நீங்கள் ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் ரசம் செய்ய ஆசைப்படுபவரா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான்!!

சைவ உணவோ அல்லது அசைவ உணவோ எதுவாக இருந்தாலும் கடைசியில் ரசம் சாப்பிட்டால் மட்டுமே மனநிறைவாக இருக்கும். மேலும் ரசமானது நாம் அதிகளவு அஜீரணமாகாத உணவுகளை சாப்பிட்டாலும் அந்த உணவுகளை ஜீரணம் ஆகிவிடும் பண்பு கூடுதல் சிறப்பு ஆகும். நமது சமையலறையில் எளிதாகக் கிடைக்கும் இந்திய மசாலாப் பொருட

By ·

சைவ உணவோ அல்லது அசைவ உணவோ எதுவாக இருந்தாலும் கடைசியில் ரசம் சாப்பிட்டால் மட்டுமே மனநிறைவாக இருக்கும். மேலும் ரசமானது நாம் அதிகளவு அஜீரணமாகாத உணவுகளை சாப்பிட்டாலும் அந்த உணவுகளை ஜீரணம் ஆகிவிடும் பண்பு கூடுதல் சிறப்பு ஆகும். நமது சமையலறையில் எளிதாகக் கிடைக்கும் இந்திய மசாலாப் பொருட்களிலிருந்து ஒரு சிம்பிளான மற்றும் ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் பூண்டு ரசம் செய்முறையை இங்கு பார்க்க உள்ளோம். இந்த அற்புதமான ரசம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுவதோடு, வாயு தொல்லை, வயிறு உபாதைகளுக்கு தீர்வு தருகிறது. மேலும், ஜலதோஷம், இருமல், சளி உள்ளிட்ட நோய்களை எதிர்த்துப் போராடுகிறது.

இந்த ரசத்தில் சேர்க்கப்படும் பொருட்களான மிளகு, பெருங்காயம், மஞ்சள் மற்றும் கறிவேப்பிலை பூஞ்சை நோய்களை அடித்து விரட்டுகிறது. தற்போது மழைக்காலம் ஆரம்பிக்க உள்ளது என்பதால் இந்த சுவை மிகுந்த ரசம் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை நமது உடலுக்கு அள்ளித்தரும். ஏனெனில் பூண்டு அவ்வளவு மருத்துவ பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த பூண்டு கொண்டு பல்வேறு ரெசிபிக்களை நாம் செய்து சாப்பிடலாம். அதுவும் நீங்கள் ரச பிரியர் என்றால், பூண்டு ரசம் செய்து சாப்பிடுவது இன்னும் நல்லது. பூண்டு பற்களை அதிகம் தட்டிப் போட்டு ரசம் செய்யும் போது, அதன் மணமும், சுவையும் ஆளையே மயக்கிவிடும்.

இதனையும் படியுங்கள் : மண மணக்கும் மட்டன் தண்ணீர் ரசம் இப்படி செய்து பாருங்கள் சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்!!!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை