நம்ம வீட்ல ஒரு ஆடு வாங்கினால் அந்த ஆடுல இருக்கிற ஒவ்வொரு பாகமும் நம்ம உடம்புல இருக்கக்கூடிய ஒவ்வொரு பிரச்சனைக்கும் நல்லது. அந்த வகையில் எல்லாரும் ஆட்டுக்கால் சூப் குடித்து இருப்போம். ஆனா இன்னைக்கு கொஞ்சம் டிஃபரண்டா ஆட்டுக்கால் ரசம் செய்ய போறோம். தக்காளி ரசம் மிளகு ரசம், நெல்லிக்காய் ரசம் அப்படின்னா விதவிதமான ரசம் செஞ்சு சாப்பிட்டு இருப்போம். ஆனா இந்த மாதிரி ஒரு ஆட்டுக்கால் ரசம் நீங்க இதுவரைக்கும் செஞ்சு சாப்பிட்டு இருக்க மாட்டீங்க அந்த அளவுக்கு ஒரு சூப்பரான டேஸ்டாக இந்த ஆட்டுக்கால் ரசம் இருக்கும்.
குழந்தைகள் இருந்த பெரியவங்க வரைக்கும் இந்த ஆட்டுக்கால் ரசம் செஞ்சு கொடுத்து குடிக்க வச்சா போதும் அவங்களுக்கு எலும்பு சம்பந்தமான பிரச்சினைகளே வராது. வாய்ப்புண் வயிற்றுப்புண் போன்ற எல்லாவிதமான பிரச்சனைகளும் சரியாகிவிடும். ஒரு தடவை இந்த ஆட்டுக்கால் ரசம் செஞ்சு உங்க குழந்தைகளுக்கு கொடுத்துட்டா அதுக்கப்புறம் அவங்களை அடிக்கடி இல்ல ஆட்டுக்கால் ரசம் வேணும் அப்படின்னு கேட்பாங்க அந்த அளவுக்கு இந்த ஆட்டுக்கால் ரசத்தோட டேஸ்ட் அருமையா இருக்கும்.
இந்த ரசத்தை நம்ம சும்மாவே குடிக்கலாம் அப்படி இல்லன்னா சுடு சாதத்தில் போட்டு பிசைந்து குழந்தைகளுக்கு ஊட்டி விடலாம் நம்மளும் சாப்பிடலாம் டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும். இப்படி ஒரு ஆட்டுக்கால் ரசம் குடிச்சதே இல்லையே அப்படின்னா உங்க வீட்டுல எல்லாரும் வியந்து கேப்பாங்க கண்டிப்பா உங்கள பாராட்டவும் செய்வாங்க. நல்ல காரசாரமா மணக்க மணக்க இந்த ஆட்டுக்கால் ரசம் வச்சா பக்கத்து வீட்டுக்கும் சேர்த்து இதோட வாசனை போகும் அந்த அளவுக்கு ஒரு வாசனையான டேஸ்டான ரசம் தான் இந்த ஆட்டுக்கால் ரசம். இப்ப வாங்க இந்த ஆட்டுக்கால் ரசம் எப்படி சுவையா செய்றதுன்னு பார்க்கலாம்.
ஆட்டுக்கால் ரசம் | Aatu Kaal Rasam Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 4 ஆட்டுக்கால்
- 1 பெரிய வெங்காயம்
- 2 தக்காளி
- 10 சின்ன வெங்காயம்
- 1 துண்டு இஞ்சி
- 1 பச்சை மிளகாய்
- 1 பட்டை
- 2 கிராம்பு
- 2 ஏலக்காய்
- 1 பிரியாணிஇலை
- 4 பல் பூண்டு
- 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 டீஸ்பூன் மிளகு
- 1 கைப்பிடி அளவு கொத்தமல்லிஇலைகள்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் ஆட்டுக்கால்களை நன்கு சுத்தம் செய்து கழுவி எடுத்து இடித்து வைத்துக் கொள்ளவும்
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பெரிய வெங்காயம் போட்டு தாளித்து தக்காளியும் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும்.
- பிறகு இடித்து வைத்துள்ள ஆட்டுக்கால்களையும் போட்டு நன்கு கிளறவும். ஒரு மிக்ஸி ஜாரு சின்ன வெங்காயம் பூண்டு இஞ்சி கொத்தமல்லி இலைகள் பச்சை மிளகாய் பட்டை கிராம்பு,பிரியாணி இலை ஏலக்காய் போட்டு நன்றாக அரைத்து எடுக்கவும்
- அரைத்த விழுதினை ஆட்டுக்காலோடு சேர்த்து நன்றாக கிளறி தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் மற்றும்உப்பு சேர்த்து கிளறவும்.
- ஆட்டுக்கால் நன்றாக வெந்தவுடன் இறுதியாக சீரகம் மற்றும் மிளகாய் பொடி செய்து தூவி இறக்கினால் சுவையானஆட்டுக்கால் ரசம் தயார்.
Nutrition
இதையும் படியுங்கள் : காரசாரமா ருசியான மட்டன் கிரேவி இனி இப்படி செய்து பாருங்க! சாதம், இட்லி, தோசை , பூரி, சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்!