கேரளா பலாக்காய் கிரேவி இப்படி செய்து பாருங்க! இந்த கிரேவியின் ருசியே தனி தான்!

- Advertisement -

பலாப்பழம் முக்கனிகளுள் ஒன்று. பலாப்பழ வாசனையை மூடி மறைக்க முடியாது. பலாச்சுளையின் சுவையை வெறுப்போரும் இருக்க முடியாது. மிக அதிக இனிப்புச்சுவையுடைய பழங்களில் ஒன்று. ஆனால் பலாக்காயை நான் அவசியம் சாப்பிட வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால் இந்த

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : கேரளா கத்தரிக்காய் தொக்கு இப்படி செய்து பாருங்க! வீட்ல யாரும் வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க!

- Advertisement -

பழம் பெரிதாகக் காய்ப்பதற்கு முன் சிறிய பிஞ்சாக இருக்கும்போதே சமைத்து சாப்பிடும் பழக்கம் நம் தமிழர்களிடையே உண்டு. லேசான துவர்ப்புடன் இருக்கும் பலா பிஞ்சு ஏராளமான மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. சரி இந்த ருசியான கேரளா பலாக்காய் கிரேவி எப்படி செய்வதன்று பார்க்கலாம் வாருங்கள்.

Print
No ratings yet

பலாக்காய் கிரேவி | Palakkai Gravy Recipe in Tamil

பலாப்பழ விதைகள் மாவுச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டின் நல்ல மூலமாகும், மேலும் இது ஆரோக்கியமான புரதங்களின் மூலமாகும், குடல் சீராக செயல்பட உதவுகிறது, தோல் மற்றும் கூந்தலுக்கும் சிறந்தது. கோடைகாலத்தில் பலாப்பழம் மற்றும் பலாக்காய் அதிகம் கிடைக்கும். இந்த பழத்தைப் பார்த்தாலே நா ஊறும். அதேப் போன்று அதன் காயை சமைத்து சாப்பிட்டாலும், சுவையாக இருக்கும்.பலாப்பழம் பொரியல் ரெசிபி , வேகவைத்த சாதம் மற்றும் தயிர் சேமியா ரெசிபி ஆகியவற்றுடன் பாலக்கோட்டை குழம்பு ரெசிபியை வாரநாள் மதிய உணவாக பரிமாறவும்.
Prep Time15 minutes
Active Time20 minutes
Total Time35 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian, tamilnadu
Keyword: raw jackfruit gravy
Yield: 5 People
Calories: 940kcal

Equipment

 • 1 குக்கர்
 • 1 கடாய்
 • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

 • 1 பலாக்காய்
 • 1 நறுக்கிய பெரிய வெங்காயம்
 • 1 நறுக்கிய தக்காளி
 • 3 பச்சைமிளகாய்  
 • 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
 • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்  
 • 2 டீஸ்பூன் மல்லித்தூள்
 • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
 • 1/2 கப் தேங்காய் துருவல்
 • 2 டீஸ்பூன் எலஎலுமிச்சை சாறு
 • 1 டீஸ்பூன் சோம்பு
 • 1/4 கப் மோர்
 • 1 பட்டை
 • 1 கைப்பிடி கறிவேப்பிலை
 • கொத்தமல்லி இலை சிறிதளவு
 • உப்பு சிறிதளவு
 • எண்ணெய் தேவையானளவு

செய்முறை

 • பலாக்காயை தோல் சீவி துண்டுகளாக நறுக்கி மோர் கலந்த தண்ணீரில் குக்கரில் சேர்த்து வேகவிடவும்.
 • 4 விசில் விட்டு வேக வைத்து தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும்
 • அதே குக்கரில் 4 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை , பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
 • பொடியாக அறிந்த வெங்காயம் தக்காளியை சேர்த்து மிதமான தீயில் நன்கு வதக்கி விடவும்.
 • பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மீண்டும் வதக்கி மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும்.
 • இப்போது ஒரு கப் அளவு தண்ணீர் விட்டு காய்க்கு தேவையான உப்பு சேர்த்து மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.
 • இப்போது தேங்காய் துருவலுடன் 1tspn சோம்பு சேர்த்து நன்கு நைசாக விழுதாக அரைக்கவும். இதனை காயுடன் சேர்க்கவும்.
 • மீண்டும் குறைந்த தணலில் 10 முதல் 15 நிமிடங்கள் வைத்திருந்து எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கலந்து சாதத்துடன் சூடாக பரிமாறவும்.

Nutrition

Serving: 700g | Calories: 940kcal | Protein: 2.4g | Fat: 3g | Saturated Fat: 0.43g | Potassium: 499mg | Fiber: 2.6g