ருசியான மதுரை ஸ்டைல் ஆட்டு ரத்த வறுவல் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்..!
அசைவ உணவிற்கு நிறைய உயிரினங்கள் இந்த புவியில் இருந்தாலும், ஆடுகள் பங்களிப்பு அபரிவிதமானது. ஆட்டின் எந்த உறுப்பும் வீணாகாது. அந்த வகையில் ஆட்டு ரத்தம் மூலம் தயாரிக்கப்படும் ரத்த வறுவல், பலருக்கும் காலை டிபன் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? பல இடங்களில் சைடு டிஷ் ஆகவும் பயன்படுத்த
அசைவ உணவிற்கு நிறைய உயிரினங்கள் இந்த புவியில் இருந்தாலும், ஆடுகள் பங்களிப்பு அபரிவிதமானது. ஆட்டின் எந்த உறுப்பும் வீணாகாது. அந்த வகையில் ஆட்டு ரத்தம் மூலம் தயாரிக்கப்படும் ரத்த வறுவல், பலருக்கும் காலை டிபன் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? பல இடங்களில் சைடு டிஷ் ஆகவும் பயன்படுத்தவும் ரத்த வறுவல், சுவையான, ருசியான உணவு என்பது அதை வழக்கமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு தெரியும். வார இறுதியில் ஒரு அற்புதமான ரெசிபியை வீட்டில் சமைத்து சாப்பிட விரும்புகிறீர்களா? உங்களுக்கு ரத்த வறுவல் பிடிக்குமா? அப்படியானால் அந்த ரத்த வறுவல் இந்த வாரம் வீட்டில் செய்து சாப்பிடுங்கள். அதுவும் மதுரை ஸ்டைல் ரத்த வறுவல் மிகவும் ருசியாக இருக்கும். அதோடு ரத்த பொரியல் சத்தானதும் கூட. ஏனெனில் ஆட்டு ரத்தத்தில் CLA உள்ளது. இது புற்றுநோயை தடுக்கும் கொழுப்பு அமிலம் மற்றும் இது வீக்கத்தைத் தடுக்கிறது.
இது தவிர இதில் பி வைட்டமின் உள்ளது. இது உடலில் கொழுப்பை எரிக்க உதவுகிறது. கூடுதலாக, இதில் புரோட்டீன்கள் அதிகமாகவும், மாட்டிறைச்சியை விட நிறைவுற்ற கொழுப்பு குறைவாக உள்ளது. டயட்டில் இருப்பவர்களுக்கு இது நல்லது. இரும்பு சத்து அதிகம் நிறைந்துள்ள ஆட்டு ரத்த வறுவல் ஒரு முறை இப்படி செஞ்சி குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. அதுமட்டும் அல்லாமல் மிகவும் ஆரோக்கியமானதும் கூட. இதை தயாரிப்பது ரொம்ப ரொம்ப எளிது. 2 நிமிட மேஹியை விட எளிதில் தயாரித்து விடலாம். இந்த பதிவில் மதுரை ஸ்டைல் ரத்த வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ஆட்டுக்கறி சாப்ஸ் இப்படி செய்து பாருங்க! திரும்ப திரும்ப சிக்கன் ரெசிபி செய்வதற்கு இப்படி செய்யுங்கள்!