Home சைவம் சுட சுட சாதத்துடன் சாப்பிட ருசியான பப்பாளிக்காய் பொரியல் இனி இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

சுட சுட சாதத்துடன் சாப்பிட ருசியான பப்பாளிக்காய் பொரியல் இனி இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

பொதுவாக தினமும் உணவில் காய்கறிகளை சேர்த்து கொள்வது உடலுக்கு நல்லது. ஆனால் தினமும் ஒரே மாதிரியாக பொரியல்களை மாற்றி மாற்றி சாப்பிடுவது போல் உள்ளதா. அப்படியானால் வித்தியாசமாக இப்படி ஒரு பப்பாளிக்காய் பொரியல் செய்து சாப்பிட்டு பாருங்கள். பப்பாளி பழத்தில் வைட்டமின் சி நிறைந்திருப்பது போலவே பப்பாளி காயிலும் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. சுவையில் மட்டுமல்ல ஆரோக்கியத்திலும் தனித்துவம் வாய்ந்த பண்புகளைக் கொண்டது பப்பாளி காய். இதை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் என்ன மாதிரியான ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம். சுரைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய் போன்ற காய்கறிகளை போல நீர்ச்சத்து அதிகம் கொண்டது பப்பாளிக்காய்.

-விளம்பரம்-

இதில் வைட்டமின் சி, பொட்டாசியம், இரும்புச்சத்து, ஃபோலேட் ஆகியவை நிறைந்திருக்கின்றன. இந்த காயை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் சாப்பிடலாம். இத்தகைய பயன்கள் நிறைந்துள்ள பப்பாளிக்காயை வைத்து ஒரு பொரியல் செய்து பாருங்கள் தட்டில் ஒரு பருக்கை கூட மிஞ்சாமல் போகும் அளவிற்கு அற்புதமான சுவையுடன் இருக்கும். வாரம் ஒரு முறை இந்த பப்பாளிக்காய் பொரியலை செய்து கொடுங்கள். அடுத்த நாளைக்கு என்ன பொரியல் செய்வது என்று சிந்தித்துக் கொண்டே இருப்பதற்கு பதிலாக வாரத்தில் ஒரு நாள் இது போன்று பொரியல் செய்து பாருங்கள் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளவருக்கும் பிடிக்கும்.

Print
No ratings yet

பப்பாளிக்காய் பொரியல் | Raw Papaya Poriyal Recipe In Tamil

பொதுவாக தினமும் உணவில் காய்கறிகளை சேர்த்து கொள்வது உடலுக்கு நல்லது. ஆனால் தினமும் ஒரே மாதிரியாக பொரியல்களை மாற்றி மாற்றி சாப்பிடுவது போல் உள்ளதா. அப்படியானால் வித்தியாசமாக இப்படி ஒரு பப்பாளிக்காய் பொரியல் செய்து சாப்பிட்டு பாருங்கள். பப்பாளி பழத்தில் வைட்டமின் சி நிறைந்திருப்பது போலவே பப்பாளி காயிலும் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. சுவையில் மட்டுமல்ல ஆரோக்கியத்திலும் தனித்துவம் வாய்ந்த பண்புகளைக் கொண்டது பப்பாளிகாய். இதில் வைட்டமின் சி, பொட்டாசியம், இரும்புச்சத்து, ஃபோலேட் ஆகியவை நிறைந்திருக்கின்றன. இந்த காயை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் சாப்பிடலாம். இத்தகைய பயன்கள் நிறைந்துள்ள பப்பாளிக்காயை வைத்து ஒரு பொரியல் செய்து பாருங்கள் தட்டில் ஒரு பருக்கை கூட மிஞ்சாமல் போகும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Raw Papaya Poriyal
Yield: 4 People
Calories: 62kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 வாணலி

தேவையான பொருட்கள்

  • 1 பப்பாளிக்காய்
  • 1/4 கப் தேங்காய்
  • 4 பச்சை மிளகாய்
  • 1 கொத்து கறிவேப்பில்லை
  • உப்பு தேவையான அளவு
  • கடலை எண்ணெய் தேவையான அளவு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் உளுந்தம்பருப்பு
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்

செய்முறை

  • முதலில் பாப்பாளிக்காயை நன்கு கழுவி தோல் நீக்கி விட்டு, கேரட் துருவலில் துருவி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், சீரகம், பச்சை மிளகாய் சேர்ந்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பில்லை சேர்த்து தாளிக்கவும்.
  • பின் அதில் துருவி வைத்திருக்கும் பாப்பாளிக்காயை சேர்த்து அதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து தண்ணீர் விடாமல் மூடி போட்டு வேக விடவும்.
  • அதன்பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காயை பாப்பாளிக்காயுடன் சேர்த்து நன்கு கிளறி இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.
  • அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான பப்பாளிக்காய் பொரியல் தயார். இது பார்க்கும்போதும் முட்டைகோஸ் பொரியல் போல் தான் இருக்கும். இந்த பாப்பாளிக்காய் பொரியலை அனைத்து சாதத்துடனும் சேர்த்து சுவைக்கலாம்.

Nutrition

Serving: 250g | Calories: 62kcal | Carbohydrates: 1.6g | Protein: 7g | Fat: 1.4g | Sodium: 6mg | Potassium: 182mg | Fiber: 2.5g | Vitamin A: 104IU | Vitamin C: 61.8mg | Calcium: 20mg

இதனையும் படியுங்கள் : மதியம் சுட சுட சோறுடன் சாப்பிட ருசியான வாழைக்காய் பொரியல் இப்படி செஞ்சி பாருங்க!