சூப்பரான மாங்காய் இனிப்பு தொக்கு இப்படி வீட்டிலயே செஞ்சு பாருங்க! மாம்பழ சீசன் வேறு வந்துவிட்டது..!
கோடை காலம் வந்து விட்டது. எனவே மாம்பழம் சீசன் என்பதால் உங்களுக்கு தாராளமாக கிடைக்கும். இதற்காக நீங்கள் தேடி தேடி அலைய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மாங்காயை அப்படியே எடுத்தால் புளிப்புச் சுவையுடன் சிறந்த டேஸ்ட்டை கொடுக்கும். இதுவே பழுத்த மாம்பழம் என்றால் நீங்கள் தித்திக்கும் சு
கோடை காலம் வந்து விட்டது. எனவே மாம்பழம் சீசன் என்பதால் உங்களுக்கு தாராளமாக கிடைக்கும். இதற்காக நீங்கள் தேடி தேடி அலைய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மாங்காயை அப்படியே எடுத்தால் புளிப்புச் சுவையுடன் சிறந்த டேஸ்ட்டை கொடுக்கும். இதுவே பழுத்த மாம்பழம் என்றால் நீங்கள் தித்திக்கும் சுவையை பெற முடியும். சத்து நிறைந்த மாங்காய், பெயரைக் கேட்டாலே நாவில் எச்சில் ஊரும். அது மாங்காயின் குணம்.”மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும்” என்பது பழமொழி. உணவில் பல விதமாக இந்த மாங்காயைப் பயன்படுத்தலாம். மாங்காய் என்றாலே எல்லோருக்கும் உடனே நினைவில் வருவது ஊறுகாய் தான். பொதுவாக மாங்காய் நம் நோய் எதிரிப்பு சக்தியை அதிகரிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர்.
மாங்காய் ஊறுகாய், மாங்காய் பச்சடி, மாங்காய் சாம்பார் என மாங்காயை வைத்து பல ரெசிபிக்களை செய்திருப்போம். இந்த முறை மாங்காயை வைத்து இனிப்பு தொக்கு எப்படி செய்வதென்று பார்க்கலாம். இந்த இனிப்பான மாங்காய் தொக்கு அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும். சுவையும் அலாதியானது. ஒருமுறை சுவைத்து விட்டால் அதன் சுவை நாவிலே தங்கிவிடும். அனைத்து வெரைட்டி ரைஸ், மீல்ஸ், சப்பாத்தி உள்ளிட்ட டிஃபன் அயிட்டங்களுடனும் சேர்த்து சாப்பிடலாம். இதை ஒரு மாதம் வரை வைத்து கொள்ளலாம். சாண்விட்ச்களிலும் ஸ்பிரெட்டாக பயன்படுத்தலாம். ஆனால் இதன் சுவையால் உங்கள் வீட்டில் எவ்வளவு செய்தாலும் சில நாட்களிலேயே காலியாகிவிடும். புளிப்பு, உப்பு, காரம், இனிப்பு சேர்ந்து மிக மிக சுவையாக இருக்கும் இந்த இனிப்பு மாங்காய் தொக்கு.
இதனையும் படியுங்கள் : அடுத்தமுறை மாங்காய் வாங்கினால் அவசியம் ருசியான மாங்காய் மசியல் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!