காரசாரமான ருசியில் வாழைக்காய் சேவ் பொரியல் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!

- Advertisement -

வாழைக்காய் உணவுகள் அப்படின்னா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். அதுலயும் வாழைக்காய் வறுவல் அப்படின்னா அதுக்கு விரும்பப்படுறவங்க அதிகமாகவே இருக்காங்க. அப்படியே வாழைக்காயில் வறுவல் , பஜ்ஜி, குழம்புகளை கூட போட்டு செய்து சாப்பிட்டு இருப்போம்.இப்ப நம்ம பண்ண போறது இந்த வாழைக்காயில் சேவ் பொரியல் செய்ய போறோம். இந்த பொரியல் காரக்குழம்புக்கும், வத்த குழம்புக்கும் சூப்பரான சுவையான இருக்கும்.

-விளம்பரம்-

வாழைக்காய் வறுவல் அப்படின்னா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் இருந்தாலும் இந்த சேவ் ரொம்ப வித்தியாசமான இருக்கும். இந்த வாழைக்காய் பொரியல் ரொம்பவே சுவையானது. இந்த மாதிரி வாழைக்காய் பொரியல் செய்து சாப்பிட்டீங்கன்னா ரொம்ப பிடிக்கும். எப்பவும் வறுவல் சாப்பிடுறவங்களுக்கு இந்த மாதிரி பொரியல் செய்து கொடுக்கும்போது அது வித்தியாசமாகவும் இருக்கும் ரொம்ப விரும்பியும் சாப்பிடுவாங்க. எப்பவுமே காய்கறிகளை இந்த மாதிரி ஒரே மாதிரியான வறுவல் செய்து சாப்பிடுறவங்களுக்கு அந்த காய்கறி வித்தியாசமா ஏதாவது செய்து கொடுத்தோம்னா ரொம்பவே பிடிக்கும். எல்லாருக்குமே அப்படித்தான்

- Advertisement -

ஒரே மாதிரியா அந்த காய்களை செய்து கொண்டு இருக்கும் போது ஒரு சலிப்பு தட்டாம இருக்கணும் அப்படி சலிப்பு தட்டாமல் இருக்கணும்னா அவங்களுக்கு அந்த காய்கறிகள்ல வேற வேற விதமான உணவு வகைகளை செய்து கொடுக்கணும். அப்படி கொடுக்கும்போது அவங்களுக்கு இது ரொம்பவே பிடித்த மாதிரி போயிடும் இல்லனா அந்த காய் மேல இருக்கிற விருப்பம் குறைய ஆரம்பிச்சுடும். இந்த ருசியான வாழைக்காய் சேவ் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Print
4.50 from 2 votes

வாழைக்காய் சேவ் பொரியல் | Raw Banana Sev Poriyal

வாழைக்காய் வறுவல் அப்படின்னா எல்லாருக்கும்ரொம்ப பிடிக்கும் இருந்தாலும் இந்த சேவ் ரொம்ப வித்தியாசமான இருக்கும். இந்த வாழைக்காய்பொரியல் ரொம்பவே சுவையானது. இந்த மாதிரி வாழைக்காய் பொரியல் செய்து சாப்பிட்டீங்கன்னாரொம்ப பிடிக்கும். எப்பவும் வறுவல் சாப்பிடுறவங்களுக்கு இந்த மாதிரி பொரியல் செய்துகொடுக்கும்போது அது வித்தியாசமாகவும் இருக்கும் ரொம்ப விரும்பியும் சாப்பிடுவாங்க.எப்பவுமே காய்கறிகளை இந்த மாதிரி ஒரே மாதிரியான வறுவல் செய்து சாப்பிடுறவங்களுக்குஅந்த காய்கறி வித்தியாசமா ஏதாவது செய்து கொடுத்தோம்னா ரொம்பவே பிடிக்கும். எல்லாருக்குமேஅப்படித்தான்
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH, Side Dish
Cuisine: tamil nadu
Keyword: Raw Banana Sev Poriyal
Yield: 4
Calories: 245kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 3 வாழைக்காய்
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
  • 2 காய்ந்த மிளகாய்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 2 வெங்காயம்
  • 1 கப் தேங்காய் துருவல்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் வாழைக்காயின் காம்பையும் நுனியையும் நறுக்கிவிட்டு கழுவி விட்டு ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • ஆவியில் வேக வைத்து எடுத்த வாழைக்காயை தோலை நீக்கிவிட வேண்டும். தோலை நீக்கினால் வாழைக்காய் சமேலே கருப்பாக தெரியும். அது வேக வைத்ததினால் வந்தது.
     
  • பிறகு வைத்து வேக வைத்த வாழைக்காய் துருவி எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு,கறிவேப்பிலை சேர்த்து நன்றாக தாளித்துக் கொள்ளவும்.
  • பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ளவெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு அதில்துருவி வைத்த வாழை காய்களை சேர்த்து நன்றாக கலந்து விட்டு உப்பு சேர்த்து கலந்து மூடிபோட்டு வேக வைக்கவும்.
  • பிறகு அதில் துருவி வைத்த தேங்காய் பூவை சேர்த்து பரிமாறினால் சுவையான வாழைக்காய் சேவ் பொரியல் தயார்.                                

Nutrition

Serving: 100g | Calories: 245kcal | Carbohydrates: 32g | Protein: 3g | Sodium: 213mg | Potassium: 23.2mg | Fiber: 1.4g | Calcium: 23.34mg

இதையும் படியுங்கள் : குக் வித் கோமாளி மைம் கோபியின் வாழைக்காய் கோப்தா கறி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!!