- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- poriyal
தினமும் ஒவ்வொரு வீட்டிலும் பல வித உணவுகளை சமைக்கின்றனர். ஆனால் ஒரு சில நாட்களில் ஒவ்வொரு காய்கறிகள் கிடைப்பதில்லை. எந்த சீஸனில் எந்த காய்கறிகள் கிடைக்கின்றதோ அதனை வாங்கி சமைப்பதுதான் அனைவரின் வழக்கமாக இருக்கும். ஆனால் வாழைக்காய், வாழைப்பழம் இவை அனைத்தும் எப்பொழுதும் கிடைக்கும் பொருட்களாகும். எனவே இந்த வாழைக்காய் மிகவும் விலை குறைவாக தான் இருக்கும். இதில் பஜ்ஜி, , வறுவல் என பல வகை உணவுகளை சமைக்க முடியும். எனவே இந்த வாழைக்காயில் செய்யக்கூடிய இந்த பொரியலும் மிகவும் சுவையாக இருக்கும். இதனை இட்லி, தோசையுடன் அல்லது சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட மிகவும் அற்புதமான சுவையில் இருக்கும்.
வாழைக்காய் ஒரு நல்ல ருசியான உணவு தான் என்றாலும் இது பெரும்பாலும் யாருக்கும் பிடிப்பதில்லை. ஒரு சிலருக்கு இதில் வாய்வுத் தொல்லை இருக்கும் என்பதால் சாப்பிட மாட்டார்கள். ஒரு சிலரோ இது ப்ரை ஆக செய்தால் சாப்பிடுவார்கள் மற்றபடி சாப்பிட மாட்டார்கள். ஆனால் இந்த முறையில் வாழைக்காய் பொரியல் செய்து கொடுத்தால் பிடிக்காது என்பவர்கள் கூட நிச்சயமாக கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். வாங்க இந்த வாழைக்காய் பொரியல் ரெசிபி பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Ingredients
Method
வாழைக்காயை கழுவி , தோல் சீவி . சிறுது கனமாக வெட்டி கொள்ளவும்.
பாத்திரத்தில் மஞ்சள் சிறிது உப்பு சேர்த்து , கொதித்ததும், வாழைக்காயை சேர்த்து வேகா விடவும்..
வெந்ததும், தனியாக தெண்ணீரில் இருந்து எடுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் கடுகு போட்டு, கடுகு வெடித்ததும் உளுத்தம்பருப்பு போட்டு, அது சிவந்ததும் கறிவேப்பிலை போடவும்.
வெந்தகாயைச் சேர்த்து வதக்கவும். கொஞ்சம் கழித்து அரைத்த மசாலா சேர்த்து, சுருள வதங்கியதும் இறக்கவும்






