அடுத்தமுறை மாங்காய் வாங்கினால் அவசியம் ருசியான மாங்காய் மசியல் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

- Advertisement -

மாங்காய் சீசன் முடிவுற்றாலும் சரி, மாங்காய் மீது இருக்கும் கிரேஸூக்கு குறைச்சலே இல்லை. மாங்காயை எந்த வகையில் கொடுத்தாலும் ருசித்து சாப்பிடும் மக்களுக்கான சூப்பர் டிஷ் இது. மாங்காய் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். காரணம் அதிலிருக்கும் புளிப்பு சுவை தான். புளிப்பு, காரம் எல்லாம் சேர்த்து சமைத்தால் எப்படி இருக்கும். கண்டிப்பாக அன்றைக்கு உங்க நாவிற்கு விருந்து தான். மாங்காயில் அனைவரும் ஊறுகாய் செய்துதான் பார்த்திருப்போம். ஆனால் மாங்காயில் சுவையான மாங்காய் மசியல் எப்படி செய்யலாம் என்று தெரிந்துக்கொள்ளுவோம். இந்த மாங்காய் மசியல் உங்களுக்கு காலை உணவாகவும் நீங்கள் செய்து உண்ணலாம். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவாகவும் கொடுத்து விடலாம்.

-விளம்பரம்-

இந்த மசியல் தமிழர்களின் அற்புதத்தயாரிப்பு என்றே சொல்லலாம். மாங்காய் மருத்துவ குணம் நிறைந்தது, பெரும்பாலானோர் வீட்டில் அடிக்கடி மாங்காய் பயன்படுத்தப்படுகிறது. தினமும் சாம்பார், ரசம், புளிக்குழம்பு, சாப்பிட்டு அலுத்துப் போய்விட்டதா. இனி மாங்காய் வைத்து ஒரு மசியல் சுலபமாக எப்படி செய்வது, என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொண்டு உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இது போன்று ஒரு முறை செய்து கொடுத்து பாருங்க!! மசியல் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவாங்க, குறிப்பாக குழந்தைகள். இதனை சூடான சாதம், சப்பாத்தி, புல்கா போன்றவற்றிற்கு வைத்து சாப்பிடலாம். இதனை வளரும் குழந்தைகளுக்கு சிறிது நெய் சேர்த்து சாதத்தில் பிசைந்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

- Advertisement -
Print
No ratings yet

மாங்காய் மசியல் | Mangai Masiyal Recipe In Tamil

மாங்காய் சீசன் முடிவுற்றாலும் சரி, மாங்காய் மீது இருக்கும் கிரேஸூக்கு குறைச்சலே இல்லை. மாங்காயை எந்த வகையில் கொடுத்தாலும் ருசித்து சாப்பிடும் மக்களுக்கான சூப்பர் டிஷ் இது. மாங்காய் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். காரணம் அதிலிருக்கும் புளிப்பு சுவை தான். புளிப்பு, காரம் எல்லாம் சேர்த்து சமைத்தால் எப்படி இருக்கும். கண்டிப்பாக அன்றைக்கு உங்க நாவிற்கு விருந்து தான். மாங்காயில் அனைவரும் ஊறுகாய் செய்துதான் பார்த்திருப்போம். ஆனால் மாங்காயில் சுவையான மாங்காய் மசியல் எப்படி செய்யலாம் என்று தெரிந்துக்கொள்ளுவோம். இந்த மாங்காய் மசியல் உங்களுக்கு காலை உணவாகவும் நீங்கள் செய்து உண்ணலாம். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவாகவும் கொடுத்து விடலாம். இந்த மசியல் தமிழர்களின் அற்புதத்தயாரிப்பு என்றே சொல்லலாம்.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Mangai Masiyal
Yield: 4 People
Calories: 60kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 குக்கர்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 மாங்காய்
  • 1 தக்காளி
  • 1/4 கப் துவரம் பருப்பு
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்  
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 2 பச்சை மிளகாய்
  • உப்பு தேவையான அளவு

தாளிக்க :

  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் உளுந்து
  • 2 வர‌ மிளகாய்
  • 1 தக்காளி
  • 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • கொத்தமல்லி தழை சிறிதளவு

செய்முறை

  • முதலில் மாங்காய்‌‌ மற்றும் தக்காளியை சுத்தம் செய்து சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின் துவரம் பருப்பை நன்கு கழுவி அதனுடன் மஞ்சள் தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஊற வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு குக்கரை அடுப்பில் வைத்து ஊறவைத்த பருப்பு, மாங்காய், தக்காளி, மிளகாய் தூள் சேர்த்து குக்கரை மூடி, 2 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து ‌எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுந்தம் பருப்பு, மிளகாய், தக்காளி, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.
  • பின் இதனை பருப்பில்‌ சேர்த்து நன்கு மசித்து விடவும். பிறகு கொத்தமல்லி தழையை தூவி நன்கு கலந்து பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான, சுலபமான மாங்காய் மசியல் தயார்.

Nutrition

Serving: 350g | Calories: 60kcal | Carbohydrates: 15g | Protein: 5.8g | Fat: 1.4g | Sodium: 30mg | Potassium: 168mg | Fiber: 1.6g | Vitamin A: 76IU | Vitamin C: 60.1mg | Calcium: 14mg | Iron: 1.3mg

இதனையும் படியுங்கள் : ருசியான மாங்காய் தக்காளி சாதம் இப்படி ஒரு தரம் செய்து பாருங்களேன்! திரும்ப திரும்ப செய்து சாப்பிட தோன்றும்!