Home சைவம் சூப்பரான மாங்காய் இனிப்பு தொக்கு இப்படி வீட்டிலயே செஞ்சு பாருங்க! மாம்பழ சீசன் வேறு வந்துவிட்டது..!

சூப்பரான மாங்காய் இனிப்பு தொக்கு இப்படி வீட்டிலயே செஞ்சு பாருங்க! மாம்பழ சீசன் வேறு வந்துவிட்டது..!

கோடை காலம் வந்து விட்டது. எனவே மாம்பழம் சீசன் என்பதால் உங்களுக்கு தாராளமாக கிடைக்கும். இதற்காக நீங்கள் தேடி தேடி அலைய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மாங்காயை அப்படியே எடுத்தால் புளிப்புச் சுவையுடன் சிறந்த டேஸ்ட்டை கொடுக்கும். இதுவே பழுத்த மாம்பழம் என்றால் நீங்கள் தித்திக்கும் சுவையை பெற முடியும். சத்து நிறைந்த மாங்காய், பெயரைக் கேட்டாலே நாவில் எச்சில் ஊரும். அது மாங்காயின் குணம்.”மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும்” என்பது பழமொழி. உணவில் பல விதமாக இந்த மாங்காயைப் பயன்படுத்தலாம். மாங்காய் என்றாலே எல்லோருக்கும் உடனே நினைவில் வருவது ஊறுகாய் தான். பொதுவாக மாங்காய் நம் நோய் எதிரிப்பு சக்தியை அதிகரிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர்.

-விளம்பரம்-

மாங்காய் ஊறுகாய், மாங்காய் பச்சடி, மாங்காய் சாம்பார் என மாங்காயை வைத்து பல ரெசிபிக்களை செய்திருப்போம். இந்த முறை மாங்காயை வைத்து இனிப்பு தொக்கு எப்படி செய்வதென்று பார்க்கலாம். இந்த இனிப்பான மாங்காய் தொக்கு அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும். சுவையும் அலாதியானது. ஒருமுறை சுவைத்து விட்டால் அதன் சுவை நாவிலே தங்கிவிடும். அனைத்து வெரைட்டி ரைஸ், மீல்ஸ், சப்பாத்தி உள்ளிட்ட டிஃபன் அயிட்டங்களுடனும் சேர்த்து சாப்பிடலாம். இதை ஒரு மாதம் வரை வைத்து கொள்ளலாம். சாண்விட்ச்களிலும் ஸ்பிரெட்டாக பயன்படுத்தலாம். ஆனால் இதன் சுவையால் உங்கள் வீட்டில் எவ்வளவு செய்தாலும் சில நாட்களிலேயே காலியாகிவிடும். புளிப்பு, உப்பு, காரம், இனிப்பு சேர்ந்து மிக மிக சுவையாக இருக்கும் இந்த இனிப்பு மாங்காய் தொக்கு.

Print
No ratings yet

மாங்காய் இனிப்பு தொக்கு | Raw Mango Sweet Thokku Recipe In Tamil

கோடை காலம் வந்து விட்டது. எனவே மாம்பழம் சீசன் என்பதால் உங்களுக்கு தாராளமாக கிடைக்கும். இதற்காக நீங்கள் தேடி தேடி அலைய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மாங்காயை அப்படியே எடுத்தால் புளிப்புச் சுவையுடன் சிறந்த டேஸ்ட்டை கொடுக்கும். இதுவே பழுத்த மாம்பழம் என்றால் நீங்கள் தித்திக்கும் சுவையை பெற முடியும். சத்து நிறைந்த மாங்காய், பெயரைக் கேட்டாலே நாவில் எச்சில் ஊரும். அது மாங்காயின் குணம்.”மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும்” என்பது பழமொழி. உணவில் பல விதமாக இந்த மாங்காயைப் பயன்படுத்தலாம். மாங்காய் ஊறுகாய், மாங்காய் பச்சடி, மாங்காய் சாம்பார் என மாங்காயை வைத்து பல ரெசிபிக்களை செய்திருப்போம். இந்த முறை மாங்காயை வைத்து இனிப்பு தொக்கு எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Thokku
Cuisine: Indian
Keyword: Raw Mango Sweet Thokku
Yield: 4 People
Calories: 99kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 பெரிய மாங்காய்
  • 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் வெல்லம்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் வெந்தய பொடி
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள்

செய்முறை

  • முதலில் மாங்காயை நன்கு கழுவி விட்டு தோல் சீவி கேரட் துருவலில் துருவி வைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் ஒரு கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளித்து பின் மாங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.
  • மாங்காய் நன்றாக வதங்கி வந்த பிறகு அத்துடன் உப்பு, மிளகாய் தூள், பெருங்காயம், கறிவேப்பில்லை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • மிளகாய் தூள் வாசம் போகும் வரை நன்கு வதக்கவும். பின் மாங்காய் நன்றாக மசிந்து வரும்பொழுது வெல்லம் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
  • பின் எண்ணெய் பிரிந்து எல்லாம் ஓன்று சேர்ந்து அல்வா பதத்திற்கு ஒட்டாமல் வரும்பொழுது அடுப்பில் இருந்து இறக்கி கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான மாங்காய் இனிப்பு தொக்கு தயார். சப்பாத்தி, தோசை, அடை தோசை, சாதம் அனைத்திற்கும் தொட்டு சாப்பிட மிக அருமையாக இருக்கும்.

Nutrition

Serving: 300g | Calories: 99kcal | Carbohydrates: 2.5g | Protein: 4.1g | Fat: 1.6g | Sodium: 4mg | Potassium: 24mg | Fiber: 2.6g | Sugar: 2.5g | Vitamin A: 76IU | Vitamin C: 60.1mg | Calcium: 14mg | Iron: 3.1mg

இதனையும் படியுங்கள் : அடுத்தமுறை மாங்காய் வாங்கினால் அவசியம் ருசியான மாங்காய் மசியல் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!