இனி ருசியான ரவா இட்லி இப்படி செய்து பாருங்க! எவ்வளவு செய்தாலும் காலியாகும் ஒரு இட்லி கூட மீதமாகாது!

- Advertisement -

எப்பபாத்தாலும் ஒரே வகையான உணவுப் பொருட்களை, சாப்பிடுவதை தவிர்த்து விட்டு, புதுவிதமான, சுலபமான உணவுகளை நம்முடைய வீட்டில் சமைத்து, குழந்தைகளுக்கு கொடுப்பது, வீட்டில் உள்ள பெண்களுக்கு மன திருப்தியைக் கொடுக்கும். அந்த வரிசையில் ரவா இட்லி, சூப்பர் டிபன். நிறைய பேருக்கு இது புடிக்கும்.  வழக்கமான இட்லி, தோசை என்று சமைத்து கொடுக்காமல் அதே இட்லியை சற்று வித்தியாசமான முறையில் சுவையாக செய்து கொடுத்து பாருங்கள்.நான்கு இட்லி சாப்பிடுபவர்கள் கூட இன்னும் இரண்டு இட்லி வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

-விளம்பரம்-

சதா இட்லி, தோசை என்று சாப்பிட்டு அழுத்து போனவர்களுக்கு இந்த ரவா இட்லி ஒரு வித்தியாசமான சுவையைக் கொடுக்கும்.இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும். இதனுடன் தொட்டுக்கொண்டு  வெங்காய சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி, தேங்காய் சட்னி இவற்றில் எதை வேண்டுமானாலும் சேர்த்து தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். இதனை செய்வதற்கு நேரமும் மிகவும் குறைந்த அளவு தான் தேவைப்படும்.  நம்ம வீட்ல சுடச்சுட ரவா இட்லி எப்படி செய்யறது என்று பார்க்கலாம் வாங்க  

- Advertisement -
Print
4.67 from 3 votes

ரவா இட்லி | Rava Idly Recipe In Tamil

சதா இட்லி, தோசை என்று சாப்பிட்டு அழுத்து போனவர்களுக்கு இந்த ரவா இட்லி ஒரு வித்தியாசமான சுவையைக் கொடுக்கும்.இதன் சுவை மிகவும் அருமையாகஇருக்கும். எப்பபாத்தாலும் ஒரே வகையான உணவுப் பொருட்களை, சாப்பிடுவதை தவிர்த்து விட்டு, புதுவிதமான, சுலபமான உணவுகளைநம்முடைய வீட்டில் சமைத்து, குழந்தைகளுக்கு கொடுப்பது, வீட்டில் உள்ள பெண்களுக்கு மனதிருப்தியைக் கொடுக்கும். அந்த வரிசையில் ரவா இட்லி, சூப்பர் டிபன். நிறைய பேருக்குஇது புடிக்கும்.  வழக்கமான இட்லி, தோசை என்று சமைத்து கொடுக்காமல் அதே இட்லியை சற்று வித்தியாசமான முறையில் சுவையாக செய்து கொடுத்து பாருங்கள்.நான்கு இட்லி சாப்பிடுபவர்கள் கூட இன்னும் இரண்டு இட்லிவேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamilnadu
Keyword: Rava Idly
Yield: 4
Calories: 272kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 டம்ளர் வெள்ளை ரவை
  • 1 கேரட் துருவியது
  • தேங்காய் துருவல் சிறிது
  • 1 பச்சை மிள்காய்
  • 1 டம்ளர் தயிர்
  • தண்ணீர்
  • உப்பு தேவையான அளவு

தாளிக்க:

  • 1/4 டீஸ்பூன் கடுகு தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் கடலை பருப்பு தேவையான அளவு
  • முந்திரி தேவையான அளவு

செய்முறை

  • கேரட்டை துருவி வைக்கவும், பச்சை மிளகாய் மட்டும் தனியாககாரத்துக்கு ஏற்ப மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து தாளிக்க கொடுத்தவற்றை தாளிக்கவும்,பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், அரைத்த பச்சை மிளகாய் போட்டு வாசம் போகும் வரை வதக்கவும்.நன்கு வதங்கியவுடன் அதோடு ரவையை கொட்டி 5 நிமிடம் வதக்கவும்
  • பின் வதக்கிய அனைத்தையும் ஆற வைக்கவும், ஆறிய பிறகு தயிர், உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்குகலந்துக் கொள்ளவும்.
     
  • இட்லி தட்டில் துருவிய தேங்காய், கேரட் வைத்து அதன் மேல் இந்த மாவை ஊற்றி, இட்லியை போல வேக வைத்துஎடுக்கவும்.
  • சுவையான ரவா இட்லி ரெடி

செய்முறை குறிப்புகள்

இதற்கு தேங்காய் சட்னி நல்ல காம்பினேஷன்.

Nutrition

Serving: 300g | Calories: 272kcal | Carbohydrates: 45g | Protein: 21g | Fat: 6g | Saturated Fat: 0.8g | Sodium: 390mg | Fiber: 1.2g | Calcium: 28mg | Iron: 2.7mg