சுட சுட சாதத்துடன் சாப்பிட ருசியான பப்பாளிக்காய் பொரியல் இனி இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

பொதுவாக தினமும் உணவில் காய்கறிகளை சேர்த்து கொள்வது உடலுக்கு நல்லது. ஆனால் தினமும் ஒரே மாதிரியாக பொரியல்களை மாற்றி மாற்றி சாப்பிடுவது போல் உள்ளதா. அப்படியானால் வித்தியாசமாக இப்படி ஒரு பப்பாளிக்காய் பொரியல் செய்து சாப்பிட்டு பாருங்கள். பப்பாளி பழத்தில் வைட்டமின் சி நிறைந்திருப்பது

By Prem Kumar · 9/3/2024

பொதுவாக தினமும் உணவில் காய்கறிகளை சேர்த்து கொள்வது உடலுக்கு நல்லது. ஆனால் தினமும் ஒரே மாதிரியாக பொரியல்களை மாற்றி மாற்றி சாப்பிடுவது போல் உள்ளதா. அப்படியானால் வித்தியாசமாக இப்படி ஒரு பப்பாளிக்காய் பொரியல் செய்து சாப்பிட்டு பாருங்கள். பப்பாளி பழத்தில் வைட்டமின் சி நிறைந்திருப்பது போலவே பப்பாளி காயிலும் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. சுவையில் மட்டுமல்ல ஆரோக்கியத்திலும் தனித்துவம் வாய்ந்த பண்புகளைக் கொண்டது பப்பாளி காய். இதை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் என்ன மாதிரியான ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம். சுரைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய் போன்ற காய்கறிகளை போல நீர்ச்சத்து அதிகம் கொண்டது பப்பாளிக்காய்.

இதில் வைட்டமின் சி, பொட்டாசியம், இரும்புச்சத்து, ஃபோலேட் ஆகியவை நிறைந்திருக்கின்றன. இந்த காயை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் சாப்பிடலாம். இத்தகைய பயன்கள் நிறைந்துள்ள பப்பாளிக்காயை வைத்து ஒரு பொரியல் செய்து பாருங்கள் தட்டில் ஒரு பருக்கை கூட மிஞ்சாமல் போகும் அளவிற்கு அற்புதமான சுவையுடன் இருக்கும். வாரம் ஒரு முறை இந்த பப்பாளிக்காய் பொரியலை செய்து கொடுங்கள். அடுத்த நாளைக்கு என்ன பொரியல் செய்வது என்று சிந்தித்துக் கொண்டே இருப்பதற்கு பதிலாக வாரத்தில் ஒரு நாள் இது போன்று பொரியல் செய்து பாருங்கள் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளவருக்கும் பிடிக்கும்.

இதனையும் படியுங்கள் : மதியம் சுட சுட சோறுடன் சாப்பிட ருசியான வாழைக்காய் பொரியல் இப்படி செஞ்சி பாருங்க!

Recipes AMP · Quick view
View full