Home சைவம் பாரம்பரிய சுவையில் ருசியான அரிசி உளுந்தம் கஞ்சி இப்படி செஞ்சு குடிச்சு பாருங்க ஆரோக்கிய...

பாரம்பரிய சுவையில் ருசியான அரிசி உளுந்தம் கஞ்சி இப்படி செஞ்சு குடிச்சு பாருங்க ஆரோக்கிய சத்துக்கள் நிறைந்தது!

அரிசி உளுந்தம் கஞ்சி இது கிராமத்துல அதிகமா செய்யக்கூடிய ஒரு உணவு அப்படின்னு சொல்லலாம். பொதுவாக கிராமங்கள் எல்லாம் உணவு மூலமாவே எல்லா வியாதிகளுக்கும் மருந்து வச்சிருப்பாங்க. உணவே மருந்து அப்படின்னு சொல்லுவாங்க அது எல்லா கிராமங்களையும் கடைப்பிடிச்சிட்டு வர்றாங்க. அவங்க கரெக்டா இந்த நோய்க்கு இந்த மருந்து அப்படின்னு ஒரு லிஸ்ட் வச்சிருப்பாங்க. அந்த வகையில் நம்ம உடம்புல கை கால் வலி மூட்டு வலி இடுப்பு வலி அந்த பிரச்சனைகள் எல்லாத்துக்குமே இந்த அரிசி உளுத்தம் கஞ்சி வச்சு குடிச்சா சீக்கிரத்திலேயே சரியாகிவிடும்.

-விளம்பரம்-

குழந்தைகளுக்கு ஆரோக்கியமா ஏதாவது காலை உணவு கொடுக்கணும் அப்படின்னா இந்த அரிசி உளுந்தம் கஞ்சியை காய்ச்சிய அவங்களுக்கு கொடுக்கலாம் இது ரொம்பவே ஆரோக்கியமானது. பொதுவா பூப்பெய்த பெண்களுக்கு இந்த அரிசி உளுத்தம் கஞ்சி கொடுத்தோம் அப்படின்னா அவங்க பெரியவங்க ஆகுற வரைக்கும் அவங்களோட உடல் ரொம்பவே ஆரோக்கியமா இருக்கும்.

பூ பெய்த பெண்களுக்கு தான் இந்த அரிசி உளுத்தம் கஞ்சி கிராமங்களில் அதிகமாக கொடுப்பாங்க கிராமங்களில் மட்டும் இல்லாம எல்லா ஊர்ல இருக்கறவங்களும் இந்த முறையை பயன்படுத்தி குழந்தைகளுக்கு நம்ம ஆரோக்கியமான முறையில் உணவு செஞ்சு கொடுத்தோம் அப்படின்னா அவங்களுக்கு எல்லாம் முறைகளிலும்  ரொம்பவே ஆரோக்கியம் கிடைக்கும். இந்த அரிசி உளுந்தம் கஞ்சியும் குடிக்கிறதுக்கு ரொம்ப வெயிட் டேஸ்ட்டா இருக்கும் அதே சமயத்துல ரொம்ப வாசனையாகவும் இருக்கும். இந்த சுவையான சூப்பரான அரிசி உளுத்தம் கஞ்சி எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்.

Print
No ratings yet

அரிசி உளுந்தம் கஞ்சி | Rice Urad Kanji Recipe In Tamil

குழந்தைகளுக்கு ஆரோக்கியமா ஏதாவது காலை உணவு கொடுக்கணும் அப்படின்னா இந்த அரிசி உளுந்தம் கஞ்சியை காய்ச்சிய அவங்களுக்கு கொடுக்கலாம் இது ரொம்பவே ஆரோக்கியமானது. பொதுவா பூப்பெய்த பெண்களுக்கு இந்த அரிசி உளுத்தம் கஞ்சி கொடுத்தோம் அப்படின்னா அவங்க பெரியவங்க ஆகுற வரைக்கும் அவங்களோட உடல் ரொம்பவே ஆரோக்கியமா இருக்கும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Rice Urad Kanji
Yield: 4
Calories: 350kcal

Equipment

  • 1 பெரிய பவுள்
  • 1 அடி கனமான பாத்திரம்

தேவையான பொருட்கள்

  • 1 கப் அரிசி
  • 1/2 கப் உளுந்தம் பருப்பு
  • 6 பல் பூண்டு
  • 1 டீஸ்பூன் வெந்தயம்
  • 1 டீஸ்பூன் சுக்கு பொடி
  • 1/2 கப் தேங்காய் துருவல்
  • 1/2 லிட்டர் பால்
  • உப்பு தேவையானஅளவு

செய்முறை

  • முதலில் அரிசியையும் உளுந்தம் பருப்பையும் 10 நிமிடங்கள் ஊறவைத்து நன்கு கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அதனை ஒரு குக்கர் சேர்த்து அதனுடன் பூண்டு தேவையான அளவு உப்பு மற்றும் வெந்தயம் சேர்த்த ஐந்து கப் தண்ணீர் சேர்த்து ஐந்து விசில் விட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • அரிசி உளுந்த பருப்பும் நன்றாக வெந்தவுடன் அதனை நன்றாக மசித்து கொள்ள வேண்டும்.
  • அரை லிட்டர் பாலை நன்கு கொதிக்க வைத்து காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • அரிசி உளுந்தம் பருப்புடன் இந்த பாலை சேர்த்து அதனுடன் சுக்கு பொடி தேங்காய் துருவல் அனைத்தும் சேர்த்து நன்றாக கிளறி எடுத்தால் சுவையான சத்தான ஆரோக்கியமான அரிசி உளுந்தம் கஞ்சி தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 350kcal | Carbohydrates: 58.5g | Protein: 7g | Fat: 0.02g | Sodium: 3mg | Potassium: 54mg | Calcium: 20mg