- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- LUNCH
விடுமுறை நாட்களில் தான் நமக்கு பிடித்ததை சமைத்து சாப்பிட நேரம் கிடைக்கும். அதிலும் நீங்கள் அசைவ பிரியர் என்றால், பல வித்தியாசமான அசைவ ரெசிபிக்களை வீட்டிலேயே செய்து சுவைக்கலாம். இன்று உங்கள் வீட்டில் மட்டன் செய்ய நினைத்துக் கொண்டிருந்தால், அந்த மட்டனைக் கொண்டு சிறிது தண்ணீர் ரசம் செய்து சாப்பிடுங்கள். இந்த மட்டன் தண்ணீர் ரசத்தை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது அப்படியே சூப் போன்றும் குடிக்கலாம்.
குறிப்பாக குழந்தைகளுக்கு மட்டன் தண்ணீர் ரசம் செய்து கொடுப்பது நல்லது. இதனால் மட்டனில் உள்ள அனைத்து சத்துக்களும் உடலில் சேரும். வீட்டில் யாருக்கேனும் சளி, இருமல் பிரச்சனை ஏற்பட்டால் உடனே செய்து தருவது காரசாரமான ரசம் தான். காரமாக இருக்கும் அதே சமயத்தில் சத்தானதாகவும் செய்து தரவே நாம் நினைப்போம். உணவுச் சமநிலையைப் பேணவும், உடல் நலத்தை பாதுகாப்பதிலும் இதற்கு அளப்பரிய பங்கு இருக்கிறது. உடல் நிலை சரியில்லாத நேரங்களில் இப்படி ஒரு மட்டன் தண்ணீர் ரசம் செய்து கொடுத்தால் சோர்வாக இருந்த நோயாளிகள் கூட சுறுசுறுப்பாக எழுந்து அமர்ந்து விடுவார்கள்.
எனவே அந்தமாதிரியான காலகட்டங்களில் நாம் மட்டன் தண்ணீர் ரசம் செய்து தரலாம். மேலும் இந்த மட்டன் தண்ணீர் ரசம் நமது உடலுக்கு வலுவையும் சேர்க்கும். அசைவம் சாப்பிடுபவர்களின் விருப்பமான மட்டன் சமையல் வகையில் மட்டன் ரசம் ஒன்றாகும், இது எவ்வளவு அதிகமாக பாராட்டப்படுகிறதோ, செய்வதும் அவ்வளவு சுலபமானது. நீங்கள் தக்காளி சூப், சிக்கன் சூப் சாப்பிட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த மட்டன் தண்ணீர் ரசத்தின் ருசியே வேறு. இந்த ரசத்தை நீங்கள் சூப்பாகவும் குடிக்கலாம் அல்லது சூடான சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம். எனவே வீட்டிலேயே எளிய செய்முறையில் மட்டன் தண்ணீர் ரசம் எப்படி செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : இந்த வாரம் ஆட்டுக்கால் வாங்கி ஒரு தடவை இப்படி ருசியான ஆட்டுக்கால் ரசம் செஞ்சு சாப்பிட்டு பாருங்க!
Ingredients
Method
முதலில் மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்து விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி குக்கரில் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, பிரிஞ்சி இலை, இலவங்கம், கல் பாசி, பட்டை சேர்த்து தாளிக்கவும்.
பின் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பின் மஞ்சள் தூள் சேர்த்து அதனுடன் வேக வைத்த மட்டன் தண்ணீரை சேர்த்து கலந்து விடவும்.
பின் அதனுடன் மிளகாய் தூள், மல்லித்தூள், உப்பு, பூண்டு, சீரகம், மிளகு ஆகியவற்றை இடித்து ரசத்தில் சேர்த்து கொதிக்க விடவும்.
பின் மட்டன் ரசம் கொதித்ததும் சிறிதளவு தேங்காய் பால் மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு கொத்தமல்லி இலை தூவி அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான மட்டன் தண்ணீர் ரசம் தயார்.






