சைவ உணவோ அல்லது அசைவ உணவோ எதுவாக இருந்தாலும் கடைசியில் ரசம் சாப்பிட்டால் மட்டுமே மனநிறைவாக இருக்கும். மேலும் ரசமானது நாம் அதிகளவு அஜீரணமாகாத உணவுகளை சாப்பிட்டாலும் அந்த உணவுகளை ஜீரணம் ஆகிவிடும் பண்பு கூடுதல் சிறப்பு ஆகும். நமது சமையலறையில் எளிதாகக் கிடைக்கும் இந்திய மசாலாப் பொருட்களிலிருந்து ஒரு சிம்பிளான மற்றும் ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் பூண்டு ரசம் செய்முறையை இங்கு பார்க்க உள்ளோம். இந்த அற்புதமான ரசம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுவதோடு, வாயு தொல்லை, வயிறு உபாதைகளுக்கு தீர்வு தருகிறது. மேலும், ஜலதோஷம், இருமல், சளி உள்ளிட்ட நோய்களை எதிர்த்துப் போராடுகிறது.
இந்த ரசத்தில் சேர்க்கப்படும் பொருட்களான மிளகு, பெருங்காயம், மஞ்சள் மற்றும் கறிவேப்பிலை பூஞ்சை நோய்களை அடித்து விரட்டுகிறது. தற்போது மழைக்காலம் ஆரம்பிக்க உள்ளது என்பதால் இந்த சுவை மிகுந்த ரசம் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை நமது உடலுக்கு அள்ளித்தரும். ஏனெனில் பூண்டு அவ்வளவு மருத்துவ பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த பூண்டு கொண்டு பல்வேறு ரெசிபிக்களை நாம் செய்து சாப்பிடலாம். அதுவும் நீங்கள் ரச பிரியர் என்றால், பூண்டு ரசம் செய்து சாப்பிடுவது இன்னும் நல்லது. பூண்டு பற்களை அதிகம் தட்டிப் போட்டு ரசம் செய்யும் போது, அதன் மணமும், சுவையும் ஆளையே மயக்கிவிடும்.
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பூண்டு ரசம் | Restaurant Garlic Rasam Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 20 பல் பூண்டு
- 3 தக்காளி
- 4 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு
- 3 பச்சை மிளகாய்
- 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
- 1/2 கப் புளி கரைசல்
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1 டீஸ்பூன் தனியா தூள்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 2 கொத்து கறிவேப்பிலை
- கொத்தமல்லி சிறிதளவு
- 2 வர மிளகாய்
அரைக்க:
- 2 டீஸ்பூன் துவரம் பருப்பு
- 1/2 டீஸ்பூன் மல்லி
- 1 டீஸ்பூன் மிளகு
- 6 வர மிளகாய்
- 1 டீஸ்பூன் சீரகம்
செய்முறை
- முதலில் துவரம் பருப்பை தண்ணீரில் நன்கு அலசி விட்டு ஒரு குக்கரில் சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு குழைய வேக வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றாமல் தனியா, துவரம் பருப்பு, மிளகு, சீரகம், மிளகாய், ஆகியவற்றை சேர்த்து சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- பின் இவை ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பின் பூண்டை தட்டி வைத்துக் கொள்ளவும்.
- பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், மிளகாய், கடுகு, பச்சை மிளகாய், இடித்த பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் புளிக்கரைசலை சேர்த்து மூடி வைத்து கொதிக்க விடவும்.
- பின் புளி வாசனை போனதும் வேகவைத்த பருப்பை சேர்த்து ஒரு கொதி விடவும். அதன்பிறகு அரைத்து வைத்துள்ள பொடி, பெருங்காயத்தூள், தேவையான அளவு தண்ணீர் விட்டு நுரைத்து வந்ததும் கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பூண்டு ரசம் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : மண மணக்கும் மட்டன் தண்ணீர் ரசம் இப்படி செய்து பாருங்கள் சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்!!!