்.

Nutrition

Serving: 100g | Calories: 134kcal | Carbohydrates: 63g | Protein: 6g | Sodium: 5mg | Potassium: 56mg